பேச்சு:சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். வழிமாற்று உள்ளது. வேண்டாத குறியீடு. நீக்குங்கள். அல்லது விளக்கமாகச் சொல்லுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:23, 13 மார்ச் 2013 (UTC)

தற்பொது சரி செய்துள்ளேன். தவறை சுட்டியதற்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:59, 14 மார்ச் 2013 (UTC)

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் கட்டுரையைப் பாருங்கள். சரியான கட்டுரைச் செய்திகளைத் தொகுத்துக் காட்டியிருந்த சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் கட்டுரை அந்தச் செய்திகள் இல்லாமல் இக் கட்டுரையில் இணக்கப்பட்டிருக்கிறது. இக் கட்டுரையில் சில தவறான செய்திகள் உள்ளன. என்ன செய்யலாம்? இணைப்பில் மறைந்துபோன கட்டுரையைத் திறந்து பார்க்க முடியுமானால் திறந்து பாருங்கள. உண்மை விளங்கும். அனபுள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:18, 18 மார்ச் 2013 (UTC)

என்ன கொடுமை நிகழ்ந்துள்ளது ஐயா?. இது தான் நீங்கள் உருவாக்கிய கட்டுரையின் பதிப்பு. அதில் இருந்த செய்திகள் அனைத்தையும் இதில் சேர்த்துள்ள்ளேன். எதுவும் விட்டுப் போக வில்லை. “தவறான” செய்திகள் இருப்பின் தொகுத்து மாற்றி விடுங்கள். துறை அறிஞர் தாங்கள் தான். நான் இருந்த இரு கட்டுரைகளையும் ஒன்றாக சேர்த்துள்ளேன். இப்போது இதிலிருக்கும் தவறானவற்றை நீங்கள் நீக்கி விடலாம். --சோடாபாட்டில்உரையாடுக 01:01, 19 மார்ச் 2013 (UTC)

செங்கை பொதுவன் ஐயா கொடுமை எனக்கூறியது அநேகமாக புறநானூற்று பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனும், பதிற்றுப்பத்து உதியஞ்சேரலாதனும் வெவ்வேறு நபர்கள் என்று தமிழ் வரலாற்று உலகில் கருதுகோள் இருப்பதால் தான். ஆனால் இருவரும் ஒருவர் தான் எனக்கூறுவோரும் உண்டு. இக்கட்டுரையில் நான் சேர்த்த காலம் என்னும் உள் தலைப்பிலுள்ள குறிப்புகளை பார்த்தால் புரியும்.

இங்கு எக்கொடுமையும் நிகழவில்லை. அப்படியே விக்கிப்பீடியாவில் கொடுமையே நிகழ்ந்தாலும் தீர்க்க முடியாதது என்பது எதுவும் அல்ல. சங்ககாலம் என்றாலே இதைப்போல் பெயர்குழப்பம் உண்டு. இப்பகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் அதை புரிய வைக்கும். மேலும் இந்த கட்டுரையின் வடிவமைப்பில் எந்த சிக்கலும் இல்லை. அதனால் "வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்" என்னும் பகுப்பை நீக்கிவிட்டு "வரலாற்றுக் குழப்பமுள்ள கட்டுரைகளின் உரையாடல்கள்" என்னும் புதிய பகுப்பை சேர்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:31, 20 மார்ச் 2013 (UTC)

அன்புள்ள தொன்காசியாருக்கு வணக்கம். புறநானூறு, பதிற்றுப்பத்து காட்டும் இருவரும் ஒருவரே எனக்கொள்வதே சால்புடைத்து. அதில் எந்தப் பிழையும் இல்லை. புறப்புண் நாணி வடக்கிருந்த சேரமான் பெருஞ்சேரலாதனை இணைத்ததுதான் கொடுமை. இதனை நீக்கிவிட்டால் சரியாய்விடும். கட்டுரைகளை இணைக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை ஒப்புநோக்கம் என்பதை மனத்தில் கொள்வோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:44, 20 மார்ச் 2013 (UTC)

//புறப்புண் நாணி வடக்கிருந்த சேரமான் பெருஞ்சேரலாதனை இணைத்ததுதான் கொடுமை.//

பெருஞ்சேரல் உதியஞ்சேரல் வெவ்வேறு என்பதை சுட்டியதற்கு நன்றி. "இணைத்தது" ஏற்கனவே கட்டுரையில் இருந்தவற்றை தான். தவறானதை நீங்களே நீக்கியிருக்கலாமே. இது இணைத்ததனால் வந்த பிழை அல்ல. கட்டுரை எழுதியவரின் பிழை. மேலும் இதிலும் கொடுமை எதுவும் இல்லை. முதலில் கட்டுரையை எழுதியவர் தவறாக எழுதியிருந்தால் இரண்டாவது எழுதியவர் திருத்தலாம். அது கொடுமை என்பதை விட கடமை எனக்கொள்ளலாம்.

நான் நீங்கள் கூறியதை நீக்கி என் கடமையை செய்து விட்டேன். :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:05, 21 மார்ச் 2013 (UTC)

  • தென்காசியாருக்குப் பெரிதும் நன்றி. இணைந்து செயல்படுவோம். Together We Fit. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:18, 21 மார்ச் 2013 (UTC)