பேச்சு:சேரமான் ஜும்மா பள்ளிவாசல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



//இது கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது.//

//சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார்.//

//இந்த மசூதி முகம்மது நபியின் காலத்திலேயே(கி.பி. 05 மே 570ல்[1] ) கட்டப்பட்டது.//

என இக்கட்டுரையில் முரண்பாடான செய்திகள் கூறப்பட்டுள்ளன. எட்டாம் நூற்றாண்டில் சேரமான் அரசாண்டதாக இருந்தால் எவ்வாறு ஏழாம் நூற்றாண்டிலேயே இம்மசூதி கட்டப்பட்டிருக்கும்? அவர் எவ்வாறு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகம்மது நபியைச் சந்தித்திருக்க முடியும்? தகவல் அறிந்த யாரேனும் உதவுங்கள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:39, 25 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மலையாளக் கட்டுரையிலும் இதே போன்ற முரண்பாடுகள் இருக்கின்றன. பேச்சுப் பக்கத்தில் உரையாடியிருக்கின்றனர்.

அங்கிருந்து சில தகவல்கள்: 1.குஞ்ஞன் பிள்ளை எழுதியவை வரலாற்றில் இருந்து மாறுபடுகின்றன. எனவே, அவற்றை அவரின் சொந்த அபிப்ராயம் என குறிக்க வேண்டும்.

2.இவர் இறந்தது 748-இல், வாழ்ந்தது 90 ஆண்டுகள். அப்படியெனில் 658இல் பிறந்திருப்பார். 629-ஆம் ஆண்டில் எப்படி பணியாற்றியிருக்க முடியும்??

3. இயேசுவின் சீடாரான தாமஸ் (மலையாளத்தில் தோமஸ்லீஹா) கேரளத்திற்கு வந்ததைப் போல், சேரமான் மதமாற்றமும் கட்டுக் கதை என்று வரலாற்று ஆய்வாளர் பேரா. எம். ஜி. எஸ் நாராயணன் கூறுகிறார். எனவே, கட்டுரையில் உள்ள தாமஸ் தொடர்பான பகுதிகளை நீக்குகிறேன். தாமஸ் வந்தாரா, வரவில்லையா என சர்ச்சையை கிளப்ப வேண்டாம். உரிய தகவல்களை ஆதாரத்துடன் சேர்த்தால் போதும்.

4. பிரவாசகனின் காலம் ஏழாம் நூற்றாண்டு. கொடுங்ஙல்லூரில் சேரமான் பெருமானின் காலகட்டம் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை. எப்படி சேரமான் பெருமாள், பிரவாசகனை கண்டு மதம் மாற முடியும்??

5. கிரிஸ்துவின் சிஷ்யனான சென்ட் தோமஸ்‌. வந்த ஒன்றாம் நூற்றாண்டில், கேரளத்தில் நம்பூதிரி சமுதாயம் இல்லை. பின்னர் எப்படி, நம்பூதிரிகளை தோமஸ் மதம் மாற்றியிருக்க முடியும்?

6. எம்.ஜி.எஸ். நாராயணன், எ. ஸ்ரீதரமேனோன், மலபார் மானுவல் எழுதிய ஸ்காட்டுலன்டுகாரன் வில்யம் லோகன் ஆகியோர் இதை (தாமசின் வரவை) வரலாற்று நிகழ்வாக கருதவில்லை. நம்பப்படுகிறது என்றோ, கருதுகின்றனர் என்றோ எண்ணுகின்றனர் என்றோ எழுதுவதே விக்கிக்கு ஏற்றது.

மேற்கூறிய தகவல்களில் இருந்து தெரியவருவது: மதம் சார்ந்த, பாரம்பரியம் சார்ந்த விடயங்களை, நம்புகின்றனர் போன்ற சொற்களால் குறிக்கலாம். மேற்கூறிய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தை சேர்க்கலாம். வரலாற்றில் சரியான காலத்தை குறிப்பதில் பிழை ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொரு ஆய்வாளர்களும் வெவ்வேறு காலத்தில் நடந்ததாக சொல்வதும் உண்டு. தகவல்கள் உறுதிப்படுத்தப்படாததால், அவற்றை நீக்கலாம். மதம் தொடர்புடையவற்றை, அந்த மக்கள் நம்புவதாக எழுதுவது சிக்கலை தவிர்க்கலாம். பார்வதி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:06, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]

மேற்கோள்[தொகு]