பேச்சு:சேமிப்பு பரப்பு வலையமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைச்சொல் ஐயங்கள்[தொகு]

இக்கட்டுரையில் Storage Area Network என்பதை சேமிப்பு பரப்பு வலையமைப்பு என தமிழாக்கப்பட்டிருக்கிறது.இங்குதேக்ககம் என்று குறிப்பிட்டுள்ளார்.தவிர பல வலையமைப்புகளுக்கும் மொழிமாற்றம் கொடுத்துள்ளார். சேமிப்பு என்பது backup devices க்கு பொருந்துமானாலும் தேக்ககம் என்பது பொதுவான இணையான சொல்லாகப் படுகிறது. விக்கிப்பீடியர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

அடுத்து பல சொற்கள் மூன்றுஎழுத்து சுருக்கங்களாக ஆங்கிலத்தில் கையாளப்படுவது தற்கால விரைவுவாழ்விற்கும் கைபேசி திரைவடிவிற்கும் தோதாக உள்ளது.அதனை தமிழிலும் நாம் கையாள சீர்படுத்த வேண்டும்.காட்டாக,இக்கட்டுரையில் SAN,NAS போன்றவை ஒவ்வொரு முறையும் சேமிப்பு பரப்பு வலையமைப்பு,வலையமைப்பு இணைந்த சேமிப்பு என எழுதிவர முடியாது. தமிழ் சுருக்கங்கள் இல்லாது போனால் ஆங்கிலச் சுருக்கங்களே தமிழில் எழுதப்படும் வாய்ப்புள்ளது.ஆங்கிலத்தைப் பின்பற்றி முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொளவோமாயின் சேபவ (தடித்த எழுத்துகளில்) என SANஐ குறிப்பிடலாம். ஆனால்இங்கு ரவி கூறியது போல தமிழில் capital letters இல்லாததால் இடையில் புள்ளி வைத்தல் தேவையாகிறது.இதுவும் கருதிய எண்ணத்திற்கு தீர்வாக இல்லை.திமுக,அதிமுக என ஊடக உலகில் சிலவற்றிற்கு சுருக்கங்கள் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஒரு விதிமுறை இல்லை.இக்குறை பற்றியும் விவாதிக்கப்பட்டு ஒரு முடிவு காணப்படவேண்டும்.--மணியன் 05:50, 7 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]