பேச்சு:செருமேனியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


'ஜேர்மானியம்' என்பது ஒரு தனித்தமிழ்ச் சொல் அல்லாததால் 'சாம்பலியம்' என்கிற தமிழ்ச்சொல்லை இக்கட்டுரையின் தலைப்பாக மாற்ற விழைகிறேன். விபரம் அறிந்தவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்!

சாம்பிலியம் என்ற ஓரளவாவது பயன்பாட்டில் உள்ளதா? இல்லை எனில் இதன் தமிழாக்துக்கான மூலம் என்ன? --Natkeeran (பேச்சு) 17:16, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
'சாம்பிலியம்' அல்ல 'சாம்பலியம்' . தமிழ் அருஞ்சொற்பொருளில் இதனைத் தேடியெடுத்தேன். சாம்பல் நிறமுடையதாக இருக்கும் காரணத்தால் அப்பெயர் பொருத்தமானதாகக் கருதப்படலாம். இதன் தமிழாக்துக்கான மூலம் இதுவே. இச்சொல் பயன்பாட்டில் குறைவாகவே உள்ளது எனினும் இத்தமிழ்ச்சொல்லைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நாம் முயலலாம். தங்கள் கருத்திற்கு நன்றி ! --praveenskpillai (பேச்சு) 22 சூன் 2013 (UTC)


தனிமங்களுக்குப் பெயர் சர்வதேச விதிமுறைகளின் கீழ் வைக்கப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் ஒரே பெயர் கொண்டே அழைக்கப்படுகிறது. தனிமங்களின் பெயர்களை இவ்வாறு மாற்றுவது விரும்பத்தக்கதல்ல.--Kanags \உரையாடுக 22:24, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
நானும் கனகு கூறிய கருத்துடன் ஒத்தக் கருத்துடையவன். அனைத்துலகப் பெயர்கள் என்று ஏதும், இல்லை, ஆனால் பழைய தனிமங்களைத் தவிர்த்து மற்றவற்றுக்கு தமிழுக்கு உகந்தவாறு ஆங்கிலத்தைப் பின்பற்றிக் கூறுவதும் தவறல்ல. செருமேனியம் என்று இதனை அழைக்கலாம். சிலிக்கானும் செருமேனியமும், காலியமும் எல்லாமும் பார்க்க ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கும். வழுப்பூட்டிய பிறகு (பளபளப்பாகத் தேய்த்து வழுவழுப்பூட்டிய பிறகு), அவை பார்க்க ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கும் (பாதரசம் போல் பளபளப்பாக சாம்பல் நிறமுடையதாக இருக்கும்). --செல்வா (பேச்சு) 02:20, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் கூறியது போல் 'செருமேனியம்' என்றாவது பெயர் மாற்றம் செய்யலாம். ஏனெனில் 'ஜே' என்பது தமிழில் தவிர்க்கப்பட வேண்டிய எழுத்து. தமிழ் விக்கியில் வடமொழி எழுத்தின் பயன்பாட்டைக் குறைக்க முயல்வோம். தங்கள் கருத்திற்கு நன்றி ! --praveenskpillai (பேச்சு) 22 சூன் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செருமேனியம்&oldid=2914598" இலிருந்து மீள்விக்கப்பட்டது