பேச்சு:சென்னையில் ஒரு நாள் (திரைப்படம்)

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சென்னையில் ஒரு நாள் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

    சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் வேறு படைப்புகள் இல்லாத நிலையில், இத்தலைப்பை வேறு எதனுடனும் குழப்பிக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத நிலையில் திரைப்படம் என்று அடைப்புக்குறிக்குள் குறிக்கத் தேவையில்லை. இதே பிழை வேறு பல கட்டுரைகளிலும் காணப்படுகிறது.--இரவி (பேச்சு) 16:14, 17 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]

    \ஒரு பிரபல நடிகரின் கட்டுரைய்யில் அவர் நடித்த பல தலைப்புகளைச் சேர்க்கும் போது, ஒவ்வொன்றின் பின்னரும் திரைப்படம் என்று இருக்குமா இருக்காதா என்று பார்த்து பார்த்து சேர்த்தால் கஷ்டமாக இருக்கும். ஆங்கில வழித் தமிழாக்கம் செய்வதால் இந்த பிரச்சனைகள் வரும். எனவே தான் இந்த ஐடியா வசதியாகவும் இருக்கும். மேலதிக புரிதலுக்கு, ஒரு பிரபல நடிகரின் கட்டுரையை ஆங்கில வழித் தமிழாக்கம் செய்து பாருங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:35, 17 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]
    தமிழ்க்குரிசில், தொடக்கத்தில் நானும் திரைப்படத்துறை கட்டுரைகள் எழுதியவன் தான் :) நீங்கள் கட்டுரையைத் தமிழாக்குபவரின் நோக்கில் இருந்து கூறுகிறீர்கள். நான் தேடுபவரின் நோக்கில் இருந்து கூறுகிறேன். சென்னையில் ஒரு நாள், கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று எழுதுவது இலகு. கூட (திரைப்படம்) என்று சேர்த்துத் தேட வேண்டும் என பலருக்குத் தெரியாது. இரட்டைக் கட்டுரைகள் எழுதப்படும் வாய்ப்பும் அதிகம். எழுதுவது ஒரு முறை. பயன்படுத்துவது பல முறை. எனவே, தேடுபவர் / படிப்பவர் நோக்கில் இருந்து எழுதுவது சரியாக இருக்கும். தொகுப்புப் பெட்டியில் உள்ள உள்ளிணைப்புக் கருவி, ஏற்கனவே ஒரு கட்டுரை இருக்கிறதா இல்லையா என்று தெரிவிக்கும் வசதியும் உள்ளது. தவிர, தேவையற்ற இடங்களில் அடைப்புக்குறி விளக்கம் தரக்கூடாது என்பது பரவலாக ஏற்கப்பட்ட ஒரு விக்கி நடைமுறை--இரவி (பேச்சு) 16:44, 17 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]