பேச்சு:செங்குருதியணு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்குருதியணு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இரத்தச் சிவப்பணு மருத்துவ தமிழன்று. குருதி சிவப்பணு என்பதே சரியான தமிழ் பிரயோகமாகும். - சுரேன்

இரத்தம் வடமொழிச் சொல்லென்பது உண்மையே. இருப்பினும் அண்மைக் காலங்களில் அச்சொல் குருதி என்ற சொல்லை விட அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் குருதிச் சிவப்பணு என்ற வழிமாற்றுக் கட்டுரை ஒன்றை உருவாக்கி உள்ளேன். -- Sundar \பேச்சு 08:15, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

குருதிச் சிவப்பணு என்பதை முதன்மைத் தலைப்பாகக் கொள்வதோடு இரத்தச் சிவப்பணு என்பதை பிறைக்குறிக்குள் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். --கோபி 17:53, 18 மார்ச் 2007 (UTC)

இரத்தம் என்ற சொல்லே கூட தமிழ் வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்த சொல் தான் என்று இராம. கி போன்றோர் குறிப்பிடப் பார்த்து இருக்கிறேன். ஆனால், விளக்கம் அறியேன் --ரவி 19:22, 18 மார்ச் 2007 (UTC)

இரத்தம் என்பது தமிழ்ச் சொல் வடிவம் இல்லை. இரத்தம் என்பது ரக்த என்னும் சமசுகிருதச் சொல்லில் இருந்து வந்தது என்பர். ஆனால் ரக்த என்பதற்கு சமசுகிருதத்தின் இன மொழிகளில் தொடர்பு காண்பது அரிது. அது சமசுகிருதம் தமிழில் இருந்து பெற்றது. எனினும் அரத்தம் என்பது தமிழ் என்பதைத் தெளிவாக விளக்கலாம். அரக்கு, அரளி, அரன் போன்ற 20-30 சொற்கள் அடுக்கலாம் (அர் - அர வரிசை). இரா இளங்குமரன் இது பற்றி விளக்கி இருக்கிறார். அரத்தம் > ரத்தம் ஆகி ரக்த ஆயிற்று எனக்கூறலாம். பத்தி என்பது சமசுகிருதத்தில் பக்தி ஆனது போல. பற்றுவது பத்தி, முற்றுவது முத்தி. தமிழ் முத்தி சமசுகிருதத்தில் முக்தி ஆகும், தமிழ் முத்து (வெண் முத்து) சமசுகிருதத்தில் முக்தா ஆகும். ஆனால் இவையெல்லாம் எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. (சமசுகிருதச் சார்பாளர் கருத்தும் தமிழ் சார்பாளர் கருத்தும் வேறு படுவதாகும்). ஆனால் அரத்தம் என்றால் குழப்பம் இல்லை. குருதி கூட குழப்பம் தரலாம்!. எது எப்படியாயினும், ஓரளவிற்கு மேல் தமிழ்-சமசுகிருதம் என்று அதிகம் பார்க்கத்தேவை இல்லை. இரத்தம் என்பது சமசுகிருதமாய் இருந்தாலும், ஆள்வதில் தவறே இல்லை. அளவிறந்து பிறமொழி மோகம் காட்டித் தமிழ் மொழிச் சொற்களை வழக்கொழிக்கும் போக்கை எதிர்ப்பது முறையே. எல்லா சமசுகிருத சொற்களையும் பிற சொர்களையும் விலக்க விலக்கவோ தவிர்க்கவோ வேண்டியதில்லை. த வி-யில் நல்ல தமிழைப் போற்றுவது மிகவும் நல்லது (பன்முக கலைச் சொல் வளர்ச்சிக்காகவும், இயல்பான மொழி நடைக்காகவும், கருத்துச் செறிவிற்காகவும், பரவலாக தமிழர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்காகவும் பரிந்துரைக்கப்படுகின்றது). --செல்வா 22:24, 18 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செங்குருதியணு&oldid=744164" இலிருந்து மீள்விக்கப்பட்டது