பேச்சு:செங்குதக் கொண்டைக்குருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொண்டலாத்தி[தொகு]

@பரிதிமதி: கொண்டலாத்தி என்பது hoopoe என்று ஆங்கிலத்தில் குறிப்பிடும் பறவைதானே? சின்னானை அவ்வாறு அழைக்கிறார்களா? இப்போதைக்கு கொண்டலாத்தி என்பதை மாற்றுப்பெயர்களில் இருந்து நீக்குகிறேன். --- சுந்தர் \பேச்சு 09:59, 5 சூன் 2020 (UTC)[பதிலளி]

சத்திரத்தான் என் பேச்சுப்பக்ககத்தில் //சின்னான் என்ற தொகுப்பினை செங்குதக் கொண்டைக்குருவி என மாற்றம் செய்து சின்னான் என்ற தொகுப்பினை நீக்கிட வேண்டுகிறேன். சின்னான் என்பது பொதுப்பெயராகவும் செங்குதக் கொண்டைக்குருவி என்பது Red-vented Bulbulஐ குறிப்பதால் இந்த வேண்டுகோள்.// என்று குறிப்பிட்டதின் பேரில் கட்டுரையின் தலைப்பு செங்குதக் கொண்டைக்குருவி என்று மாற்றியுள்ளேன்.--அருளரசன் (பேச்சு) 11:48, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]

//கொண்டைக்குருவிகளில் வமிசத்தைச் சேர்ந்த கொண்டை இல்லாக் குருவிகளும் உண்டு.// இதன் பொருள் விளங்கவில்லை. உரிய திருத்தம் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:34, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]
செங்குதக் கொண்டைக்குருவி (en:Red-vented bulbul) என்ற சிற்றினத்தினை சின்னான் எனும் பொதுத் தலைப்பில் மொழிப்படுத்தி இருந்ததால் சின்னான் என்ற தலைப்பினை நீக்கி செம்புழைக் கொண்டைக் குருவி என மாற்றி அமைக்க, அனுக்கமுடைய திரு. அருளரசன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவ்வாறே இத்தொகுப்பு மாற்றப்பட்டது (மாற்றம் செய்ததற்கு நன்றி). bulbul என்பது கொண்டைக்குருவி என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பைனோடோடிடே குடும்பத்தில் சின்னான் உள்ளிட்ட கொண்டை இல்லாக் குருவி பேரினங்களும் உள்ளன. சிற்றினப் பொதுப்பெயரினை பேரினப் பெயரில் தொகுப்பதால் இக்குழப்பங்கள் நிகழ்கின்றன. --சத்திரத்தான் (பேச்சு) 13:35, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]