பேச்சு:சூழலியல் அடித்தடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

சூழலியல் அடித்தடம் என்பது foundation, foundational path என்பது போன்ற பொருளைத் தருகின்றது என நினைக்கின்றேன். footprint என்பதற்கான தமிழ்ச்சொல் சுவடு, ஆனால் இங்கு நாம் பயன்கொள்வதால் நேரும் கேடுகளைக் குறிக்குமாறு அமைந்த சொல். எனவே ecological footprint என்பதனை சூழியற்சுவடு அல்லது சூழியற் கவர்வு அல்லது சூழியற் தாக்குச்சுவடு அல்லது சுழியற் தாக்குப்பதிவு என்பது போன்ற ஏதேனும் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். --செல்வா 14:01, 13 மார்ச் 2009 (UTC)

சூழலியற் சுவடு பொருத்தமாக இருக்கிறது--ரவி 17:09, 13 மார்ச் 2009 (UTC)
அடித்தடம் என்பதற்கு foundation தொடர்பான பொருள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மதராசுப் பல்கலைக்கழக லெக்சிக்கனிலும் அத்தகைய பொருள் எதுவும் கொடுக்கப்படவில்லை. பேச்சு வழக்கிலும் நான் கேள்விப்பட்டதில்லை. மேற்படி லெக்சிக்கனில் "தடம்" என்பதற்கு Foot-step என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்சனரியிலும் footprint என்பதற்குக் "கால்தடம்" என்ற சொல்லே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், "சுவடு" என்ற சொல் நன்றாக இருப்பதுபோல் படுவதால் சூழலியற்சுவடு என்றே குறிப்பிடலாம் என எண்ணுகிறேன். சூழியல் என்பதில் சூழ் என்பதுடன் இயல் சேர்க்கப்பட்டுள்ளது. சூழ் என்பது பல பொருள் தரக்கூடிய அடிப்படையான வேர்ச்சொல்லாக இருப்பதால் சூழியல் என்பதும் பல்வேறு பொருள்களைத் தரக்கூடியது. இதனால் சூழலியல் கூடிய பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. மயூரநாதன் 17:23, 13 மார்ச் 2009 (UTC)
தடம் என்பது காலடிகள் பதிவதால் தோன்றும் பாதை, வழி, path என்னும் பொருள் கொண்டது. ஆனால் அடி என்னும் சொல் மிகப்பல பொருட்களை உணர்த்தும் சொல். அடி என்றால் கீழ், காலடி, அடிப்படை, அடிமனை, அடித்தளம் என்று பொருள் விரிந்துகொண்டு செல்வது. அடித்தடம் என்பது foot-path என்று நேரடியாகப் பொருள் கொள்ளலாம், ஆனால் அடிப்படை, அடித்தளம், அடிமனை என்பதுபோல pioneering steps என்னும் பொருள் சுட்டும். அடித்தடம் அமைத்தார் என்றால் முதல் பாதையை நிறுவினார் என்று பொருள் தரும். அடிக்கால் நாட்டினார் என்றால் foundation, அடித்தளம் பாவ முதற்கல்லைப் பதித்தார் என்று பொருள் தரும். அதாவது நான் சொல்ல வந்தது என்னெவென்றால், அடி என்றால் foot என்னும் பொருள் இருந்தாலும், தடம் என்னும் சொல்லோடு சேரும்பொழுது பொருள் வேறு திசையில் செல்லக்கூடும் என்பதுதான். சூழலியல் என்று இருப்பதில் எனக்கு மறுப்பு இல்லை (சூழியல் என்றால் design philosophy என்றும் பொருள் படும். சூழ்ச்சி என்பதன் பொருட்களில் design என்பதும் ஒன்று!). ஆங்கிலத்தில் foot-print என்னும் சொல்லை நாம் நேரடியாக சுட்ட வேண்டியதில்லை. நம் செயற்பாடுகளால், சூழலியலில் ஏற்படும் தாக்கத்தின் அளவு, அல்லது தாக்கத்தின் பதிவளவு என்பதுதான் கருத்து என்று நினைக்கிறேன். எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 17:46, 13 மார்ச் 2009 (UTC)