பேச்சு:சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில கட்டுரைகளின் தலைப்புடன் ”பயனர்:(ஒருவரின் பெயர்)” எனக் காணப்படுகிறது. இது ஏன்? இது கட்டுரைகளைத் தேடுவதில் சிக்கல்களை உண்டாக்குகிறது. மேலும் தலைப்பு நீளமாக்கப்பட்டு விடுகிறது. இவற்றைத் திருத்தி உதவுக.

ஒரு பயனரின் பயனர்வெளியில் இருப்பவை “பயனர்:xxx" என்ற முன்னொட்டுடன் காணப்படும். பயனர்வெளி பயனரின் தனிப்பட்ட பகுதி - ஒருவர் தன் கட்டுரையை வளர்த்தெடுத்தல், சோதனை தொகுப்புகள் செய்தல், தொகுத்துப் பழகுதல் ஆகியவற்றை செய்யலாம். பொதுவாக பிறர் அதில் தொகுக்கக் கூடாது. இத்தகு கட்டுரைகள் மையவெளி/பொது வெளியில் இருக்கும் கட்டுரைகளைப் போன்று கருதப்படுவதில்லை. வரைவு நிலையில் இருப்பதாகவே கருதவேண்டும்.
ஆனால் இக்கட்டுரையும் மேலும் 24 கட்டுரைகளும் மேற்சொன்ன பொது விளக்கத்துக்கு சற்றே அப்பாற்பட்டவை. இவை கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் உருவாக்கப்பட்ட 25 கட்டுரைகளில் அடக்கம். நேரடியாக பொதுவெளியில் போடாமல், பயனர்கள் பார்த்து சரி செய்து பொதுவெளிக்கு நகர்த்தும் வரை மொழி பெயர்ப்பாளரின் பயனர்வெளியில் “வரைவு” ஆக இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஆனால் கூகுள் திட்டம் கூகுளால் கைவிடப்பட்டதால், இந்த சரிபார்த்தலும் நகர்த்தலும் நிகழ வில்லை. கட்டுரைகள் பயனர்வெளிகளில் தங்கி விட்டன. இப்போது பயனர்கள் தனிப்பட்ட முறையில் அவற்றைத் திருத்தி சரி செய்து வருகிறோம். இவற்றை முழுமையாக திருத்திய பின்னர் மையவெளிக்கு நகர்த்தி விடலாம் இந்த "பயனர்:xxx" நகர்த்தியபின்னர் நீங்கி விடும். கூகுள் திட்டம் பற்றி மேலும் விவரங்கள் (ஏன் இப்படி பயனர் வெளியில் இவை உள்ளன) இந்த உரையாடல் பக்கத்தில் உள்ளன.
எனவே இக்கட்டுரைகளை இங்கேயே திருத்தி விட்டு, திருத்தம் முடிந்ததென்றால், என் உரையாடல் பக்கத்தில் ஒரு குறிப்பு இடுங்கள், நான் நகர்த்தி விடுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:22, 12 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]