உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சுழற்சிக் காலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுழற்சிக் காலம் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நரசிம்மவர்மன், Meridian என்பதற்கு நீங்கள் நடுவரை என மொழிபெயர்த்துள்ளீர்கள். நல்ல ஆக்கம், ஆனால் அது நெடுவரை என்று இருத்தல் வேண்டும். (கிடைவரை, நெடுவரை). நடுவரை எனப்து நடுக் கிடவரையைக் குறிக்கும் சுருக்க மொழி. கிடைவரையில், நடுவென்று சொல்ல ஒன்றுண்டு, ஏனெனில் அதுவே மிகப்பெரியதும், புமியை இரண்டாக குழப்பம் இன்றி பிரிக்கப் பயன்படும் ஒரு கற்பனைக் கோடும் ஆகும். ஆனால் நெடுவரைகள் எல்லாம் ஏறத்தாழ ஒரே அளவுடையவை. மெரிடியன் எனச்சொல்லப்படும் ஒரு நெடுவரைக்கோடு, கிரீன்விச் வழியாகச்செல்லும் அது முதல் நெடுவரை எனலாம். எனவே மெரிடியன் என்பதை முதல்நெடுவரை எனலாம். சுழற்சிக்காலம் பற்றி எழுதி வருகின்றீர்கள், .கோண உந்தம் பற்றி ஒரு கட்டுரை முன்னர் சிறிதாகத் தொடங்கினேன், அதனையும் பாருங்கள் இங்கே.--செல்வா 14:53, 20 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

செல்வா, நான் Meridian என்பதற்க்கு உச்சிவட்டம் (இப்பொழுது முதல்நெடுவரையென மாற்றிவிட்டேன் )என்பதையே பயன்படுத்தி யிருந்தேன், Equator என்பதற்க்குதான் நடுவரை எனக்கொண்டேன், ஆனால் கலைச்சொல்-ஆங்கில நிகரி எனவட்டவனைத் தருகையில் தவறுதலாய் குறிப்பிட்டுவிட்டேன்!
தங்களின் கருத்துகளை ஏற்பதில் எந்த சிரமமும் இல்லை, பார்க்கப்போனால் அதுவென் கடமையும்கூட!
கடலில் கலந்தபின் எந்தத் துளி மழைத் துளி? விக்கிபீடியா தனிமனிதனின் சொத்தல்ல என்பதனை நன்குணர்வேன்! :-)
-நரசிம்மவர்மன்10 05:45, 21 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

leap = எச்சம்/எச்சம்பெற்ற?

[தொகு]

இக்கட்டுரையில், leap என்பதற்க்கு "எச்சம்" எனப் பயன்படுத்தியுள்ளேன் (leap year -> எச்ச வருடம்), அது பொருத்தமா? "எச்சம் பெற்ற" (leap year -> எச்சம்பெற்ற வருடம்)என்றுக் கொள்ளலாமா? தங்கள் கருத்துக்களை பகிரவும்! -நரசிம்மவர்மன்10 07:39, 24 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுழற்சிக்_காலம்&oldid=1577093" இலிருந்து மீள்விக்கப்பட்டது