பேச்சு:சுயம்புலிங்கம்
Appearance
கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. @பா.ஜம்புலிங்கம் and Mayooranathan: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை சரி பார்க்க முடியுமா? அல்லது முடிந்தால் மேம்படுத்துங்கள். இல்லையேல் ஆதாரமில்லாத தகவல்களை நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 01:50, 4 மார்ச் 2017 (UTC)
சுயம்பு
[தொகு]வணக்கம், Kanags. மூன்று ஐயங்களுக்கு மறுமொழிகள் தந்துள்ளேன்.
- சுயம்பு = தானாக உண்டானது, சுயம்புலிங்கம் = தானாகத் தோன்றிய சிவலிங்கம் (Tamil Lexicon, Vol III, Part I, University of Madras, 1982. ப.1523, சுயம்பு = தானாகவே உண்டான ஒன்று அல்லது ஒருவர் (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, 2009)
- உலகத்திலேயே அதிகமான சுயம்புலிங்கங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 44,000 சுயம்புலிங்கங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.பண்டைக்காலத்தில் மரமாக இருந்து பிரளயகாலத்தில் மண்ணுக்குள் புதைந்து படிமம் ஆகி, மரமானது கல்மரம் ஆகிவிடுகிறது. இவ்வாறான கல்மரங்கள் லிங்கவடிவில் இருப்பதைச் சுயம்புலிங்கம் என்கின்றனர். மதுரையில் உள்ள கடம்பமரத்தின் படிமம் ஆகும். மதுரைக்கு அருகே உள்ள திருப்பூவணத்தில் பாரிசாதமரத்தின் பூவினுடைய காம்புப் பகுதி படிமம் ஆகிச் சிவலிங்கமாக உள்ளது என்கிறது திருப்பூவணம் புராணம். (நீங்கள் கூறியுள்ளதுபோல மேற்கோள்கள் தேவை)
- விண்ணிலிருந்து இறங்கிய கல் ஒன்று படிமம் ஆகிக் காசியில் சுயம்பு லிங்கமாக உள்ளது. (மேற்கோள் தேவை)
- கும்பகோணத்தில் அமிர்தக்குடம் இலிங்கமாக உள்ளதாகப் புராணம் குறிப்பிடுகிறது.(கும்பகோணத்தின் சிறப்பைப் பற்றிக்கூறும்போது பின்வரும் புராணத்தைக் கூறுவர் : "உலகம் யாவையும் அழிக்கக்கூடிய ஊழிக்காலம் வரப்போவதை அறிந்த பிரமன் கயிலைக்குச் சென்று சிவபெருமானிடம் மகா பிரளயம் வந்தால் அனைத்தும் அழியுமே என வருத்தப்பட்டு மறைகளைக் காப்பது பற்றியும், படைப்புத்தொழிலைத் தான் தொடருவது பற்றியும் கேட்கவே, சிவன் அமிர்தத்தையும் மண்ணையும் சேர்த்து குடம் ஒய்து அதனுள் அமுதத்தை நிரப்பி தான் தரும் சிருஷ்டிபீஜத்தைவைத்து குடத்தின் மேல் வாவிலை, வில்வம், தருப்பை, தேங்காய், பூணூல்ஆகியவற்றால் அலங்கரித்து பூசை செய்து, அந்த குடத்தினை ஒரு உறியில் வைத்து மேரு மலையில் வைக்கும்படியும், ஊழி வெள்ளம் வரும்போது தாம் செய்யவேண்டுவதைச் செய்வதாகவும் கூறினார். பிரமன் சிவனின் அருளுக்காகக் காத்திருந்தார். ஊழிக்காலம் நெருங்கவே மேருமலை உள்ளிட்ட அனைத்தும் பிரளய வெள்ளத்தில் மூழ்கின. சிவன் அருளியவாறு அமுத கலசம் தென் திசை நோக்கி மிதந்துவந்து ஓரிடத்தில் வந்து நின்றது. குடத்தின் மாவிலையும், தருப்பையும் திருக்கலசநல்லூர் எனப்படும் தலத்தில் விழுந்து லிங்கமாயின" ஆதாரம்: திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2014 என்ற நூலில் கும்பகோணத்தின் சிறப்பும் மகாமகமும் என்ற தலைப்பிலான கட்டுரை, ப.181)
1 மற்றும் 4க்கு மேற்கோள் தந்துள்ளேன். 2க்கு நீங்கள் கூறியதுபோல மேற்கோள்கள் தேவை. அவ்வாறே 3க்கும் மேற்கோள் தேவை. ஏதாவது ஒரு பதிவில் இதனை இணைக்கலாம். மேற்கொண்டு ஆவன செய்யவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:52, 4 மார்ச் 2017 (UTC)