பேச்சு:சுமைதாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள படம் சிறப்பாக உள்ளது. ஆனால், இது ஒரு சுமைதாங்கி தானா என்பதில் எனக்கு ஒரு ஐயம் உள்ளது. இதைப் பார்க்கும்போது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் அமைக்கும் கல்திட்டைகள் போல உள்ளது. இது பற்றி அறிய வேண்டும். -- மயூரநாதன் 09:05, 17 திசம்பர் 2011 (UTC)

இது சுமைதாங்கிதான் என்று நினைக்கிறேன். :) --சூர்யபிரகாசு உரையாடுக... 09:24, 17 திசம்பர் 2011 (UTC)
தமிழ்நாட்டில் நான் இதுவரை கண்டுள்ள மூன்று நான்கு சுமை தாங்கிகள் இது போன்று தான் இருந்தன.--சோடாபாட்டில்உரையாடுக 09:41, 17 திசம்பர் 2011 (UTC)
நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள சுமைதாங்கிகளை நான் பார்த்தது இல்லை. இப் படத்தில் உள்ளது கல்திட்டை போலவே இருப்பதைக் கல்திட்டை தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் பார்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அத்துடன் சுமை தாங்கிகள் பாதைகளை அண்டி அமைந்திருப்பது வழக்கம். படத்தில் உள்ளது அவ்வாறு அமைந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது பழைய காலத்தைச் சேர்ந்ததாக இருந்தால் அக்காலக் கற்திட்டையைச் சுமைதாங்கியாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பும் உள்ளது. சுமைதாங்கியும் கற்திட்டை போன்றே அமையவும் கூடும். யாழ்ப்பாணப் பகுதிகளில் காணப்படும் சுமைதாங்கிகள் பிற்காலத்தைச் சேர்ந்தவை. வேறு வடிவம் கொண்டவை. படம் கிடைத்தால் அதையும் இணைத்துவிடுகிறேன். -- மயூரநாதன் 11:09, 17 திசம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுமைதாங்கி&oldid=954490" இருந்து மீள்விக்கப்பட்டது