பேச்சு:சுப்பிரமணியன் சந்திரசேகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்பிரமணியன் சந்திரசேகர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


புத்தகம்[தொகு]

இங்கு ஏற்கெனவே இருந்த கட்டுரையில் வாழ்க்கைக் குறிப்பு என்ற பகுதியில் ஏதும் செய்தி இல்லை. அப்பகுதியை நிரப்ப முயற்சி எடுத்துள்ளேன்; அதற்கு, கமலேசுவர் வாலியின் புத்தக்த்தை உபயோகிக்கிறேன்.

இன்னும் எழுத வேண்டும். நான் விட்டிருக்கும் நிலையில், சந்திராவுக்கு இன்னும் 20 வயது கூட ஆகவில்லை!

Abinandanan 17:22, 21 மார்ச் 2009 (UTC)


மேற்கோள்களை சேர்த்தாலும் மேலும் சிறப்பாக இருக்கும். மேலும் தகவலுக்கு பாக்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --Natkeeran 17:27, 21 மார்ச் 2009 (UTC)

ஒரே புத்தகத்தை பலமுறை மேற்கோள் காட்ட வேண்டுமென்றால் ஏதேனும் முறை உள்ளதா? உதவிக்கு நன்றி. Abinandanan 17:46, 21 மார்ச் 2009 (UTC)

ஒரு சான்றுக்குப் பெயர் தந்துவிட்டு அதைப் பல இடங்களில் பயன்படுத்தலாம். இங்கே செய்துள்ளதைப் பாருங்கள். விரிவான விளக்கம் (ஆங்கிலத்தில்) இங்கு தரப்பட்டுள்ளது. -- சுந்தர் \பேச்சு 17:53, 21 மார்ச் 2009 (UTC)
ஆனால், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பக்கங்களை மேற்கோள் காட்ட வேண்டாமா? ரொம்ப தொல்லை கொடுக்கிறேனோ? Abinandanan 18:06, 21 மார்ச் 2009 (UTC)
கட்டாயம் தொல்லையில்லை. இனி வரும் தேவைகளுக்கான விடை காண வழிவகுக்கிறீர்கள். பார்க்க: en:Wikipedia:Citing_sources#Shortened_footnotes en:Wikipedia:Parenthetical_referencing --சுந்தர் \பேச்சு 18:16, 21 மார்ச் 2009 (UTC)

சுப்பிரமணியன்_சந்திரசேகர் பற்றிய பக்கத்தில் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தனித்தனியாக பிரித்துள்ளேன். பரவாயில்லையா? Abinandanan 08:40, 22 மார்ச் 2009 (UTC)

அபிநந்தன், உபதலைப்புகளை சிறிது மாற்றியுள்ளேன். சரியா பாருங்கள்.--Kanags \பேச்சு 09:02, 22 மார்ச் 2009 (UTC)
நன்றாக உள்ளது, அபினந்தன். உங்கள் துறையான பருப்பொருள் அறிவியலைப் பற்றியும் கட்டுரைகளை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். :-) -- சுந்தர் \பேச்சு 10:02, 22 மார்ச் 2009 (UTC)

Kanags: நீங்கள் மாற்றியமைத்ததுதான் நன்றாக உள்ளது. மிக்க நன்றி. // இதுதான் முதல்முறை என்பதாலும், நீங்கள் அனைவரும் ஏற்படுத்தியுள்ள முறைகளையும் மரபுகளையும் மீறிவிடுவோமோ என்ற தயக்கம் இருப்பதாலும், பல சந்தேகங்கள்! அவ்வளவே ... மீண்டும் மிக்க நன்றி. Abinandanan 13:40, 22 மார்ச் 2009 (UTC)