பேச்சு:சுபாஷிணி கனகசுந்தரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

COI வார்ப்புரு இனித் தேவையற்றது. குறிப்பிடத்தக்கமைக்கான சான்றுகள் கட்டுரையில் உள்ளன.--Kanags \உரையாடுக 04:53, 14 மே 2017 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமைக்கான சில எ.கா:
  • 300 ஆண்டுகள் பழமையான முப்பத்தெட்டு தமிழ் கையெழுத்து ஓலைச்சுவடி நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். என்பதற்கான உசாத்துணைச் சுட்டி ஒன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்பாடு என்கிறது [ஏராளமான தமிழ் ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.].
  • "சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்" - இதன் சிறப்பு என்ன?
  • "தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவரும் ஆவார்." உசாத்துணையுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர்களில் ஒருவர் என்ற கருத்துத் தேவை.
  • வாழும் நபர் பற்றியது என்பதால் மேலும் உசாத்துணைகள் இருப்பது. சிறப்பு.

--~AntanO4task (பேச்சு) 09:28, 14 மே 2017 (UTC)[பதிலளி]


A major contributor to this article appears to have a close connection with its subject. It may require cleanup to comply with Wikipedia's content policies, particularly neutral point of view.

"neutral point of view" என்பது கட்டுரையில் இல்லை என்று பிழை கண்டுபிடிக்க விரும்புபவர் முதலில் அதை தனது குறிப்புகளில் காட்டுவது நலம்.

  • கட்டுரை எழுதுபவர் யாராக இருந்தால் என்ன? இந்தக் கட்டுரையின் அமைப்பு புகழுரைகளாக அடுக்கப்பட்டுள்ளதாக உள்ளதா? அல்லது விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டதாக, வெறும் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்ட வகையில் அமைந்துள்ளதா? கட்டுரை எழுதப்பட்டுள்ள முறை விக்கிப்பீடியா கொள்கைகளை மீறிய வகையில் எழுதப்பட்டதல்ல. எனது இக்கூற்றை விக்கிப்பீடியா கட்டுரையின் ஆய்வாளர்கள் மறுக்க வழியில்லை. அவ்வாறு கருதப்பட்டிருந்தால் தயக்கமின்றி உடனே நீக்கியிருக்கலாமே.
  • "சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்" என்பது தமிழ் மரபு, தமிழிலக்கியம், கணினித் தமிழ் வளர்ச்சி குறித்து பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார் என்பதுடன் இணைத்துப் படிக்கத் தேவை. அது அவர் அத்துறையின் ஆர்வலராக (activist) செயல்படுவதைக் குறிப்பிட கொடுக்கப்பட்டுள்ளது.
  • தேவையான உசாத்துணைகள் குறித்து; பிற விக்கிப்பீடியா கட்டுரை விமர்சர்களின் குறிப்பையும் மீள்பார்வை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
  • மேலும் சில உசாத்துணைகளும் விளக்கமும் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இக்கட்டுரை விக்கிப்பீடியாவில் எனது முதல் கட்டுரையல்ல. ஆனால் இது எனது இறுதிக் கட்டுரையாக இருக்கும் எனவே நினைக்கிறேன். உங்கள் கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி. வணக்கம். வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு.


கருத்துடன், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.--~AntanO4task (பேச்சு) 13:15, 23 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]