பேச்சு:சுஜாதா (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:24, 14 மே 2007 (UTC)

புனைபெயர்[தொகு]

புனைபெயர் என்பது ஊறுகாய் என்பது போன்ற வினைத்தொகை. புனைதல் என்றால் அணிதல், கற்பித்தல், அலங்கரித்தல், தரித்தல், எழுதுதல், செய்தல், உருவாக்குதல் என்று வெவ்வேறு இடங்களில் பொருள் தரும். புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என பல காலநிலை வினைகளை உள்ளடக்கிய வினைத்தொகை ஆகையால் அதில் ஒற்று மிகாது. புனைஇ என்றால் புனைந்து அணிந்து என்று பொருள். புனைசுருட்டு என்பது ஏமாற்று, மோசம் போன்ற பொருளைத் தரும் இன்னொரு வினைத்தொகை. இதே போல இன்னொரு சொல்லும் வெகுவாகத் தவறாக வழங்கும். திருநிறைசெல்வன், திருநிறைசெல்வி என ஒற்று மிகாமல் வரவேண்டும் (வினைத்தொகை - திருநிறைந்த, திருநிறைகின்ற, திருநிறையும் செல்வன்/செல்வி). ஆனால் பிழையாக ஒற்று மிகுத்து எழுதுவர் பலர். ஊறு"க்"காய் என்றால் எப்படிப் பிழையோ அப்படி இதுவும் பிழை. --செல்வா 04:34, 29 மார்ச் 2010 (UTC)

நல்ல விளக்கம். நன்றி, செல்வா--ரவி 06:06, 29 மார்ச் 2010 (UTC)

மன்னிப்பீர்![தொகு]

   அன்புடையீர்!
   இங்கே 'புனைபெயர்' என்று சரியாக இருந்ததைப் 'புனைப்பெயர்' என்று மாற்றியவன் நான்தான். மன்னியுங்கள்! இதோ இப்பொழுதே திருத்தி விடுகிறேன். அந்த அருமையான விளக்கத்திற்கு நன்றி திரு.செல்வா அவர்களே!
   வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 14:31, 6 ஜூன் 2010 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

சுஜாதா படைப்புகளின் திரட்டுப் பக்கம் அம்பலம் (சுஜாதா நிர்வகித்த இணைய இதழ்)

ஆகியவையும் இயங்கவில்லை.

மாறுபட்ட இணைப்பு[தொகு]

சுஜாதாவுடன் ஒரு நேர்காணல், பேட்டி கண்டவர் கானா பிரபா

என்பதை சரிபார்க்கவும்.

- ஜெகதீஸ்வரன்

இணைப்பில் தவறில்லை.--Kanags \உரையாடுக 11:12, 11 சனவரி 2011 (UTC)

அம்பலம் இணைப்பு இயங்குகிறாதா. என் கணினியில் அது இயங்கவில்லை. அதன் பின் சுஜாதாவுடனான பேட்டி அந்தப் பக்கத்தில் இல்லை. அது பேட்டி கண்ட அனுபவத்தினைக் கூறி இறுதியில் இரங்களுக்கு மனம் வருந்துவதோடு முடிகிறது. இணைப்பு மாறுபட்டிருக்கிறது என அதைதான் குறிப்பிட்டேன்.

- ஜெகதீஸ்வரன்

இணைப்பு இயங்குகிறது. ஒலி வடிவில் சுஜாதாவின் நேர்காணல் எனக்குக் கேட்கிறதே.--Kanags \உரையாடுக 12:41, 11 சனவரி 2011 (UTC)