பேச்சு:சீன வானொலி நிலையம் (தமிழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

中国国际广播电台 என்பதின் நேரடிப் பொருள் சீன மின் அலைபரப்பு நிலையம் என்பது. (தனி உயிர் எழுத்துகளாக தமிழில் காட்டப்படுவது இங்கு தேவை. சீன ஒலிப்பு அப்படித்தான் உள்லது. எடுத்துக்காட்டாக, 播 என்பதை ஆங்கிலத்தில் Bō என்று எழுதிக் காட்டுகின்றனர். ஆனால் அதன் ஒலிப்பு 'ப் உ ஆ என்பது போல் உள்ளது. புவா என்ரு எழுத்லாம் என்றால் முதல் ஒலிப்பு 'ப் ("b") என்று தனி மெல்லொலி மெய்யாக உள்ளது. அடுத்து வரும் உயிரொலியும் தனித்து ஒலிப்பது போன்றது. எனவே தமிழில் தனி உயிர் அல்லது தனி மெய்யாகக் காட்டப்பட்டுள்ளன, தேவை கருதி இட்டவை. எழுத்துப்பிழை அல்ல)

中 ச்சோங் = சீன
国 உவா = நாடு
国 உவா = நாடு
际 ட்சீ = எல்லை
广 வ்உவா = பரவலாக
播 'ப்உஆ (அல்) 'ப்உவா = பரப்பு
电 ட்இயன் = மின், மின்சாரம்
台 = ட்ஆஇய் = நிலையம் (அலைபரப்பு நிலையம்).

எனவே நேரடிப்பொருள் சீன நாட்டு மின் (அலை) பரப்பு நிலையம். அதாவது சீன வானொலி நிலையம். இவ்வகை விளக்கம் பயனுடையதாக இருக்கும் என்று இங்கு இடுகின்றேன். எடுத்துக்காட்டாக (电) ட்இயன் என்பது மின்சாரம் என்று காண இங்கே சீன விக்கியில் இவ்வெழுத்தைப் பார்க்கலாம் --செல்வா 17:43, 5 ஜூன் 2008 (UTC)