பேச்சு:சீனாவில் இனவாதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாகுபாடு என்னும் சொல் பிரிவுகளை மட்டுமே சுட்டும். இனப்பாகுபாடு என்றால் இனங்களின் பிரிவுகள் என்று பொருள்படும். Racism என்னும் கருத்து வரவேண்டும் எனில், இன வேற்றுமைக் கொடுமை என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழில் racism என்னும் சொல்லுக்கு இணையாக ஒரு சொல் இல்லாமல் இருந்தது நல்லதே. ஆனால் அதனால் தமிழரிடையே பிறப்படிப்படையில் உயர்ச்சி தாழ்ச்சி இருந்ததில்லை என்று பொருளல்ல. இருந்தது என்பது உண்மை. எனவே இன வேற்றுமைக் கொடுமை என்பதை racism என்பதற்குப் பயன்படுத்தலாம். Discrimination என்பதற்கு வேற்றுமைக்கொடுமை எனலாம். வேற்றுமை நடத்தை எனலாம். இனவேற்றுமை பாராட்டல் = practice racism, encourage racism--செல்வா 14:15, 22 ஜூன் 2008 (UTC)


கருத்துக்களுக்கு நன்றி செல்வா. உங்களின் பரிந்துரை சற்று நீண்ட சொல்லாக அமைந்து விட்டது. பல இடங்களில் இன வேற்றுமை என்று மட்டும் பயன்படுத்துவத்தைப் பார்த்திருக்கிறேன். இனப் பாகுபாடு போல இன வேற்றுமை என்பதும் neutral சொற்களாக படுகின்றன. அந்த செயற்பாட்டில் இருக்கும் கொடுமையை உணர்த்தவே கொடுமை என்ற சொல்லை நீங்கள் சேர்த்தீர்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. எனினும் அந்த சொல் சற்று நீண்டு விட்டதாக தோன்றுகிறது. பிற பயனர்களின் கருத்துக்களையும் அறியலாம். --Natkeeran 23:46, 24 ஜூன் 2008 (UTC)


இலங்கைத் தமிழ் ஊடகங்களில் racism என்பதற்கு இனவாதம் என்னும் சொல் பயன்படுகிறதே மயூரநாதன் 02:49, 25 ஜூன் 2008 (UTC)
நன்றி மயூரநாதன். இனவாதம். சுருக்கமாகவும், நன்றாகவும் எனக்குப் படுகிறது. --Natkeeran 03:12, 25 ஜூன் 2008 (UTC)

இனவாதம், இனப்பாகுபாடு இரண்டுமே பெரிதும் புழக்கத்தில் உள்ள சொற்கள். எனவே இதற்கு மாற்றாக, புதிய பெரிய சொல்லான இன வேற்றுமைக் கொடுமை என்ற சொல் தற்போது வேண்டாம் என்று தோன்றுகிறது. வாதம் என்ற சொல்லுக்குப் பதில் இயம் என்று பயன்படுத்துவது என்று முன்பு உரையாடினோம். இங்கு பொருந்துமா தெரியவில்லை. racism இனயியம் ஆனால் racist இனயியலாளரா? இது ஏதோ இனவியல் படிக்கும் அறிவியலாளரைச் சுட்டுவது போல் உள்ளது !! பாகுபாடு என்பது பிரிவை மட்டும் காட்டினாலும் பிரிவினையின் ஊடான discrimination (தமிழில் என்ன?) தான் சுட்டப்படுகிறது. பேச்சு வழக்கிலும், ஏன் "பிரிச்சுப் பார்த்துப் பேசுற" என்பார்கள்.--ரவி 16:45, 26 ஜூன் 2008 (UTC)

ரவி, நீங்கள் தனித்தமிழின் எல்லைகளைத் தொடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். வாதம், விவாதம் போன்ற சொற்களுக்கு தனித்தமிழ் சொற்கள் என்ன? --Natkeeran 18:47, 26 ஜூன் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீனாவில்_இனவாதம்&oldid=344158" இலிருந்து மீள்விக்கப்பட்டது