பேச்சு:சீதா (மரம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை சீதா பழம் என்ற தலைப்புக்கு மாற்றலாமா? இதனை மூலிகை என்று அறிமுகப்படுத்துவதும் சரியல்ல. இது போன்று பல கட்டுரைகள் மூலிகைகள் என்ற குறைந்த பட்ச அறிமுகத்துடன் இத்தளத்தில் உள்ளன. அனைத்தும் தரமுயர்த்தப்பட வேண்டும். (நானும் பங்களிக்க உறுதி அளிக்கிறேன்..எத்தனை நாளைக்கு கருத்து மட்டும் சொல்லிக் கொண்டு ஓட்ட முடியும்;)?)--ரவி 18:37, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

சீதாப் பழம் என்பது கூட அவ்வளவு பொருத்தமல்ல. சீதா மரம் என்று மாற்றலாமா? எனக்கு இதனைத் தெரியாது. ஆங்கில இணைப்பைக் கொடுத்துள்ளேன். விபரமறிந்தவர்கள் விரிவாக்குங்களேன். --கோபி 20:06, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி, உங்க வேண்டுகோளை தட்ட முடியுமா :)? இருந்தாலும், முழுக்க ஆங்கில வழியத்தில் படித்து விட்டதால், விரிவாக்க கலைச்சொல் சிரமங்கள் இருக்கின்றன. பல சொற்கள் தமிழ் இணைய அகராதியிலும் இல்லை. இயன்ற அளவு விரிவாக்கி இருக்கிறேன். ஆப்பிள், மாம்பழம் ஆகிய இன்னபிற கட்டுரைகளும் பழங்களின் பெயர்களாலேயே அமைந்துள்ளன. பழங்களாலேயே மரங்கள் அறியப்படுவதால், பழங்களின் பெயரில் தலைப்பும் அமைவதில் பிழை இல்லை என்று கருதுகிறேன்.--ரவி 21:41, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீதா_(மரம்)&oldid=2110253" இலிருந்து மீள்விக்கப்பட்டது