பேச்சு:சிவத்தையாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் எங்கே பார்த்தாலும், சிறப்பாக கொண்டாடப்படுகிரது, சிறப்பாக செயல்படுகிறது என ஆசிரியர் பொய்யாக எழுதியுள்ளார். பல இடங்களில் சொற்பிழைகள் (தட்டச்சு தெரியாது என்று நினைக்கிறேன்.) மேலும், கிறித்தவப் பரப்புரை போன்ற உபயோகமற்ற உள்ளடக்கத்தைச் சேர்த்துள்ளார். (சிறு கிறித்தவப் பேராலயத்தில் பணிபுரியும் கிறித்தவர்களையும் எழுதியுள்ளார். பெயர்கள் ஆங்கிலக் கலப்புடன்!) தேவையற்றது எனக் கருதியே நீக்கியுள்ளேன். ஒரு முறை சரிபாருங்கள். தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:47, 6 அக்டோபர் 2012 (UTC)

தமிழ்க்குரிசில், தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் தேவையற்ற தகவல்களைத் தாங்கள் நீக்கியது சரிதான். இக்கட்டுரையில் தொகுக்கப்படுகிறது என்பதற்கான வார்ப்புரு தற்போதைய நிலையில் தேவையில்லை என்பதால் அதை நான் நீக்கம் செய்திருக்கிறேன். சிவத்தையாபுரம் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் தேர்வு நிலைப் பேரூராட்சியின் ஒரு பகுதிதான். எனவே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் எனும் பகுப்பும் நீக்கப்பட்டுள்ளது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:37, 7 அக்டோபர் 2012 (UTC)
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் என்ற பகுப்பு ஏன் நீக்கப்பட்டது? பேரூராட்சிக்குள் உள்ள ஊருக்குத் தனியே பகுப்புண்டா?--Kanags \உரையாடுக 03:45, 7 அக்டோபர் 2012 (UTC)
தமிழ்நாட்டில் கிராமங்கள் என்பது இரு வகையாக இருக்கின்றன. தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையின் கீழுள்ள கிராமங்கள் வருவாய்க் கிராமங்கள் என அழைக்கப்படுகின்றன. உள்ளாட்சித்துறையின் கீழுள்ள கிராமங்கள் ஊராட்சி என்றழைக்கப்படுகின்றன. பேரூராட்சி என்றாலே அது நகர்ப்பகுதிதான். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி எல்லை விரிவாக்கப்பட்டால் அல்லது அவைகளுடன் சேர்க்கப்படும் கிராமங்கள் நகரின் ஒரு பகுதியாகத்தான் கணக்கில் கொள்ளப்படுகின்றன. எனவே சிவத்தையாபுரம், சாயர்புரம் பேரூராட்சியுடன் இணைக்கப்பட்ட ஒரு பகுதியாக இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் எனும் பகுப்பு பொருந்தாது. இக்கட்டுரை சாயர்புரம் பேரூராட்சி கட்டுரையின் ஒரு பகுதியாக இருப்பது சரியாக இருக்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:35, 10 அக்டோபர் 2012 (UTC)