பேச்சு:சிறுநீரில் குருதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு மாற்ற கோரிக்கை[தொகு]

குருதிச் சிறுநீர் என்பது haematuria என்பதன் நேரடித் தமிழாக்கம் போன்று உள்ளது. ஆனால் இது "சிறுநீரில் குருதி காணப்படுதல்" என்பதன் அர்த்தத்தைச் சரியாகத் தரவில்லை எனத் தோன்றுகின்றது. இதனை இன்னும் சரியாக எப்படிக் குறிப்பிடலாம் எனக் கருத்தறிய விரும்புகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 10:53, 14 மே 2015 (UTC)

குருதிச் சிறுநீர் என்பது குருதியுடனான சிறுநீர் என்றே எனக்குப் பட்டது. தமிழ் விக்சனரியில் சிறுநீரில் குருதி எனத் தரப்பட்டுள்ளது. இது தெளிவாக உள்ளது. சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இரத்தமூத்திரம் எனத் தரப்பட்டுள்ளது. பேச்சு வழக்கிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. குருதியுடை சிறுநீர் பொருந்துமா ?--மணியன் (பேச்சு) 05:17, 17 மே 2015 (UTC)
குருதியுடை சிறுநீர் பொருத்தமான தலைப்பே. ஆனால் சிறுநீரில் குருதி என்ற விக்சனரியின் பதம் தெளிவாகவும், எளிமையாகவும் இருக்குமெனத் தோன்றுகின்றது. எனவே சிறுநீரில் குருதி என்ற தலைப்பையே தெரிவு செய்தால் என்ன? உண்மையில் எனக்கு முதலில் குருதிச் சிறுநீர் என்ற தலைப்பைப் பார்த்ததும், அது எதனைக் குறிக்கின்றதென்பது சரியாகப் புரியவில்லை. பின் கட்டுரையின் உள்ளே சென்று பார்த்துப் புரிந்துகொண்டேன். எனவே இந்த ஐயம் பலருக்கும் வரக்கூடும் என்பதாலேயே அதுபற்றி அங்கே கருத்திட்டேன்.--கலை (பேச்சு) 20:48, 18 மே 2015 (UTC)