பேச்சு:சிறிய சீழ்க்கைச்சிரவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இப்பறவை Lesser Whistling Duck (Dendrocygna javanica) சீழ்க்கைச் சிறகி [1] என்றும் சிறிய சீழ்க்கைசிரவி [2] என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. தலைப்பை மாற்றுவது சரியாக இருக்குமா? இத்தலைப்பில் (சிறு சிறகி) வழிமாற்று ஏற்படுத்திடலாமா?
  • பறவை உலகம் (சலீம் அலி) - ஒரு மிகச்சிறந்த அறிமுக நூல். இருப்பினும் தற்போது பெரும்பாலான பறவை ஆர்வலர்களும் களப் பறவையியல் ஆர்வலர்களும் பயன்படுத்தும் கையேடாக மேலே குறிப்பிட்டுள்ள இரு நூல்களுமே இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தென் இந்திய பறவைகள் நூல். --PARITHIMATHI (பேச்சு) 05:26, 5 மே 2017 (UTC)[பதிலளி]
பயனர்:Info-farmer!! சிறிய சீழ்க்கைசிரவி [3] என்பதே மிகச் சரியாக இருக்கும்.--PARITHIMATHI (பேச்சு) 13:52, 5 மே 2017 (UTC)[பதிலளி]
'ச்' இணைக்கலாம் தானே?('சிறிய சீழ்க்கைச்சிரவி)--உழவன் (உரை) 18:59, 5 மே 2017 (UTC)[பதிலளி]
ஆம். சிறிய சீழ்க்கைச்சிரவி என்பது சரியே. 'ச்' வரும் தானே?--PARITHIMATHI (பேச்சு) 03:38, 6 மே 2017 (UTC)[பதிலளி]

பயனர்:Info-farmer சீழ்க்கைச்சிரவி எனும் ஒரு கட்டுரை இருப்பதைக் கவனியுங்கள். அதனை எழுதியவர் சீழ்க்கைசிரவி[1]அல்லது சீழ்க்கை சிறகி (Fulvous whistling duck – Dendrocygna bicolor) என்று கொடுத்திருப்பதைப் பாருங்கள். தாங்கள் செய்த வழிமாற்றை மீளமைக்க முடியுமா?--சி.செந்தி (உரையாடுக) 19:07, 5 மே 2017 (UTC)[பதிலளி]

சிறிய சீழ்க்கைச்சிரவி என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.--PARITHIMATHI (பேச்சு) 03:38, 6 மே 2017 (UTC)[பதிலளி]
சி.செந்தி அனைத்திலும் இலக்கணப்பிழை நீக்கியுள்ளேன். //தாங்கள் செய்த வழிமாற்றை மீளமைக்க முடியுமா?// என்பதை என்னால் புரிந்து கொள்ளவில்லை. இன்று தான் கவனித்தேன். விக்கி மூலம் வரும் கட்டுரை மாற்றஅறிவிப்பு முறை இன்றே எனக்கு சீராகியது. அதனால் தான் உடன் செய்ய இயலவில்லை. மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கி அறிமுகத்தை தரும் திட்டம் நடந்து வருகிறது. அதில் 5மாவட்டங்களில் செயற்பட எனக்கு அனுமதி கிடைத்துள்ளதது. தொடக்க நிலையில் இருப்பதால், பல இடர்களைத் தாண்ட வேண்டியுள்ளது. எனவே, அதுபற்றிய சிந்தனையில் இருப்பதால், உடன் அவ்வப்போது செயற்பட முயல்கிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 06:32, 7 மே 2017 (UTC)[பதிலளி]
@Info-farmer: ஏன் வழிமாற்றில்லாமல் நகர்த்தியுள்ளீர்கள். சீழ்க்கைச் சிறகி என்பது தவறான சொல் என்பதை உறுதியாகக் கூற முடியுமா?--Kanags \உரையாடுக 06:23, 7 மே 2017 (UTC)[பதிலளி]
பயனர்:PARITHIMATHI! பறவையியலில் ஆழ்ந்த அனுபவமும், களப்பணி செய்யும், தமிழக அமைப்புகளிலும் இணைந்து செயற்படுபவர் என்பதை நேரில் கண்டவன். எனவே, அவரது முன்மொழிவை ஏற்றுள்ளேன். மேலும் இச்சொல் வேறு எதனுடனும் இணைக்கப்படவில்லை சீழ்க்கைச் சிறகி என்ற வழிமாற்று சரிதானே?--உழவன் (உரை) 06:37, 7 மே 2017 (UTC)[பதிலளி]
இணைக்கப்படவில்லை என்பதற்காக வழிமாற்றை நீக்குவதில்லை. அச்சொல் புழக்கத்தில் உள்ளதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். அவ்வாறிருந்தால், வழிமாற்று வைத்திருக்க வேண்டும். இல்லையானால் பரவாயில்லை.--Kanags \உரையாடுக 06:40, 7 மே 2017 (UTC)[பதிலளி]
வழிமாற்று தேவை என்பதை உணர்ந்தேன். இது பன்னாட்டிலும இருப்பதை இப்பொழுதே படித்தேன். இனி இதுபோல அவசரப்பதிவுகள் நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன். உரிய மேம்பாட்டை, இரு பெயர்களுக்கும் தேவையெனில் செய்யக் கோருகிறேன்.--உழவன் (உரை) 06:45, 7 மே 2017 (UTC)[பதிலளி]
குழப்பமாக உள்ளதே.....
கட்டுரை சீழ்க்கைச்சிரவியில் இவ்வாறு உள்ளது:

சீழ்க்கைச்சிரவி அல்லது சீழ்க்கைச் சிறகி (Fulvous whistling duck – Dendrocygna bicolor) என்பது ஆழமில்லாத ஈரநிலங்களிலும் சதுப்புநிலங்களிலும் காணப்படும் ஓர் வகை உயர்ந்து மெலிந்த வாத்தாகும்[2]. ஒன்று இந்த வழிமாற்று (சீழ்க்கைச் சிறகி) சீழ்க்கைச்சிரவி கட்டுரைக்குக் கொடுக்கப்படல் வேண்டும் அல்லது அக்கட்டுரையில் இருந்து "அல்லது சீழ்க்கைச் சிறகி" எனும் வாசகம் அகற்றப்படல் வேண்டும்.--சி.செந்தி (உரையாடுக) 07:07, 7 மே 2017 (UTC)[பதிலளி]

[4] - இந்நூலில் Dendrocygna javanica-வை Lesser whistling teal என்று தான் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்; இந்நூல் 1998-ஆம் ஆண்டுப் பதிப்பு. தமிழ்ப்பெயர்களாக அவர் கூறுவது:
  • சீழ்க்கைச் சிறகி (அவருடைய இன்னொரு நூலான தென்னிந்தியப் பறவைகள் - இலிருந்து)
  • தில்லித் தாரா (Handbook of the Birds of India and Pakistan - Salim Ali and Dillon Ripley)
  • கச்சுத் தாரா (வின்சுலோ - தமிழ்-ஆங்கில அகராதி)
  • சிட்டித்தாரா, செங்கிளுவை (A Checklist of Birds of Tamilnadu - M.A. Badshah)
  • கீச்சுக்கிளுவை (Guide to Bird Gallery - Chennai Museum - S.T. Sathyam)
  • மரத்தாரா (வேடந்தாங்கல் - இனியவன்) மற்றும்
  • எரண்டா (மலையாளச் சொல்).

இவற்றுள் அவர் பரிந்துரைப்பது சீழ்க்கைச் சிறகி என்ற பெயரையே. இருப்பினும் அவர் நூலில் Lesser whistling teal (duck)-ஐ விடவும் பெரியதாக உள்ள Fulvous whistling duck-ஐப் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே தான் [5] நூலில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களைக் கையாள்வது சரியாக இருக்கும். இந்நூலில்

  • 1. Lesser whistling duck-ஐ சிறிய சீழ்க்கைசிரவி (Lesser) என்று வந்ததால்) என்றும்
  • 2. Fulvous whistling duck-ஐ சீழ்க்கைசிரவி என்றும் குறிப்பிடுகின்றார். 'ச்' சேர்க்கப்பட வேண்டும்; எனவே, 1. சிறிய சீழ்க்கைச்சிரவி 2. சீழ்க்கைச்சிரவி

--PARITHIMATHI (பேச்சு) 16:11, 7 மே 2017 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழில் பறவைப் பெயர்கள் - டாக்டர் க. ரத்னம் - பக். 21(40)
  2. தென் இந்திய பறவைகள் - ரிச்சர்ட் கிரிமிட், டிம் இன்சுகிப்; தமிழில்: கோபிநாதன் மகேஷ்வரன் - பக். 52(2)
  3. தென் இந்திய பறவைகள் - ரிச்சர்ட் கிரிமிட், டிம் இன்சுகிப்; தமிழில்: கோபிநாதன் மகேஷ்வரன் - பக். 52(2)
  4. தமிழில் பறவைப் பெயர்கள் - டாக்டர் க. ரத்னம் - பக். 21(40)
  5. தென் இந்திய பறவைகள் - ரிச்சர்ட் கிரிமிட், டிம் இன்சுகிப்; தமிழில்: கோபிநாதன் மகேஷ்வரன் - பக். 52(2)