பேச்சு:சிறப்பு நிறைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பந்துப் பரிமாற்றம் சரி, சூப்பர் என்பது ஆங்கிலச் சொல்லல்லவா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:08, 29 செப்டெம்பர் 2012 (UTC)

மீப்பந்துப் பரிமாற்றம் எனலாமா? --மதனாகரன் (பேச்சு) 11:24, 29 செப்டெம்பர் 2012 (UTC)
பரிந்துரைகளை வரவேற்கிறேன். சூப்பர் லீக், சூப்பர் ஓவர் இரண்டுக்கும் பொருந்துமாறு இருத்தல் நலம். நானும் மீ என்ற உரிச்சொல்லை எண்ணினேன். இருப்பினும் அதைவிட பொருத்தமாக ஏதேனும் கிடைக்குமா என இங்கு கருத்திட இருந்தேன். மேலும் மீப்பந்து என்றால் பந்திற்கான உரிச்சொல்லாகி விடுகிறது. தனிச்சொல்லாயின் நலமென எண்ணினேன். மேநிலை அல்லது மீநிலை என்ற சொற்களை கருதி இருந்தேன். இவை சூப்பர் எட்டு நிலைக்கும் மேநிலை எட்டு எனப் பொருந்தும். ஏனையோரின் கருத்தறிந்து தலைப்பை மாற்றி விடலாம். --மணியன் (பேச்சு) 13:45, 29 செப்டெம்பர் 2012 (UTC)

மேநிலை என்று வருவது தவறானது. மேல் + நிலை என்பது மேனிலை/மேல் நிலை என்றே வர வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 02:21, 30 செப்டெம்பர் 2012 (UTC)

மிகச் சிறப்பான பந்துப் பரிமாற்றம் --Anton·٠•●♥Talk♥●•٠· 13:00, 4 நவம்பர் 2013 (UTC)

சிறப்பு அறுவீச்சு- AakashAH120 (பேச்சு) 10:58, 22 சூலை 2019 (UTC)

சிறப்பு வீச்சலகு என்ற தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். AakashAH120 (பேச்சு) 02:25, 24 சூலை 2019 (UTC)

சிறப்பு நிறைவு[தொகு]

அறுவீச்சு மற்றும் வீச்சலகு ஆகியவை புரிந்துகொள்ள சிக்கலான சொற்களாக உள்ளதால் சிறப்பு நிறைவு என்ற பெயரை பரிந்துரைக்கிறேன். AakashAH120 (பேச்சு) 08:44, 28 சூலை 2019 (UTC)