பேச்சு:சிறப்புக் காட்டுத் தலங்கள்
Jump to navigation
Jump to search
வன விசேச, நவ என்பது போன்ற சொற்கள் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்தவை. தற்காலத்துக்கு ஏற்றாற் போல் எளிய தமிழில் சிறப்புக் காட்டுத் தலங்கள், ஒன்பது கைலாயங்கள் என்று எழுதலாமே? புராண காலத்தில் இருந்த பெயர்களை கட்டுரையின் முதல் வரியில் குறிப்பிடலாம். வழிமாற்று தரலாம். இதே கருத்து (சமயம் சார்) அனைத்துக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். நன்றி.--இரவி (பேச்சு) 04:09, 5 சூலை 2013 (UTC)
- வழக்கில் அச்சொற்களை மற்ற இடங்களில் பயன்படுத்தவில்லை என்றாலும், இந்து சமயம் சார் கட்டுரைகளிலும், ஊடகங்களிலும் மக்கள் பயன்பாட்டிலும் இந்த சொற்கள் பயன்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எளிய தமிழில் எங்கும் பயன்படுத்துவதில்லை என்பதை நான் கூறி தாங்கள் அறிய வேண்டியதில்லை. உதாரணமாக நவ கைலாயங்கள் எனவே மக்களிடம் புழக்கத்தில் உள்ளது, ஒன்பது கைலாயங்கள் என்று நான் கேட்டதில்லை. இவ்வாறு தலைப்பினை மாற்றி, என்னதான் வழிமாற்றுக் கொடுத்தாலும். கூகுள் போன்ற தேடு பொறிகளில் விக்கிப்பீடியாவின் இணைப்பு கீழே செல்ல நேரிடும். இதனை படியெடுத்து வலைதளத்திலோ, வலைப்பூவிலோ நவ கைலாயங்கள் என்று பெயரிட்டால் அதுவே முதன்மை இடத்தினை வகிக்கும். என் கருத்தினையும் பரிசீலிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:37, 5 சூலை 2013 (UTC)
- சமயம் சார் வடமொழிச் சொற்கள் ஊடகங்களிலும் பேச்சு வழக்கிலும் புழக்கத்தில் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். எல்லா துறைகளிலும் இது போல் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, bus, computer, mobile, phone. ஆனால், இவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவிலும் ஊடகங்களிலும் தமிழில் தானே எழுதுகிறோம்? நவக்கிரகம் என்பது எங்கும் புழக்கத்தில் உள்ள சொல். ஆனால், அதன் உண்மையான பொருள் ஒரு சாதாரண மாணவருக்குப் புரியுமா? அதையே ஒன்பது கோள்கள் என்று எழுதினால் அவள் படிக்கும் அறிவியலுடன் தொடர்பு கொண்டு படிக்க முடியும் அல்லவா? இதே ஏரணம் எல்லா பிறமொழி (சமயச்) சொற்களுக்கும் பொருந்தும். வழிமாற்றாக உள்ள சொற்கள் கூட கூகுளில் முந்துவது குறித்து சிறீதரன் ஒரு முறை சுட்டிக் காட்டி இருந்தார். தமிழ் என்ற பெயரில் புரியாத புதிய கலைச்சொற்கள் கூட வேண்டாம். ஒன்பது, காடு போன்ற எளிச சொற்களையாவது பயன்படுத்த முனைவோமே? நன்றி.--இரவி (பேச்சு) 05:21, 5 சூலை 2013 (UTC)
- இப்பெயர் Vana Vishesha Sthalangal என ஆங்கிலத்தில் அழைக்கப்பெறுகிறது. Famous Forest Temples என்று அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். அத்துடன் பெயர்களில் தனித்தமிழை திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை நண்பரே. தாங்கள் உறுதியாக இருப்பின் அனைத்துக் கட்டுரைகளிலும் தாங்களே மாற்றிவிடுங்கள். அத்துடன் கட்டுரைகளிலும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய மறவாதீர்கள். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:13, 5 சூலை 2013 (UTC)
- உங்கள் கட்டுரையின் படி, குறிப்பிட்ட அமைப்பு ஒன்று சில தலங்களுக்கு இப்பெயரை வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே அதற்கான ஆங்கிலப் பெயரையும் வைத்திருக்கிறது. இதை விட வேறு ஆதாரங்கள் உண்டா. கூகுளில் தேடிய போது இந்த ஆங்கிலப் பெயர் நீங்கள் தந்துள்ள ஒரேயொரு வலைத்தளத்திலேயே காணப்படுகிறது. தமிழிலும் எதுவும் அகப்படவில்லை.--Kanags \உரையாடுக 08:38, 5 சூலை 2013 (UTC)
- காரணப் பெயர்களை மொழிபெயர்க்கலாம். எந்தத் துறையிலும் எந்த மொழியிலும் இதற்கு இலட்சக்கணக்கான எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும். ஆங்கில விக்கிப்பீடியாவில் Sthalangal என்று இருக்கிறது. நாம் ஸ் விட்டு எழுதுவது கூட நமது மொழிக்கேற்ற உள்வாங்கல் தான் (இல்லை, ஸ்தலம் என்ற வட மொழிச்சொல்லே தமிழில் இருந்து வந்ததா என்பது வேறு ஆராய்ச்சி). எந்த அளவுக்கு தமிழாக்கலாம் என்பதில் தான் கருத்து மாறுபடுகிறது. வால்மீகி இராமயணத்தை கம்பன் அழகு தமிழில் தந்தது போல் எந்த ஒரு சமயக் கருத்தையும் நல்ல, எளிய தமிழில் தரலாமே? மூல மொழிச் சொல்லை அப்படியே பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயம் இல்லையே? ஒரு இலத்தீனச் சொல்லையோ அரபு மொழிச்சொல்லையோ ஆங்கிலச் சொல்லையோ தமிழாக்கத் தயங்காத நாம் ஏன் வட மொழிச் சொல்லை மட்டும் தமிழாக்கத் தயங்குகிறோம் என்று புரியவில்லை. ஒவ்வொரு கட்டுரையாக சென்று தமிழில் (காடு, ஒன்பது போன்ற சொற்கள் எல்லாம் தனித்தமிழ் இல்லை!) எழுதுவது என்னுடைய நோக்கமன்று. நீங்கள் பல கட்டுரைகளை விரைந்து உருவாக்கி வருவதனால், இந்தக் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்த்துப் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:50, 5 சூலை 2013 (UTC)
- ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்தால் தருகிறேன் கனகரத்தினம் அவர்களே, தங்களுக்கு இக்கட்டுரையின் மீது உடன்பாடில்லையென்றால் ஆதாரம் தேவை என்பதை இணைக்கவும், இல்லையென்றால் அழித்துவிடவும். தக்க ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் எழுதிக்கொள்ளலாம் என்பது என் எண்ணம். இரவி அவர்களே, நான் கருத்தினை தெளிவாக கூறிவிட்டேன். இனி நடவெடிக்கைகள் எடுக்க வேண்டியது தாங்கள்தான். அனைவருக்கும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:55, 5 சூலை 2013 (UTC)