பேச்சு:சிரிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

TRYPPN உங்களின் பெரும்பாலான கட்டுரைகள் இதே பாணியில் உள்ளது. கலைக்களஞ்சிய நடையில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.--Arafat 07:38, 27 பெப்ரவரி 2010 (UTC)

  • எனது கட்டுரைகள் பெரும்பாலும் படக்கட்டுரைகள் தான். நான் படங்களை இணைக்காமல் வெறும் வார்த்தைகளில் எழுதினால் அது குறுங்கட்டுரைகளாக மாறிவிடும்.
  • மேலும் படங்களைப் பார்ப்பதினால் அது பலருடைய சிந்தனைகளை உடனே பார்த்த மாத்திரத்தில் தூண்டும் என்பதும், ஒரு படம் பத்து வார்த்தைகளுக்கு சமம் என்பதும் எனது கருத்தாகும்.
  • தமிழ் விக்சனரியிலிருந்து, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வந்ததினால், கலைக்களஞ்சிய நடையில் எழுத கொஞ்சம் நாட்கள் தேவை. முயற்சிக்கிறேன்.
  • இரண்டு மாதங்களுக்கு முன்பு, தமிழ் தட்டச்சு பயிற்சி எனக்கு போதுமானதாக இல்லை. தற்போது நல்ல முன்னேற்றம். கலைக்களஞ்சிய நடையில் எழுத முயற்சிக்கிறேன். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:36, 27 பெப்ரவரி 2010 (UTC)
இக்கட்டுரையின் தலைப்பை சிரிப்பு (en:smile) என மாற்றி பொதுவான கட்டுரையாக்கலாம். ஆங்கில விக்கியில் smile, en:laughter என இரு கட்டுரைகள் உள்ளன. பார்க்க.--Kanags \உரையாடு 09:12, 27 பெப்ரவரி 2010 (UTC)
  • சிரிப்போ சிரிப்பு --- என்ற கட்டுரையை, சிரிப்பு --- என்ற தலைப்பிற்கு மாற்றிவிட்டேன்.
  • தாங்கள் கூறியபடி, smile, laughter--- என்ற கட்டுரைகளைப்படித்துப் பார்த்தபின், இன்னும் கொஞ்சம் தகவல்களை எழுத முயற்சிக்கிறேன்.
  • படங்களை இணைப்பதில் ஒருவிதத் தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இதற்கு ஏதேனும் வரைமுறை அல்லது வரையறை உள்ளதா எனபதனை எனக்குத் தெரியப்படுத்தவும்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:17, 27 பெப்ரவரி 2010 (UTC)

தமிழ் 99 விசைப்பலகையை உபயோகித்து பாருங்களேன். தட்டச்ச சுலபமாக இருக்கும்.--Arafat 14:29, 27 பெப்ரவரி 2010 (UTC)

கருத்து[தொகு]

  • திருச்சி-பெரியண்ணன், கட்டுரையில் அளவுக்கு அதிகமாகப் படங்களை இடாமல் இருப்பது நல்லது. கீழே பட வரிசையில் சிறிய அளவில் பல படங்கள் இருந்தால் வேண்டியவர்கள், சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.
  • முயல்கிறேன் என்று எழுதுவது சரி. முயற்சிக்கிறேன் என்பது தவறு (இந்த வழுவான சொல் சில அகராதிகளில் தவறாக ஏற்றப்பட்டும் உள்ளது). பயில்-> பயில்கிறேன் (பயிற்சிக்கிறேன் அல்ல), தளர்ச்சிக்கிறேன். வளர்ச்சிக்கிறேன் என்பதெல்லாம் எப்படி தளர்கிறேன், வளர்கிறேன் என்று இருக்க வேண்டுமோ அது போல முயல்கிறேன் என்பதே சரியான வழக்கு. "பெரிய" எழுத்தாளர்களும் செய்யும் அடிப்படையான பிழை இந்த சொல்லாட்சி. --செல்வா 15:05, 27 பெப்ரவரி 2010 (UTC)

படங்களைக் குறைக்கலாம்[தொகு]

  • TRYPPN தங்களுடைய சிரிப்பு கட்டுரையில் படங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. அனைத்துப் படங்களும் நன்றாக இருக்கின்றன. இவற்றைத் தொகுத்த உங்களின் முயற்சி பாராட்டுக்குரியதே. இருப்பினும் கட்டுரைக்குப் பதில் முழுமையாகப் படம் காட்டுவது அவ்வளவு நன்றாக இருக்காது. மேலும் ஒவ்வொரு துணைத்தலைப்புகளின் கீழும் செய்திகளுடன் தொடர்புடைய ஒரு படம் மட்டும் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட படங்கள் என்பது தேவையற்றதே. எலியின் சிரிப்பு என்ற படம் பல தலைப்புகளின் கீழ் இடம் பெற்றிருக்கிறது.கவனிக்கவும்! கட்டுரைகளில் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.--Theni.M.Subramani 16:56, 27 பெப்ரவரி 2010 (UTC)

கருப்பர்களின் சிரிப்பு என்பதை மாற்றலாமே? தமிழர்களே கருப்புதான் , நாம் மற்றவர்களை கருப்பு என விளம்பலாமா? இதை ஆப்பரிக்கர்களின் நகைப்பு எனலாமே? நன்றி -- மகிழ்நன் 05:24, 2 மார்ச் 2010 (UTC)

  • வணக்கம். தொடர்பு கொண்டமைக்கு நன்றி.
  • தாங்கள் கூறியதை நினைவில் கொள்கிறேன். தாங்கள் கூறியபடி தலைப்பை மாற்றுகிறேன். இன்னும் இரண்டு நாட்களில் இக்கட்டுரையினை செய்திகளுடன் விரிவாக்கம் செய்வேன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:36, 2 மார்ச் 2010 (UTC)

நடை மாற்ற பரிந்துரை[தொகு]

திரு. பெரியண்ணன் அவர்களே. நீங்கள் மிகவும் சிரத்தை எடுத்து இக்கட்டுரையை வளர்ப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. எந்தவொரு மொழியின் விக்கிபீடியா கட்டுரைகளும் கலை களஞ்சிய வடிவில் இருப்பது மிகவும் அவசியம். தாங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இக்கட்டுரை கலைகளஞ்சிய வடிவில் இல்லை. சற்று விரிவாக கூறவேண்டுமெனில் இக்கட்டுரைக்கு இணையான ஆங்கில கட்டுரை en:laughter பாருங்கள். அக்கட்டுரை தரும் செய்திகளை தாங்கள் எழுதியுள்ள கட்டுரையுடன் ஒப்பிட்டு பாருங்கள். நமது கட்டுரைகளில் செய்திகளுக்கு முக்கியதுவம் தரவேண்டும், மேலும் அச்செய்திக்கு வலுசேர்க்கும் படங்களை மட்டும் இணைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நான் பறவையை பற்றி எழுதவேன்டுமெனில் பறவைகளை பற்றிய அடிப்படிக்குறிப்புகளுடன் ஒன்று அல்லது இரண்டு படங்களை சேர்த்தால் போதும், விக்கி காமன்சு வைப்பகத்தில் (Wiki Commons Server) "Bird" என்று கொடுத்தால் ஆயிரக்கணக்கான பறவைகள் படக்கோப்புகள் வரும்; அவையனைத்தையும் அக்கட்டுரையுடன் இணைப்பதால் என்ன பயன் சொல்லுங்கள்? நீங்கள் குறிப்பாக இக்கட்டுரையை வளர்க்கவெண்டுமெனில் ஆங்கில விக்கியில் இல்லாத பல செய்திகளை வேறு இடங்களில் இருந்து எடுத்து தக்க சான்றுகளுடன் இங்கு கொடுங்கள். உங்களது அயராத இம்முயற்சி தொடர வாழ்த்துகள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகமெனில் தயங்காமல் இங்கோ அல்லது ஆலமரத்தடியிலோ கேளுங்கள். நன்றி--கார்த்திக் 05:21, 2 மார்ச் 2010 (UTC)

  • வணக்கம். தொடர்பு கொண்டமைக்கு நன்றி.
  • தாங்கள் கூறியதை நினைவில் கொள்கிறேன். தாங்கள் கூறியபடி படங்களைக் குறைக்கிறேன்.
  • Smile and Laughter --- என்ற இரு கட்டுரைகளையும் படித்து அவற்றில் உள்ள கருத்துக்களை இங்கு எழுதுவேன். இன்னும் இரண்டு நாட்களில் இக்கட்டுரையினை செய்திகளுடன் விரிவாக்கம் செய்வேன். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:45, 2 மார்ச் 2010 (UTC)
நன்றி பெரியண்ணன். தங்களுக்கு கட்டுரை இயற்றுவதில் ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள். நன்றி--கார்த்திக் 06:53, 2 மார்ச் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிரிப்பு&oldid=489378" இலிருந்து மீள்விக்கப்பட்டது