பேச்சு:சின்னையன் பேட்டைக் குளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருளரசன், இதன் பெயர் "சின்னையன்பேட்டைக் குளம்" என்றே தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்ட Directory of Monuments in Tamilnadu என்னும் நூலில் காணப்படுகிறது. கட்டுரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ள இணையத்தளத்திலும் "சின்னையன்பேட்டை" என்றே உள்ளது. தலைப்பை மாற்றுவதில் மாற்றுக்கருத்து உண்டா? --மயூரநாதன் (பேச்சு) 11:43, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]

மயூரநாதன் அக்குளத்தை நான் நேரில்பார்த்துள்ளேன் அங்கு சின்னியம்பேட்டை என்றே பெயர்பலகை பார்த்ததாக நினைவு இருந்தாலும், பெயர்மாற்ற எவ்வித மறுப்பும் இல்லை arulghsrArulghsr (பேச்சு) 14:24, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]

அருளரசன், தொல்லியல் துறையின் வெளியீட்டில் "சின்னையன்பேட்டை" என்று இருப்பதால் தலைப்பை அவ்வாறே மாற்றுவது நல்லது. கட்டுரையில், "சின்னியம்பேட்டை" என்ற பெயரும் வழங்குவதாகக் குறிப்பிடலாம். நீங்கள் நேரில் பார்த்திருப்பதால், குளத்தின் படங்கள் ஏதாவது எடுத்தீர்களா? இருந்தால் பதிவேற்றலாமே. --மயூரநாதன் (பேச்சு) 14:30, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]

மயூரநாதன் நான் பார்த்து பத்தாண்டுகளாகி இருக்கும் அப்போது படம் எதுவும் எடுக்கவில்லை மீண்டும் செல்லும்போது படம் எடுக்கிறேன். தொல்லியல் வெளியீட்டில் உள்ளவாரே பெயரை மாற்றிவிடலாம் அதுதான் சரியும்கூட அருளரசன்Arulghsr (பேச்சு) 14:37, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]

நன்றிகள் அருளரசன். --மயூரநாதன் (பேச்சு) 14:40, 27 சூன் 2015 (UTC)[பதிலளி]