பேச்சு:சிந்து பைரவி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிந்து, வேலைக்காரி தாமரையின் மகள். அப்பாவை இழந்தவள். பைரவி, மிகப்பெரும் செல்வந்தர் ஜோகி தாகூரின் மகள். தாமரை ஜோகி வீட்டில் வேலைக்காக சேர்கிறாள். அங்கு சிந்துவும் பைரவியும் தோழிகள் ஆகினர். பிறகு பைரவி, தன் பாட்டியின் தூண்டுதலால் சிந்துவை வெறுக்கிறாள். சி்ந்து-வீர் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அதை பாட்டி திருடி ராதோரிடம் கொடுக்கிறாள். ராதோர்-பைரவி அவனுக்கு யுவராஜ் என பெயரிட்டனர். பைரவி-ராதோர் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பே பிறந்ததால் பைரவி கைவிட்டாள். அந்த குழந்தையை கண்டெடுத்த சிந்து முக்தா என்ற பெயரில் வளர்த்து வந்தாள். பிறகு சொத்துக்காக கண்ணாவை கொல்ல நினைத்தான் அவினாஷ். கண்ணாவை காப்பாற்றிய சிந்து, அவனையும் தன் மகன் போல வளர்த்து வந்தாள். பைரவி, ராதோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு காணாமல் போனாள். பிறகு யுவராஜ் சிந்து மகன் என்றும், முக்தா பைரவி மகள் என்றும் தெரிய வருகிறது. பைரவியை எங்கு தேடியும் கிடைக்காததால் மனமுடைந்த ராதோர், வேறு ஊருக்கு செல்கிறான். சிந்து-வீர் தம்பதியை பழிவாங்க நினைத்தான் அவினாஷ். வீரை கொல்ல முயன்றான். ஆனால் சிந்து அவினாஷை கொன்று வீரை காப்பாற்றினாள். இதனால் சிந்துவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் சிந்து ஒரு பெண் குழந்தையை பெற்றாள். அதை தாமரையிடம் ஒப்படைத்தாள். அந்த குழந்தை பெயர் மகதி.
  18 வருடங்களுக்குப் பிறகு கதை தொடர்கிறது. சிந்துவிற்கு விடுதலை வழங்கப்பட்ட பின்பும் அவள் சிறைச்சாலையில் ஒரு பள்ளியை தொடங்குகிறாள். தாமரை, ஜோகி வீட்டை விட்டுவிட்டு தன் குப்பத்தில் வாழ்ந்தாள்.வேலைக்காரி என்று தூற்றப்பட்ட தாமரை இன்று வாழ்க்கையில் உயர்ந்தாள்.  தாமரையின் அரவணைப்பில் வளர்கிறாள் மகதி. கண்ணாவிற்கு சுரபி என்ற மனைவி இருந்தாள். மகதி சிந்துவை கொலைகாரி என்று தெரிந்ததும் வெறுக்கிறாள். புஷ்கரின் செயலால் வீட்டை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார், ஜோகி. ஆனால் தாமரை அவரை காப்பாற்றுகிறார். பிறகு தாமரை மீண்டும் ஜோகி வீட்டில் சேர்கிறாள். பைரவியின் பாட்டி முக்தாவையும் மகதிக்கு எதிராக மாற்றினார். ராதோர் தன் மகள் முக்தாவுடன் சேர்ந்தான். பிறகு யுவராஜ், முக்தாவை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறான். முக்தாவை காப்பாற்றிய சிந்து, யுவராஜுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்கிறாள். இதனால் யுவராஜ் சிறை செல்கிறான். இதன்மூலம் சிந்துவை முக்தா தன் அம்மாவாகக் கருதத் தொடங்கினாள். சிந்துவின் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை உருவாக்க நினைத்த முக்தா, வீர்-சிந்து திருமணம் பற்றி யோசித்தாள். பிறகு வீர்-சிந்து மீண்டும் மணந்து கொள்கின்றனர். 
  அவினாஷின் மகன் ஆகாஷ். மகதியை பழிவாங்க விஷ்ணு என்ற பொய்யான பெயரில் அவளை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். இந்நிலையில் ஆகாஷை பற்றி முக்தா அறிந்து கொள்கிறாள். புகுந்த வீட்டில் மகதி துன்புறுத்தப்படுகிறாள். அனைத்தையும் ஆகாஷுக்காக பொறுத்துக் கொள்கிறாள் மகதி. வீரின் பெரியப்பா தேஜா முக்தாவை மணக்க முயல்கிறான். ஆனால் முக்தாவிற்கு பதிலாக பைரவி அமர்ந்து அவனை மணந்தாள். வீர் தாத்தாவை தேஜா தான் கொலை செய்தான் என்ற உண்மையை பைரவி அறிகிறாள். அதனால் தேஜா பைரவியை துப்பாக்கியால் சுட்டான். இதற்கிடையில். சிந்துவிற்கு விபத்து ஏற்பட்டு இறக்கும் தருவாயில் தன் இதயத்தை பைரவிக்கு கொடுத்து அவளை காப்பாற்றினாள். பைரவியின் பாட்டி, சிந்துவைப் பற்றி புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டார். சிந்துவின் இறப்பால் மனமுடையும் வீர், அமெரிக்கா செல்கிறான். சிந்துவின் இறப்பைப் பற்றி ஆகாஷும் அவன் குடும்பமும் மகதியிடமிருந்து மறைத்தனர். 
   சுரபி, ஆகாஷின் தங்கை என்பதும், அவளும் பழிவாங்கவே வந்தவள் என்பதும் தெரிந்த கண்ணா அவளை பிரிகிறான். சுரபிக்கு ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு இறந்தாள்.  ஆகாஷின் உண்மை முகத்தை அறியும் மகதி அவனை வெறுக்கிறாள். முக்தா-விஷ்ணு மெகந்தி சடங்கின் போது ஆகாஷை சுரபியின் அப்பா சுட முயன்றான். அவனை காப்பாற்றிய மகதிக்கு கால் உணர்ச்சியற்று போகிறது. பிறகு மகதியின் வேண்டுதலால் முக்தா-விஷ்ணு மணக்கின்றனர். 
  மகதிக்கு கால் முடியாமல் போனதை ஆகாஷிடம் அவன் அம்மா மறைக்கிறாள். ஆகாஷுக்கு அம்பிகா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க முயல்கிறாள். மகதி வாழ்க்கை நன்றாக இருக்க நீ திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றதால் ஆகாஷும் சம்மதித்தான். பிறகு மகதிக்கு கால் முடியாமல் போனதை அறியும் ஆகாஷ் அதிர்ச்சி அடைந்தான். அவளை மணக்கிறான். அம்பிகா, ஆகாஷை பழிவாங்க அவன் தம்பி சங்க்ராந்தை மணக்கிறாள். ஆகாஷின் அம்மா மனம் திருந்தி மகதியை ஏற்றுக்கொண்டார். அவள் மகதியை கொல்ல பல திட்டங்கள் தீட்ட, அனைத்தும் தோல்வியில் முடிந்தது. மகதி குணமடைகிறாள். அம்பிகாவைப் பற்றி அறியும் மகதி, அவளது உண்மை அடங்கிய வீடியோவை வைத்து மிரட்டுகிறாள். இருவரும் தனியாக சந்தித்தனர். இறுதியில் அம்பிகா, மகதி முன் தீக்குளித்து இறக்கிறாள். அம்பிகாவை கொன்றதற்காக மகதிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் அம்பிகா உயிரோடு இருந்தாள். தீக்குளித்து இறந்தது வேறொரு பெண். திட்டம் போட்டு இவற்றையெல்லாம் செய்தாள் அம்பிகா. இறுதியில் அம்பிகாவை ராதோர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கிறான். அம்பிகா சிறைக்குச் செல்ல, மகதி விடுவிக்கப்பட்டாள். 


குறுகிய சிறு உள்ளடக்கம் போதுமே!!! இவை தேவை அற்றவை. --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:54, 29 செப்டம்பர் 2015 (UTC)