பேச்சு:சித்திரை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூர நாதன், தமிழ் நாட்காட்டி குறித்து கட்டுரை தொடங்க நெடு நாட்களாய் எண்ணியிருந்தேன். நீங்கள் தொடங்கி வைத்திருப்பதற்கு நன்றி. தமிழ் வருடங்கள் குறித்தும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். அப்புறம், சித்திரை, ஏப்ரல் 14 ஆம் நாள் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருமுறை ஏப்ரல் 15ல் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியதாய் எனக்கு ஞாபகம். இது குறித்த தகவலை சரி பார்க்க இயலுமா? நன்றி. --ரவி (பேச்சு) 17:07, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

ரவி, உண்மையில் தமிழ் ஆண்டுகளைப் பற்றி எழுதத் தொடங்கியது சிவகுமார். ஆனால் சித்திரை பற்றி எழுதியது நான் தான். நீங்கள் சொல்வது சரியாக இருக்கக் கூடும் சரி பார்க்கிறேன். Mayooranathan 17:22, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

அப்படியா, சிவக்குமாருக்கும் என் பாராட்டுக்களும் நன்றியும். எந்தெந்த ஆண்டுகளில் மட்டும் ஏப்ரல் 15ல் புத்தாண்டு தொடங்கும் என விளக்கினால் பயனுள்ளதாய் இருக்கும்--ரவி (பேச்சு) 17:25, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

தமிழ் மாதங்கள் பக்கத்தையும், தனித்தனி மாதங்கள் பக்கங்களையும் விரிவாக்க எண்ணியுள்ளேன். விரைவில் எழுதுகிறேன். Mayooranathan 17:34, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

தமிழ் மாதங்களா, இந்து மாதங்களா?[தொகு]

மாதங்களின் பெயர்கள் தமிழ்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சித்திரையை தொடக்கமாக வைத்து கணிக்கும் முறை தமிழ் மக்கள் பண்பாடா, அல்லது இந்துக்கள் பண்பாடா என்பதில் குழப்பம் இருக்கிறது.

சித்திரை புத்தாண்டு தமிழர் திருநாள் இல்லை என அறிந்திருக்கிறேன். அது இந்துமயமாக்கலுக்கு பின்னர்தான் கொண்டாடப்பட ஆரம்பித்திருக்க வேண்டும். --மு.மயூரன் 10:15, 16 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]

மயூரன், தமிழர் பயன்படுத்தும் காலக்கணிப்பு முறை ஒரு பரந்த இந்து காலக்கணிப்பு முறையின் ஒரு பகுதி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் தமிழ் முறை இந்தியாவின் ஏனைய பகுதிகளில் புழக்கத்திலுள்ள முறைகளைவிட மாறுபட்டது. வட இந்தியாவின் பெரும்பகுதியில் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்களைக் கணிக்கிறார்கள். ஆனால் தமிழர், மலையாளிகள், வங்காளிகள், ஒரியர்கள் மட்டுமே இந்தியாவில் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைக் கணிக்கிறார்கள். இந்தியக் காலக் காலக் கணிப்புப் பற்றி ஆராய்பவர்கள் தமிழ் முறையைத் தனியான ஒரு முறையாகத்தான் குறிப்பிடுகிறார்கள். எனவே சித்திரையை முதலாகக் கொண்ட மாதக் கணிப்பு முறை தமிழருக்குச் சிறப்பானதுதான். ஆனாலும் நீங்கள் நினைப்பதுபோல் தமிழ் மாதங்களின் பெயர்கள் தமிழ் அல்ல. நட்சத்திரங்களின் வட மொழிப் பெயர்களைத் தழுவியவைதான். இந்தியா முழுவதும் சமயம், சோதிடம் மற்றும் தொடர்புள்ள துறைகளில் வடமொழி ஆதிக்கம் செலுத்தியபோது இச்சொற்கள் தமிழர் மத்தியில் புழக்கத்துக்கு வந்தன.இந்துக் காலக் கணிப்பு முறை, தமிழ் மாதங்கள் ஆகிய கட்டுரைகளையும் பாருங்கள். Mayooranathan 15:20, 16 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]
நன்றி மயூரநாதன். உங்கள் மூலம் ஒரு புதிய விடயத்தையும் விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன்.ஆர்வமூட்டக்கூடிய கட்டுரை. --மு.மயூரன் 15:41, 16 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சித்திரை&oldid=18984" இருந்து மீள்விக்கப்பட்டது