பேச்சு:சிதம்பரம் நடராசர் கோயில்
அமைவு
[தொகு]தில்லை நடராஜைர் ஆலயம் உலகின் மையப்புள்ளீயில் அமைந்துல்லது இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சிற்றம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம். சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.
- கீழ்கண்ட நிகழ்வினைப் பற்றிய செய்தியை கட்டுரையின் பகுதியிருந்து பேச்சுப் பக்கத்திற்கு நகர்த்தியிருக்கிறேன். ஒருவர் வாகனத்தில் கோவிலுக்கு வந்தது செய்தியாக இருக்கலாம். கலைக்களஞ்சியத்தில் இடம் பெரும் அளவிற்கு இச்செய்திக்கு அருகதையில்லை என நினைக்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் உரையாடவும். நன்றி.
வரலாற்றில் முதல் நிகழ்வு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்குள் தனிக்கோயிலாக ஸ்ரீபாண்டிய நாயகர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு காஞ்சி சங்கர மடம் சார்பாக 4 கோடிகள் செலவில் திருப்பணி நடத்தப்பட்டு குடமுழுக்கு செய்யப்படும் என்று காஞ்சிமட பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவித்திருந்தார். இதற்காக அங்கு சென்ற அவர் கோவில் உட்பிரகாரம் வரை வாகனத்தில் சென்று இறங்கினார்.பின்னர் வெளிப்பிரகாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் ஏறி சென்றார். இந்த நிகழ்வு வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்துள்ளது.[1]
--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:20, 11 மார்ச் 2015 (UTC)
- ↑ காரில் வந்த ஜெயேந்திரர்- நடராஜர் கோயில் வரலாற்றில் முதன்முறையாக நடந்தது தி இந்து தமிழ் பார்த்த நாள் 24.01.2014