பேச்சு:சிண்டு மான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@செல்வா: - கட்டுரைத் தலைப்புப் பற்றிய தங்கள் கருத்தை விரும்புகிறேன். Tuft என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் இருப்பின் நன்று. நன்றி --சிவக்குமார் (பேச்சு) 11:20, 16 மே 2020 (UTC)எயிறு[பதிலளி]

எயிறு என்றால் பல். tuft என்பது குடுமி. யானை, மயில் போன்ற விலங்குகளின் தலியின் உச்சியில் இருக்கும் முடியைக் குஞ்சி என்பார்கள்.

குஞ்சி என்னும் தலைச்சொல்லுக்கு இரண்டாவது பொருளாகத் தமிழ்ப்பேரகராதி கூறுவதைப் பாருங்கள்,

"2. Hair, as on the head of an elephant, crest of a peacock; யானை மயில் முதலியவற்றின் உச்சிமயிர். குஞ்சிக் களி யானை (சீவக. 2792). குஞ்சிமா மஞ்ஞை (சீவக. 301). 3. Head; தலை. குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து (பதினொ. க்ஷேத். 5).

இன்னும் சில சொற்களும் உண்டு (சிமிலி, சிமை, சிண்டு, குச்சு (குச்சுப்புல்)). --செல்வா (பேச்சு) 14:20, 16 மே 2020 (UTC)[பதிலளி]

நன்றி, செல்வா :) சிண்டு என்பது புழக்கத்தில் இருப்பதாலும் கேட்டவுடன் புரியும் என்பதாலும் சிண்டு மான் என மாற்றியுள்ளேன். --சிவக்குமார் (பேச்சு) 18:37, 16 மே 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிண்டு_மான்&oldid=2972431" இலிருந்து மீள்விக்கப்பட்டது