பேச்சு:சிங்கள விக்கிப்பீடியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கள ஒருங்குறியின் குறைபாடுகள்[தொகு]

சிங்கள எழுத்துக்களில் மரபு வழியாக எழுதப்பட்ட எத்தனையோ எழுத்துக்கள் ஒருங்குறியில் எழுதப்பட்டு HTML ஆக்கப்படும் போது வித்தியாசமாகத தோன்றுகின்றன. எடுத்துக் காட்டுக்கள்:

  • ශ්‍ර - ක්‍ර - ප්‍ර - ත්‍ර - ට්‍ර - ච්‍ර - ද්‍ර முதலியன
  • ක්‍ෂ
  • ව්‍ය - ක්‍ය - ත්‍ය - න්‍ය - ල්‍ය - ද්‍ය முதலியன
  • ත්‍ව
  • න්‍ධ
  • න්‍ද
  • ර්‍ක - ර්‍ත - ර්‍ම முதலியன

இன்னும் பல. ශ්‍රී ලංකාව என்பதைப் பார்த்தாலே புரியும்.--பாஹிம் (பேச்சு) 08:59, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

குறியீடுகள் எழுத்துகளுடன் இணைந்திருப்பதைச் சொல்கின்றீர்களா? --மதனாகரன் (பேச்சு) 09:12, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

கூட்டெழுத்துக்கள் (බැඳි අකුරු) என்று அழைக்கப்படுபவற்றில் எதுவும் மரபு முறைக்கு ஏற்றாற் போலத் தோன்றுவதில்லை. சிங்கள மரபு வழியிற் கற்றோருக்கு இது வசதிக் குறைவையே ஏற்படுத்துகிறது. எனினும் Microsoft Word போன்ற மென்பொருட்களில் இவை சரியாகத் தோன்றுகின்றன.--பாஹிம் (பேச்சு) 09:17, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

දා, දැ, දෑ போன்ற எழுத்துகளும் சரியாகத் தோன்றுவதில்லை. மேலேயுள்ள கூட்டெழுத்துகளிலுள்ள தவறுகளைச் சிறிது விளக்கமாகக் கூற முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 11:00, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]


சிங்களக் கூட்டெழுத்துக்கள்
சிங்களக் கூட்டெழுத்துக்கள் - 2
சிங்களக் கூட்டெழுத்துக்கள் - 2

இந்தக் கோப்பை இப்போதுதான் உங்களுக்காகவென ஆக்கினேன். இப்பொழுது புரியுமென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 11:54, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

கூட்டெழுத்துகள் மரபு முறைப்படி தானே உள்ளன. ශ්‍රී என்று தானே உள்ளது. கூட்டெழுத்துகளைத் தட்டச்சு செய்ய முடியவில்லை என்பதா சிக்கல்? --மதனாகரன் (பேச்சு) 11:57, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

தட்டச்சு செய்வதிற் சிக்கலில்லை. கூட்டெழுத்துக்கள் HTML இற் சரிவரத் தோன்றுவதில்லை. நீங்களே தட்டச்சு செய்திருக்கும் ශ්‍රී என்பதை HTML இற் சேமித்த பின் தோன்றுவதற்கும் அதற்கு முன் தோன்றுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 19:19, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வேறுபாடெதுவுந்தெரியவில்லை. உங்கள் வலை மேலோடியில் தோன்றும் வேறுபாட்டைத் திரைக் காட்சியாக அனுப்ப முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 03:12, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

இடது பக்கமுள்ள படத்தில் உள்ள சிவப்பு நிற எழுத்துக்களைக் கூர்ந்து கவனியுங்கள்.--பாஹிம் (பேச்சு) 05:39, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

தெளிவாகக் கவனித்தேன். இடது புறமுள்ளது போன்று தான் தோன்றுகின்றது. உங்கள் வலை மேலோடியில் ශ්‍රී என்பது தோன்றும் முறையைத் திரைக் காட்சியாக அனுப்ப முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 07:41, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

[[1]] இதோ.--பாஹிம் (பேச்சு) 08:23, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

உங்கள் வலை மேலோடியிற்றான் சிக்கல். வயர்வாக்சிலும் கூகுள் குரோமிலும் சரியாகத் தெரிகிறது. இன்டர்னெட்டு எக்சுப்புளோரர் 6இல் சரியாகத் தெரிந்தாலும் இன்டர்னெட்டு எக்சுப்புளோரர் 9இல் தவறாகவே தெரிகின்றது. சவாரியிலும் தவறாகத் தெரிகின்றது. வயர்வாக்சை அல்லது கூகுள் குரோம் உபயோகிப்பதன் மூலம் மேற்கூறிய கூட்டெழுத்துகளைச் சரியான முறையிற்பெறலாம். --மதனாகரன் (பேச்சு) 08:28, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

அதுதானா சிக்கல்? இப்பொழுதுதான் புரிந்தது.--பாஹிம் (பேச்சு) 14:01, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]