உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சிங்கப்பூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
சிங்கப்பூர் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

அறிமுகப் பகுதி பிரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக

[தொகு]

@Ksmuthukrishnan: வணக்கம். அறிமுகப் பகுதியான நான்கு பத்திகள் ஐந்து தலைப்புகளின் கீழ் 16 பத்திகளாகவும், பெயர்க் காரணப் பகுதியின் மூன்று பத்திகள் எட்டு தலைப்புகளின் கீழ் 16 பத்திகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து ஆங்கிலக் கட்டுரையில் உள்ள பத்திகளின் அமைப்பையே பின்பற்றலாமா?. நன்றி. -- சுப. இராஜசேகர் (பேச்சு) 01:58, 12 பெப்பிரவரி 2025 (UTC)[பதிலளி]

வணக்கம் ஐயா. தங்களின் பங்களிப்புகள் போற்றுதலுக்கு உரியவை. வாழ்த்துகள்.
நம்முடைய பதிவுகளை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே மொழிபெயர்த்து கரடு முரடாகப் பதிவு செய்வதில் அர்த்தமே இல்லை. சிலர் அப்படித்தான் கூகிள் மொழிபெயர்ப்பை அப்படியே பதிவு செய்து விடுகிறார்கள்.
சமயங்களில் என்னதான் எழுதி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்குள் தலை சுற்றி விடுகிறது. மக்கள் புரிந்து கொள்ளும்படி எளிய தமிழில் எழுதினால் அதுவே நாம் நம் இனத்திற்குச் செய்யும் கடமை. ஆங்கிலத்தில் சில கட்டுரைகளில் ஒரு பத்திக்கு ஒரு துணைத் தலைப்பையும் கொடுக்கிறார்கள். ஆக, அவர்கள் செய்வதை நாம் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் இல்லை ஐயா.
நம்முடைய படைப்புகள் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். பள்ளி மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே நம் இலக்காக அமைய வேன்டும். தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றிங்க ஐயா. வாழ்த்துகள். Ksmuthukrishnan (பேச்சு) 02:14, 12 பெப்பிரவரி 2025 (UTC)[பதிலளி]
தற்போதுள்ள அறிமுகப் பகுதி ஒரு நாட்டை அறிமுகப்படுத்தப் போதாது. இன்றைய காலம் வரை சுருக்கமாகத் தரப்பட வேண்டும். நல்ல தமிழில் சுருக்கமாகத் தரலாம். அறிமுகத்தில் நான் செய்துள்ள திருத்தங்களைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 05:58, 12 பெப்பிரவரி 2025 (UTC)[பதிலளி]
@Kanags@Ksmuthukrishnan: வணக்கம். உரை திருத்துவது புரிந்து கொள்ள எளிதாக்கும். ஆனால், ஏராளமான துணைத் தலைப்புகள் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு என்ற துணைத் தலைப்பு பெயர்க் காரணம் என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், வரலாறு என்ற தலைப்பின் கீழ் சப்பானிய ஆக்கிரமிப்பு என்று ஒரு துணைத் தலைப்பு ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே உள்ளது. அத்தலைப்பு இப்போது இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக நாடுகள் அல்லது மாநிலங்கள் குறித்த கட்டுரைகள் 1. நான்கு பத்திகளையுடைய அறிமுகப் பகுதி, 2. பெயர்க் காரணம், 3. வரலாறு, 4. புவியியல், 5. அரசாங்கமும், அரசியலும், 6. பொருளாதாரம், 7. மக்கள் தொகை, 8. பண்பாடு என்ற தலைப்புகளையுடைய அமைப்பிலேயே உருவாக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஈரான், இந்தியா, உருசியா, சீனா, சவூதி அரேபியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கேரளம் ஆகிய கட்டுரைகளைக் குறிப்பிடலாம். இக்கட்டுரையின் அறிமுகப் பகுதியின் நான்கு பத்திகள் 1. பொது, 2. தனிநபர் சராசரி வருமானம், 3. சிங்கப்பூர் நாடாளுமன்றக் குடியரசு என்று தலைப்புகள் இடப்பட்டுள்ளன. பெயர்க் காரணத்தின் மூன்று பத்திகள் 1. துமாசிக், 2. செஜாரா மெலாயு, 3. சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு என்று தலைப்புகள் இடப்பட்டுள்ளன. முழுக் கட்டுரையும் விரிவாக்கப்படும் பட்சத்தில் ஏராளமான தலைப்புகளும், துணைத் தலைப்புகளும் படிப்பதற்கு எளிதாக்காமல், கடினமாக்குவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், பெரிய பத்திகளைப் பிரித்து சிறு சிறு பத்திகளாக மாற்றுவது கட்டுரையின் நீளத்தை அதிகரிக்கும். கைபேசிகளில் படிக்கப்படும் போது திரையில் கட்டுரைகளை நகர்த்திப் படிப்பதை அது கடினமாக்குவதற்கும் வாய்ப்புள்ளது. பொதுவாகவே கட்டுரைகள் பெரிய பத்திகளையே கொண்டுள்ளன. இதற்கு முதன்மையான காரணம் அவை கைபேசிகளின் மூலம் உருவாக்கப்படாமல் கணினிகளின் மூலம் உருவக்கப்படுவதே ஆகும் என்று கருதுகிறேன். --சுப. இராஜசேகர் (பேச்சு) 10:55, 13 பெப்பிரவரி 2025 (UTC)[பதிலளி]
நன்றிங்க ஐயா. தங்களின் கருத்துகள் கவனத்தில் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன.
தற்போதுள்ள அறிமுகப் பகுதி ஒரு நாட்டை அறிமுகப்படுத்தப் போதாது. இன்றைய காலம் வரை சுருக்கமாகத் தரப்பட வேண்டும்.
இந்தக் கருத்து ஏற்புடையது. கவனத்தில் கொள்கிறோம் ஐயா. Ksmuthukrishnan (பேச்சு) 11:59, 13 பெப்பிரவரி 2025 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிங்கப்பூர்&oldid=4208017" இலிருந்து மீள்விக்கப்பட்டது