பேச்சு:சிக்கல் தீர்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Process தமிழ் என்ன?[தொகு]

  • Method - வழிமுறை
  • Methodology - முறையியல்
  • Procedure - செய்முறை
  • Process - முறையாக்கம், முறைவழியாக்கம், செய்முறையாக்கம் ??
  • Implementation - நிறைவேற்றல்
  • Performance - நிகழ்த்துதல்
  • Presentation - நிகழ்த்துதல் ??
  • Constrain - ??
  • Problem - பிரச்சினை
  • Solving - தீர்த்தல் ??
  • Problem Solving - ??

நன்றி. --Natkeeran 15:10, 3 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

நற்கீரன், process என்பது பல இடங்களில் பல பொருளில் வருவது. பொறியியலில், தொழில்நுட்பத்தில், process என்பது படிப்படியாய் ஒன்றைச் செய்யப் பயன்படுத்தும் முறைகளைக் குறிக்கும். இதனை சில இடங்களில் பதப்படுத்தல் எனலாம், சில இடங்களில் படிப்படியாய் பல செயன்முறைகளுக்கு உட்படும் பொழுது பணிக்கோவை, செய்கோவை, முறைகோவை எனலாம். அலுவலகப் பணிகளிலும் சட்டமன்றங்களிலும் வரும் process என்பதை முறை அல்லது செய்முறை எனலாம். பொதுவாக தனிச்சொல்லாக இல்லாமல் ஒரு தொடராக வருமிடங்களைப் பொருத்து மொழியாக்கம் செய்வது நல்லது. Problem solving என்பதை சிக்கல் தீர்பு அல்லது சிக்கல் தீர்வு எனலாம். problem என்பது பல இடங்களில் கேள்வி என்று பொருள் படும், சில இடங்களில் சிக்கல் என பொருள் படும். என்ன்ன problem என்று பேச்சு வழக்கில் கேட்பது என்ன சிக்கல்? இங்கே என்ன குழப்பம், என்ன குளறுபடி? என்று பொருள் படும். சில இடங்களில் என்ன தடை, என்ன முடை என்று பொருள்படும். சேலம் திருச்சி பக்கங்களில் அங்கே போய் கேட்பதற்கு உனக்கு என்ன முடை? என்றால் அங்கே போய் கேட்க உனக்கு என்ன problem என்று பொருள். சில இடங்களில் problem என்பது கணக்கு, அல்லது கேள்விக் கணக்கு (அல்லது கணக்குக் கேள்வி) என்று பொருள்படும். Presentation என்பது சில இடங்களில் (கருத்தை) முன்வைத்தல், முன்படைத்தல் எனப் பொருள்படும். பிரச்சினை ( प्रश्नः) என்னும் சொல்லின் பொருள் கேள்வி. அதற்கு தமிழில் சிக்கல், முடை, முரண்பாடு என்னும் பொருள்கள் கிளைத்திருக்கின்றன என்று நினைக்கிறேன். प्रश्नः என்றால் முரண்பாடு (dispute, controversy) என்னும் பொருளும் தரும், ஆனால் அடிப்படையான பொருள் கேள்வி, inquiry என்பதுதான். தமிழில் சிக்கல், குழப்பம், குளறுபடி, கேள்வி, முரண்பாடு, முடை, இடக்கு, சிடுக்கு, இடைஞ்சல் என பற்பல சொற்களால் குறிக்கலாம் (இடத்திற்கு ஏற்றவாறு). --செல்வா 20:04, 11 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
  • நன்றி செல்வா.
  • singnal processing என்பது அதன் தலைப்பில் உள்ள் ஒரு நூலில் குறியீடு முறைவழியாக்கம் (தமிழ்நாடு) என்று தமிழ் படுத்தப்பட்டுள்து. முறை, முறைமை என்பது system ஈடாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. செய்முறை என்பது Procedure. process என்பது பெயர்சொல்லே. ஆனால் இது வினைச்சொல்லில் இருந்து வந்த பெயர்சொல் என்று நினைக்கிறேன்.
  • சிக்கல் என்றால் complex என்றல்லவா பொருள் தருகிறது. எ.கா சிக்கல் எண். பிரச்சினையின் ஒரு பண்பாக சிக்கல் அமையக்கூடும். அமாம், நீங்கள் சொல்லது மாதிரி problem என்றால் பல சூழலில் பல பொருள்களைத் தருகிறது. --Natkeeran 14:15, 12 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

சிக்கல் என்பது entanglement, difficulty, problematic thing, complicated, tricky என பல பொருள்கள் தரும். சிக்கு என்பது குறுகிய இடத்தில் மாட்டிக்கொளுதல். சிக்கெனப் பிடித்தேன் என்றால் தப்பிக்க முடியாமல் பிடித்தேன் என்று பொருள் (எளிதாகப் பிடித்தேன் என்றும் ஒரு பொருள் உண்டு). சிக்கு என்பது சிக்கல் என்றாகியது. நூல், முடி, கயிறு முதலியன தாறுமாறாக (இடக்கு மடக்காக) முடிச்சு விழுந்து பிரிக்கக் கடினமாக உள்ளதைச் சிக்கு என்பார்கள். complex என்னும் பொருளும் பிரித்தறியக் கடினமான ஒன்று என்னும் பொருள் தருவதுதான். problem என்பது ஏதோ ஒன்று தீர்வு கிடைக்காமல் இடர்ப்படுவதைக் குறிக்கும் இடங்களில் சிக்கல் என்னும் பொருள் பொருந்தி வரும். பிரச்சனை என்னும் சொல் மிகப்பெரும்பாலான இடங்களில், சிக்கல், குழப்பம், குளறுபடி, இடர், சண்டை, பிணக்கு என்னும் பொருள்களில்தான் வழங்குகின்றது. Signal processing என்பது குறிப்பலைகளை பதப்படுத்துவது. குறியீடு என்பது symbol code, என்பது போன்ற பொருள் தரும் சொல். முறைவழியாக்கம் என்பது சரியான பொருள்தான். ஆனால் போதிய அளவு தெளிவாக இல்லை என்று நினைக்கிறேன். signal என்பதை குறிகை அல்லது குறிப்பலை என்பது நல்லது. இந்த குறிப்பலைகளை தேவைக்கு ஏற்றார்போல தட்டிகொட்டி, அதாவது பல்வேறு வழிகளில் பிரித்து, வகுத்து (வடிகட்டி), களைய வேண்டியவற்றைக் களைந்து, பதப்படுத்துவதை processing என்பர். எனவே குறிப்பலை பதப்பாடு, குறிப்ப்லைப் பதப்படுத்தல் எனலாம். process (computing) என்பதைச் செயலாக்கம் என்பது பொருந்தும். செயற்படுத்தல். --செல்வா 19:20, 12 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிக்கல்_தீர்வு&oldid=3388753" இலிருந்து மீள்விக்கப்பட்டது