பேச்சு:சா-இ சோமரக்கு 5 டரே டுசே டாசுட் சாகிலபாத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு வரிகளில் பின்வருமாறு எழுதக்கூடிய கட்டுரையை (தகவல்சட்டம் தவிர்த்து) இவ்வாறு நீட்டி முழக்கி எழுதுவது விக்கிப்பீடியா நடையல்ல. தேவையற்றவை நீக்கப்படும். சா-இ சோமரக்கு 5 டரே டுசே டாசுட் சாகிலபாத்து (Chah-e Shomareh 5 Tareh Tuseh Dasht Sahlabad, பாரசீக மொழி: چاه شماره 5 طرح توسعه دشت سهل اباد‎, பிற பெயர்: Chāh-e Shomāreh 5 Tareḥ Tūsʿeh Dasht Sahlābād) என்பது ஈரான், தெற்கு கொராசான் மாகாணம், நஃபந்தான் மண்டலம், சூசெஃப்பு மாவட்டம், சூசெஃப்பு ஊரக வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். 2006 கணக்கெடுப்பின்ப்டி, இதன் மக்கள்தொகை 35 ஆகும். இவர்கள் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். --Kanags \உரையாடுக 06:05, 8 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

சுருக்குக. நீட்டி முழக்குவது என் பண்பல்ல. நான் கற்றதை எழுதுகிறேன் கற்றுத் தந்தால் மாற்றிக் கொள்கிறேன். உரையாடல் தவிர்த்து, அதிகம் செய்யத்தூண்டுக.--உழவன் (உரை) 15:29, 8 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
//தேவையற்றவை நீக்கப்படும்.// நீக்குக. அனைத்திலும் மாற்றிவிடுகிறேன். சிற்றூர் என்பது நமது புரிதல். அவர்கள் அத்தகையச் சொல்லாடலைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் நிலஆட்சி முறை, நமது ஆட்சியைப் போன்றது தான் என்ற புரிதலை, தமிழரிடையே உருவாக்குதல் நன்றன்று. சிறு சிறு வாக்கியங்கள் இருப்பின், அத்தகைய புரிதலை உருவாக்காது. புதிய கட்டுரை ஒன்றைப்படித்தால் கூட, அவர்களது சூழலை எத்தமிழரும் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்காக கடந்த மூன்று வாரங்களாக பல்வேறு கட்டுரைகளையும் படித்து, பெர்சிய விக்கிப்பீடியாவில் இருந்தும், இணையத்தில் இருந்தும் உரிய இணைய இணைப்புகளை அனைத்திலும் தந்துள்ளேன். மற்றொன்று போட்டிக்காக அல்ல என்பதால், நான் பவுன்டன் கருவியில் இணைப்பதை நிறுத்திவிட்டேன்.பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy#இறுதி_மூன்று_நாட்களுக்கான_ஆலோசனை என்பதில் தொடங்கி பலரின் கருத்தைப்பெற்றே செயற்பட எண்ணுகிறேன். ஏனெனில், ஒரு வார்ப்புருவை போடுவதாலோ, நீக்குவதாலோ சமூகம் வளராது. எனவே, தொடர்ந்து பின்னூட்டம் தருக. பயனர் பேச்சு:Info-farmer#வார்ப்புரு இற்றைப்படுத்தலால் சிவப்பு இணைப்புகள் என்ற இடர் இன்னும் உங்களுக்கு இருக்கிறதா? உளநோய் மருத்துவம் என்ற பக்கத்தினை மேம்படுத்தித் தருகிறேன் என்று கூறியிருந்தீர்கள். இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு விக்கிப்பரப்புரை செய்து, பலரையும் ஈடுபடுத்த எண்ணியுள்ளேன். அனைத்து முயற்சிகளும் பாதியிலேயே வார்ப்புருக்களால் நின்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் வினவுகிறேன் --உழவன் (உரை) 00:06, 9 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

மாற்றம்[தொகு]

@Kanags:நமது உரையாடலுக்கு ஒப்ப தேவையற்றதை நீக்கி, முற்பத்தியை அமைத்துள்ளேன். பிறகு, போதிய தரவு கிடைப்பின், அவ்வப்போது கட்டுரைகளை விரிவு படுத்துவேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்துவமானச் சொற்கள் உள்ளன. அவற்றினைப் பயன்படுத்தியுள்ளேன். இதுபோன்ற, மொத்தமுள்ள 27 கட்டுரைகளையும் நானே திருத்தி விடுகிறேன். பஞ்சாபி மொழியொன்று முதலிடம் சென்ற போது,வெகுண்டதால், நாமும் ஏதாவது ஒரு முயற்சி எடுக்க எண்ணி, ஆசிய மாத வழியே, இந்த அரைகுறை கட்டுரைகள் உருவாக்கினேன். பிறகு, எனக்கே விருப்பம் இல்லாமல் நிறுத்தி விட்டேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்றே பிற கட்டுரைகளையும் மாற்ற உள்ளேன்.--உழவன் (உரை) 02:14, 22 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]