பேச்சு:சாளரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல் என்பதை அறிவோம். சாளரம் என்பதை அதற்குரிய தமிழ்ச்சொல்லாகக் கருதிக்கொண்டிருக்கிறோம். சாளரம் என்பதும் வடமொழி வேரையுடைய சொல் என்கிறார் கி.வா.ஜகந்நாதன். ‘காலதர்’ என்பதுதான் ஜன்னலுக்கான தூய தமிழ்ச்சொல் என்கிறார்.

கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காற்று நுழையும் வழி என்னும் பொருளையுடையது ‘காலதர்.’ அதர்வை என்றாலும் வழிதான். அதர்வா என்ற பெயரையுடைய நடிகர் “வழியோன்” என்ற பொருளில் தூய தமிழ்ப்பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கிறார் என்று கொள்ளலாம்.

கவிஞர் மகுடேசுவரனின் முகப்பக்கதிலிருந்து எடுத்தது. யாவருக்கும் ஒப்புமை எனில் பெயரை காலதர் என மாற்றாலமா??? குறிஞ்சி (பேச்சு) 11:24, 17 மே 2017 (UTC)[பதிலளி]

@செல்வா and Sundar:--Kanags \உரையாடுக 11:37, 17 மே 2017 (UTC)[பதிலளி]
  1. அருமையான விளக்கம். காலதர் என்ற சொல்லை முதன்மை தலைப்பாக வைத்து, பிற சொற்களுக்கும்(ஜன்னல்,சாளரம்) வழிமாற்று வைக்க விருப்பம். ஏனெனில், மு. வ. கூறியது போல, பிறமொழியாக இருந்தாலும், நடைமுறையில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் சொற்களையும் நாம் விட்டு விடக்கூடாது.--உழவன் (உரை) 02:27, 18 மே 2017 (UTC)[பதிலளி]
காலதர் நன்றாகவுள்ளது. எதை முதன்மைத்தலைப்பாகக் கொள்வது என்பதுபற்றி இப்போதைக்கு எனக்கு கருத்தில்லை. எதுவாயினும் மற்ற கட்டுரைகளிலிருந்தும் வழிமாற்றவேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:02, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]
காலதர் என்பது தான் ஜன்னலுக்கு சரியான தமிழ்ச் சொல்!. நாங்கள், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது(1975) பிற மொழி சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்று படித்திருக்கிறோம்! 27.5.177.130 05:22, 29 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாளரம்&oldid=3899493" இலிருந்து மீள்விக்கப்பட்டது