பேச்சு:சாமுவேல் பெப்பீசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@கி.மூர்த்தி: எதற்காக இக்கட்டுரையை நீக்கினீர்கள்? 10 கட்டுரைகளில் இதற்கான இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனித்தீர்களா என்பதுவும் தெரியவில்லை. கட்டுரையை வைத்திருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.--Kanags \உரையாடுக 20:23, 24 மார்ச் 2021 (UTC)

மேற்கோள்கள் தரப்படாத வார்ப்புரு காலம் முடிந்த கட்டுரைகளை நீக்கிக் கொண்டிருக்கிறேன். மேற்கோள்கள் கிடைத்தால் இணைத்தும் கிடைக்காவிட்டால் நீக்கியும் துப்புரவு செய்கின்றேன். இக்கட்டுரையின் உள் இணைப்புகளின் எண்ணிக்கையை கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்கவும். மீளமைத்துக் கொடுங்கள்.--கி.மூர்த்தி (பேச்சு) 01:25, 25 மார்ச் 2021 (UTC)
//மேற்கோள்கள் தரப்படாத வார்ப்புரு காலம் முடிந்த கட்டுரைகளை நீக்கிக் கொண்டிருக்கிறேன். // இந்தக் கட்டுரையில் மேற்கோள் ஒன்று தரப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க நீக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இக்கட்டுரையில் முக்கிய பங்காற்றியவருக்கு செய்தி அனுப்பியிருக்கலாம். ஆனால் நீங்கள் நீக்கலுக்கான கொடுத்த காரணம்: //குறைந்த உள்ளடக்கம். நீக்கல் வார்ப்புரு காலமும் முடிவடைந்தது:// நீக்கல் வார்ப்புரு இக்கட்டுரையில் இருக்கவில்லை. ஆகவே, நீங்கள் நீக்க முடிவு செய்திருக்கும் கட்டுரைகளை நீக்குவதற்கு முன்னர் மீளவும் ஆய்வுக்குள்ளாக்குங்கள். குறுங்கட்டுரை (2-3 வரிகள்) மட்டுமே நீக்கப்பட வேண்டும். மேற்கோள்கள் தரப்படவில்லை என்ற ஒரு காரணத்திற்காக ஒரு நல்ல கட்டுரை நீக்கப்படக் கூடாது.--Kanags \உரையாடுக 06:06, 25 மார்ச் 2021 (UTC)