பேச்சு:சாதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Notes from “Excellence: Can we be equal and excellent too?” by John W. Gardner[தொகு]

  • How does caste affect society?
  • Is caste as a social structure helpful in providing order, and in promoting prosperity?
  • Or is it harmful to society?
  • What are the alternative social structures or ways or organization or as an orientation for a society?
  • How are alternative social structures interact with caste?

(The following notes are intended to help answer the above questions.)


  • Heredity Stratification or Hereditary Privilege
  • Equalitarianism
  • Competitive Performance
  • Equality of Opportunity
  • Aristocracies of Profession
  • Nepotism
  • Social, Educational, Economical, Religious, Political Dimensions

Power Hungry Men and Mass Movements:[தொகு]

“With the recent increase in mass movements it has become downright conventional for power-hungry men to ally themselves with the masses as a means of a means to achieving political glory. Elaborate procedures have been developed to insure the success of the maneuver, and highly skilled practitioners have emerged.“

On Hereditary Stratification:[தொகு]

“The root weaknesses of hereditary stratification in its most fully developed form are lowered vitality, dry root, and the strangling of individual initiative by tyranny of hereditary roles. Any stratified society may have a brilliant period of flowering. But all too often the ablest and most dynamic men in the society, curbed by gradations of rank and the fetters of social custom, are unable to realize their creative potentialities. Everything settles into the deep grooves of prescribed social procedure.”

On Extreme Equalitarianism:[தொகு]

“When an organization under the suppressing force of extreme equalitarianism reaches a sufficiently dead level of mediocrity, it may be ready prey to the vitality of men who are prepared to step in with personal force and initiative.” (“greatest threat lies in external competition”)

On Extreme Competitive Performance:[தொகு]

“In an organization or society which places exclusive emphasis on individual performance there arise such searing rivalries, such intense competition, such a pervading insecurity that the organization may be virtually pulled apart at the seams. Large numbers of individuals within the organization develop a fierce desire to find shelter from the chill wind of unmitigated competition. Powerful internal forces soon combine to alter a state of affairs which is tolerable to very few in the organization or society.”

Noted by --Natkeeran 22:00, 23 மார்ச் 2006 (UTC)

Notes from Tamil Blogs[தொகு]


  • "பிறவி அடிப்படையில் தொழில் என்பது எல்லாச் சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் நடைமுறையில் இருந்ததுதான்! என்றாலும் தொழிலைப் பிறவி அடிப்படையில் ஒதுக்கி அதற்கு சடங்கு ஆசார அடிப்படையில் நியாயம் வழங்குகின்ற கோட்பாட்டை உருவாக்கி திருமண உறவுகளையும் சாதிக்குள்ளேயே முடக்கி அது மட்டுமல்லாமல் இவற்றை எந்த வகையிலும் மீறக்கூடாத விதமாக வழிகளையும் தடை செய்தது - எமது சமூகம் தான்! இதனை நியாயப்படுத்தும் வகையில் முற்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் சாதியும் வாழ்நிலையும் நிர்ணயிக்கப் படுகின்றன’ என்கின்ற கர்மவினைக் கோட்பாடும் இங்கு உருவாக்கப் பட்டது." http://karuppupaiyan.blogspot.com/2006/03/blog-post_26.html

SL Tamil caste[தொகு]

முதலியார் எனும் சாதி இலங்கையில் இல்லை. மேலும் சிங்களவர் சாதி பிரிப்பு மிகவும் பிழை, அவர்களும் தமிழர் போன்ற அமைப்பையே பின்பற்றுகின்றனர்.

சாதி குறிப்புகள்[தொகு]

  • பறையர் - பறையடிப்போர்
  • உவச்சர் - சோழர்காலத்தில் பறையடிப்போருக்கு வழக்ங்கிய சொல்
  • ஓச்சர் - உவச்சர்கள் மேலும் தாழ்த்தப்பட் நிலையில் அழைக்கப்பட்ட சொல்

சாதியும் இந்து சமயமும்[தொகு]

ஏதோ இக்கட்டுரையில் எல்லா தமிழரும் சிங்களவரும் சாதி அடிப்படையில் செயற்படுவது போல சொல்லப்பட்டிருப்பது முற்றிலும் பிழையாகும். ஏனேனில் தமிழ்-கிறிஸ்தவர்,தமிழ்-இஸ்லாமியர்,சிங்கள்-முஸ்லிம்கள்,சிங்கள்-கிறிச்தவரோ சாதி அமைப்பை பின்பற்றுவது கிடையாது.

மேலும் சாதியி தோற்றம் அதன் நிலைப்பு என்பவற்றில் இந்து சமயத்தின் பங்கு பற்றி எழுதப்படவேண்டும். மனுநீதிக்கு முன் சாதி இந்து சமயத்தில் இருந்த்தா என்பது பற்றி எனக்கு தெரியாது. இதை பற்றி யாராவது தெளிவாக எழுதினால் ந்ல்லது.மூடிமறைக்காமல் உள்ள நிலைய யாராவது எழுதினால் நல்லது.

இதை இந்து சமயம் தொடர்பில் எனது எதிர்பாக கொள்ளாமல் உண்மையை எழுதவேண்டும் என்ற கோணத்தில் பார்க்கவும். அது தானே விக்கியின் கடப்பாடு. அப்படி செய்தால் இக்கட்டுரை மேலும் பயனுள்ளதாகும். ஏதாவது தவராக சொல்லியிருப்பின் மன்னிக்கவும்.--டெரன்ஸ் 01:17, 21 ஜூலை 2006 (UTC)

இந்து சமயத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறும் பலர் சாதியை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர். கிறிஸ்தவ ரெட்டி (எ.கா- ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர், மூன்று தலைமுறைக்கு முன்னர் கிறிஸ்தவத்துக்கு மாறிய என் நண்பர் இன்னும் பெயரில் ரெட்டியை வைத்திருக்கிறார்), கிறிஸ்தவ வெள்ளாளர் போன்ற பல பிரிவுகள், பிடிப்புகள் இன்னும் உள்ளன. எனவே கிறிஸ்தவத்தில் சாதிப் பாகுபாடு அறவே இல்லை என்று சொல்ல இயலாது. இஸ்லாமில் சாதி முறை குறித்து தெளிவாக அறியாவிட்டாலும் லெப்பை, பட்டாணி போன்ற பிரிவுகளை கேள்விப்பட்டுள்ளேன். இது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.--ரவி 09:42, 21 ஜூலை 2006 (UTC)

டெரன்ஸ், இந்த சாதி குறித்த கட்டுரை முழுமையானதல்ல. பார்த்தீர்களானால், இது ஒரு கட்டுரையே அல்ல. வெறும் சாதிப் பெயர்களை பட்டியலிட்டுக் காட்டுவதாகவே உள்ளது. இது முழுமையாக்கப்படவேண்டும். மற்றும், சாதியும் இந்து சமயமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதே உண்மை. ஆனாலும் ஈழத்தில் இன்றைய யுத்த சூழலில் சாதிப் பிரச்சினை ஓரளவுக்கு மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ரவி சொன்னது போல் தமிழ்க் கிறிஸ்தவர்களில் இன்னமும் சாதிப் பாகுபாடு நிறையவே உள்ளது. இவற்றைக் குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் காணலாம். தமிழ்க் கிறிஸ்தவர்கள் சைவ சமயத்திலிருந்து மதமாற்றம் பெற்று வந்தவர்கள் இன்னமும் சாதிப்பற்றைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். இதுபற்றி ஆராய்ந்து எழுத வேண்டும்.--Kanags 10:29, 21 ஜூலை 2006 (UTC)

யாருக்கும் இக்கட்டுரையை விரிவுபடுத்தும் போது இவை தேவைப்படலாம்.

ம்ம்ம்ம்...நான் கூற வந்த்தை தவராக விளங்கி கொள்ளாதீர்கள். இந்து சமயத்தில் இருந்து மதம் மாறியவர்களில் சிலர் அப்படி இருப்பது எனக்கும் தெரியும் ஆனால் நான் கூறவந்த்து பெரும்பான்மையானவர்களையாகும். மேலும் இங்கு நீங்கள் குறிப்பிடும் "கிறிஸ்தவர்கள்" கத்தோலிக்கராகும் கத்தோலிகம் தவிர்ந்த மீழப்பிறந்த கிறிஸ்தவரிடையே அவ்வாறு கிடையாது[1][2][3]. கத்தோலிக்க திருச்சபை தனது இருப்பை இந்தியா இலங்கை நாடுகளில் உறுதி செய்ய சாதி முறையை மறைமுகமாக ஆதரித்த தருனங்கள் உண்டு[4] [5] [6] மலபார் கிறிஸ்தவர்கள் தங்களை ஒரு சாதியினராக கருதுகின்றனர். கத்தோலிக்க திருச்ச்பையிலும் பிஷோப்பாக தலித் ஒருவர் 2000ஆம் ஆண்டு தெரிவானார்[7]. கோடை விடுமுறையில் தமிழ் கிறிஸ்தவரிடையே சாதி பற்றி எழுதுகிறேன். மற்ற தலைப்புகளை அவ்வவ் மத்ததவர் எழுதினால் நல்லது. பின்னர் முரனான கருத்துக்களை கலந்துரையாடலாம்.--டெரன்ஸ் 08:54, 24 ஜூலை 2006 (UTC)

டெரன்ஸ், முழுப் பிரச்சினையையும் கத்தோலிக்கத்திற்கு மட்டும் சாடிவிடுவது சரியாகத் தோன்றவில்லை. இப்பிரச்சினைகளை பற்றி விரிவாக நான் அறியேன் என்றாலும், எதிர் தரப்பு வாதங்களை யார் வைத்தாலும் ஐயத்திற்கு இடமின்றி வைப்பது அவசியம். தலித் ஒருவர் பிஷப் ஆனதால் பிரச்சினை இல்லையென்று ஆகிவிடாது. இந்தியாவின் அதிபராக தலித் ஒருவர் இருந்தார் என்பதால் இந்தியாவில் சாதியே இல்லை என்பது போன்ற வாதம் தான் இது. கத்தோலிக்கச்சபையை சாராத மதம் மாறிய கிறிஸ்தவர்களும் கூட தமிழ் நாட்டில் சாதி உணர்வுகளை தம்மகத்தே கொண்டுள்ளனர் என்பது என் எண்ணம். வெளிப்படையாக நிர்வாக அளவில் காட்டாவிட்டாலும் இலைமறைக்காயாகவது இவ்வுணர்வுகள் உள்ளன. இன்னொன்று, கிறிஸ்தவத்துக்கு வெளியே உள்ளோருக்கு கத்தோலிக்கம், protestantism என்று பிரித்து பார்க்குமாறு எதிர்ப்பார்க்க இயலாது. அவர்களுக்கு அனைத்தும் கிறிஸ்தவம். இது குறித்த விடயங்களையும் கட்டுரையில் குறிப்பிட வேண்டும். --ரவி 22:42, 24 ஜூலை 2006 (UTC)
உண்மைத்தான் கிறிஸ்தவ பற்றி பலருக்கு தெரியாத காரணத்தால் தான் விக்கியில் எனது பதிவுகள் கிறிஸ்தவம் நோக்கியதாக இருக்கிறது. கத்தோலிக்கர் மேல் நான் பழிசுமத்துவது நான் ஒரு கத்தோலிக்கன் என்ற முறையில் நான் நேரில் கணட்வற்றைத்தான். இந்து மதத்தின் சாதி பாகுபாட்டால் கத்தோலிக்கராக மாறிய பலர் இப்போது சீர்த்திருத்த சபைகளுக்கும் இஸ்லாம் சமயத்துக்கு மதம் மாறி வருகின்றார்கள். இது எல்லை மீறி போவதாக எண்ணியதால் தான் இலங்கையில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப் படவுள்ளது இதற்குய் கத்தோலிக்க திருச்சபையின் மறைமுகமான ஆதரவும் உள்ளது. ............எப்படியோ கிறிஸ்தவத்தில் சாதி பற்றிய ஆய்ய்வு கட்டுரைகள் பல வற்றை சேர்த்துவிட்டேன் வாசித்து தனி கட்டுரை வேண்டுமாணாலும் எழுதுகிறேன்.--டெரன்ஸ் 04:48, 25 ஜூலை 2006 (UTC)

இக்கூற்றுக்கள் ஏற்புடையதல்ல[தொகு]

"சாதி என்பது இந்திய துணைக்கண்டத்தில் மக்களிடையே தொழிலின் அடிப்படையில் தோன்றிய பிரிவுகள். " "சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல"

இக்கூற்றுக்கள் ஏற்புடையதல்ல, குறிப்பாக முதல் வசனத்தில் வரும் கூற்று மிகவும் தவறான பாதயில் ஒருவரை இட்டு செல்லலாம். சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் பிரிவினையையே தற்காலத்தில் சிறப்பாக சுட்டி நிற்கின்றது. தமிழரிடையே பிறப்பு ரீதியான சாதி இருந்ததில்லை என்பது விவாதத்துக்குரியது, அதை ஒரு fact ஆக முன்வைப்பது ஏற்புடையதல்ல.

தமிழரிடையே சாதி நூலகள் இல்லை என்பது, சற்று பரிச்சியமற்ற வாசகரை மிகவும் தவறான பாதையில் செலுத்தும். நாவலரின் நூலில் சாதி வலியுறுத்தப்பட்டிருப்பது, ஆகமங்களில் சாதி வழங்கியது ஆகியவற்றை இங்கு சுட்டலாம். நீங்கள் மூல நூல்களைத்தான் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.

மேலும் ஒரு இனம் சற்று வளர்ச்சியுற்ற பின்தான் தொழிலின் அடிப்படையில் கூட சாதி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆகையால் திராவிடர்களிடமே சாதி முதலில் தோன்றியிருக்கலாம் என்ற ஒரு நிலைப்பாடும் உண்டு.

--Natkeeran 13:17, 21 ஜூலை 2006 (UTC)

இந்திய சாதிகளும், மேற்குலக class வேறுபாடுகளும், தொழிலடிப்படையில்தான் தோன்றியது. பின்னர் அவை பிறப்படியாய் மாறியது. தமிழரிடையேயும் அப்படித்தான். தமிழரிடையே பிறப்படிப்படையான சாதிய படிமுறை ஏற்றத்தாழ்வுகளைக் கூறும் நூல்களைக் காட்டுங்கள் (வடமொழியில் பல காலங்களில் உள்ள பல நூல்களைக் காட்டலாம்). தமிழகத்தில் சுமார் கி.பி. 14 ஆம் நூறாண்டுக்குப் பின்னர் தான் (அதுவும் 16 ஆம் நூறாண்டுக்குப்) பின்னர் தான் வலுப்பெற்றது. கலிபோர்னியாவில் உள்ள பெர்க்கிலிப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (நான் பெரிதும் மதிக்கும் இவர்) உட்பட பல மேற்கு நாட்டறிஞர்கள் இரண்டொரு ஐயத்திற்கு இடந்தரும் தொடர்களை சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலங்களில் உள்ள இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டியுள்ளனர் (ஆனால் அவை எந்த படிமுறையையும் காட்டுவதில்லை). நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் சண்டாளர், கீழ்ச்சாதி போன்ற செய்திகள் உள்ளன, ஆனால் அவை எக்காலத்தது என்று உறுதியாகச் சொல்ல இயலாது (10-13 நூற்றண்டு?). கடந்த 400-600 ஆண்டுகளில் தமிழினத்தில் சாதிய பற்றும், வகைப்பாடும் வலுப்பெற்றிருந்தன என்பதை மறுக்கொணாது. தமிழரின் உள்ளப்பாங்கை நன்கறியும் யாரும் தமிழர் பிறப்படிப்படையில், படிமுறை சாதியம் தொன்று தொட்டு இருந்ததென்று கூறும் கூற்றை ஒப்ப மாடார்கள். ஐயம் திரிபற எடுத்துக்காட்டுக்கள் இருப்பின், என் எண்ணங்களை மாற்றிக்கொள்ள அணியமாய் இருக்கின்றேன். I can't accept biased analysis. Brief citations of questionable meanings and interpretations. கி.மு. 200 முதல் கி.பி. 12-13 ஆம் ஆண்டுகளுக்கிடையில் உள்ள பிறப்படிப்படையில் அமைந்த படிமுறை சாதியமுறையைக் கூறும் தமிழ் நூல்களைக்காட்டுங்கள். --C.R.Selvakumar 13:49, 21 ஜூலை 2006 (UTC)செல்வா

இங்கு நாம் பழந்தமிழரையும் தற்கால தமிழரையும் வேறுபடுத்தி காட்டுவது முக்கியம். வரலாற்றில் சாதி எப்படி வெவ்வேறான தாக்கங்களை சமூகத்தில் ஏற்படித்தியிருக்கலாம் என்பது சுட்டப்பட வேண்டும். பழந்தமிழரிடம் சாதி இல்லை என்ற ஒருவித ideal கருத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எனக்கு அந்தளவு பின்புலம் இல்லை. எனினும் நீங்கள் சொல்வது போல, பிறப்புரீதியாக இல்லாமல் professional class போன்று இருந்திருக்கலாம்.

கிபி சோழ ஆட்சி ~ 9 - 12 நூற்றாண்டுவரை சிறப்புற்று இருந்தது என்பது வரலாறு. சோழர்கள் பிராமணர்களுக்கு முன்னுருமை தந்ததை வைத்து பார்க்கும்பொழுது அக்காலத்தில் எழுந்த நூல்களில் சாதி வலியுறுத்தப்பட்டிரும் என்பது எனது அனுமானம், ஆனால் தமிழர்களால் அவை சமஸ்கிரதத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம் என்பது சாத்தியமானதே.

சாதி (பிறப்பின் அடிப்படையில்) ஏன், எப்படி, எப்பொழுது தமிழரிடையே பரவியது? அது எவ்வாறான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது, ஏற்படுத்துகின்றது? அதற்கான மாற்று தேவையா, உண்டா? போன்ற கேள்விகள் இங்கு அலசப்படவேண்டும் என்று நினைக்கின்றேன்.

கருத்துக்களுக்கு நன்றி செல்வா. --Natkeeran 14:11, 21 ஜூலை 2006 (UTC)

சாதி தொடர்பான பழைய நூல்கள் தான் இல்லை என நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வல்வை வயித்தியலிங்கபிள்ளை என்பவர் சாதிநிர்ணய புராணம் என்னும் நூலை ஆக்கியிருக்கிறார். --கோபி 15:44, 21 ஜூலை 2006 (UTC)

முதல் வரி இன்னும் ஆட்சோபனைக்குரியதே. சாதி பிறப்பின் அடிப்படையிலான பிரிவினையையே சுட்டி நிற்கின்றது, குறிப்பாக இந்தியாவில். --Natkeeran 16:02, 21 ஜூலை 2006 (UTC)

முதல் வரியை மாற்றியும், சற்று விரிவுபடுத்தியும் எழுதியுள்ளேன். சாதிக்கொடுமைகள் பற்றியும், குமுகாய (சமுதாய) பிளவுகள், மோதல்கள், அநியாயங்கள் பற்றியும் எல்லாம் எழுதுவதில் ஒரு தவறுமில்லை. கட்டாயம் எழுதவும் வேண்டும். எனினும், தக்க அடிக்கோள்களுடன், நடுநிலை தவறாது எழுதவேண்டும். கீழ்வெண்மணி படுகொலைகள் போன்ற கடும் அட்டூழியங்கள் பற்றி திறம்படவும், உண்மைச் சான்றுகளுடனும் எழுத வேண்டும். ஆனால் தமிழர் குமுகாயம் பிறப்பின் அடிப்படையில், படிமுறை ஏற்றத்தாழ்வுகளுடன் தொன்றுதொட்டு இருந்ததில்லை என்பது என் துணிவு. முறைப்படி என் துணிவு தவறென்று நிறுவினால் என் கருத்தை மாற்றிக்கொள்ள அணியமாய் உள்ளேன். கடந்த சில நூற்றாண்டுகளாய் சாதியக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என்பதால் தமிழர் 2000 ஆண்டுகளுக்கும் மேலாய் வளர்ந்து வரும் குடியமைப்பையே, குமுகாய அமைப்பையே போதிய சான்று இல்லாமல் சாடுவதும், பிழைபட எழுதுவதும் ஏற்கத்தக்கதல்ல என்பது என் கருத்து. --C.R.Selvakumar 16:26, 21 ஜூலை 2006 (UTC)செல்வா

திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்) பற்றிய வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது. பெரிய புராணம் 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதன்படி நந்தனார் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத ஒரு சாதியில் பிறந்தவர். நந்தனார் பற்றி சுந்தரமூர்த்தி நாயனாரும் திருத்தொண்டத்தொகையில் குறிப்பிட்டுள்ளார் இதனால் நந்தனார் காலம் 9 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது என்பது தெளிவு. எனவே அக்காலத்திலேயே பிறப்பால் சாதி இருந்தது என்றுதானே ஆகிறது. Mayooranathan 16:35, 21 ஜூலை 2006 (UTC)


சுதரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டர் தொகையில், இரண்டாம் அடியிலேயே திருநீல கண்டத்து குயவனார்க்கும் அடியேன் என்கிறார். சு.நாயனார் உயர்ந்த சாதியில் பிறந்ததாகக் கொள்ளுவோர், ஏன் அவர் குயவனாருக்கு அடிமை என்கிறார்? சாதிய வேறுபாடு தெரிகிறதா, தொழில் வேறுபாடு தெரிகிறதா? பிற்காலத்தில் கீழ் சாதியராக எண்ணப்பட்ட பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டத்து பாணனாரை திருஞான சம்பந்தர் எல்லாக் கோயிலுக்கும் அழைத்துச் சென்றார். சுந்தரமூர்த்தி நாயனாரும், திருநீலகண்டத்து பாணனார்க்கடியேன் என்று கூறுகிறார். தொழில் பற்றிய குலம் வேறு சாதி வேறு, அதிலும் படிமுறை ஏற்றத்தாழ்வுகள் வேறு.


திருநாளைப்போவார் கீழ்ச் சாதியர் என்று சுந்தர்மூர்த்தி நாயனார் எங்கு சொல்லியுள்ளார் என்று காட்டுங்கள். சுந்தர்மூர்தி நாயன்மாரின் சொற்கள், செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன். சேக்கிழார் பன்னூறாண்டுகள் பின் வாழ்ந்தவர். சுமார் 10-11 ஆம் நூற்றாண்டளவிலே தொடங்கி சுமார் 14-15 நூற்றாண்டுகளில் நிலைகொள்ளத்தொடங்கியது தான் இப்பிறப்படிப்படை படிமுறை ஏற்றதாழ்வுகள் (அதுவும் ஒரு சில சிறு குழுவினர் கண்ணோட்டத்தில்தான்). திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் செய்த புரட்சிகள் பல: வடமொழியார் குமுகாய போக்குகள் அதிகரிக்கத்தொடங்கியதை தடுத்து திருப்பியது, தமிழின் தொல்புகழ் இசையை, இசை மேன்மையை வல்லாழத்துடன் பதிவித்தது, சாதிய வேர்கள் வளரத்தொடங்கியதை தடுத்தது, தொன் தமிழ் மறைக் கொள்கைகளை வலியுறுத்தி மீள்பரப்பியது, வேதவழியின் உண்மையான நற்கருத்துக்களை ஓங்கச்செய்தது,, சமணம் புத்த மதங்களை அவர்கள் வெறுக்கவில்லை, அம்மதப் பெயரால் தீங்கிழைத்த மதத்தலைவர்களை எதிர்த்தலும் அப்போக்குகளை கடுமையாகச் சாடியதும்தான் அவர்கள் செய்தது. உண்மையான சமணத்துறவியரையும் புத்தத் துறவியரையும், மிகப்போறியிருக்கிறார்கள், பிறழ உணர்ந்த கருத்துக்களை கடுமையாக சாடியிருக்கிறார்கள். சேக்கிழாரின் பெரியபுராணத்தின் குறிக்கோளும், இவை தழுவியவையே ஆனால் அவர் காலத்தில் இன்னும் சாதிய போக்குகள் வலுப்பெற்றிருந்தன, எனினும், எல்லோரும் கடவுளை அடைய முடியும் என்று காட்டவே பல தொழில் பின்னணியில் உள்ளவர்களின் கதைகளை செய்யுளாக இயற்றினார். கோயிலில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ளன. பிறப்படிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கூறும் மனுநீதி வழியில் இவை எதுவும் நடைபெறாது. இவைபற்றியெல்லாம் எழுதத்தொடங்கினால் மிக நீளும். தமிழர்களின் இறைகொள்கைகள், அரசியல் கொள்கைகள், குமுகாயக் கொள்கைகள், இசைக் கொள்கைகள், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவ இயல் கொள்கைகள், இவை பற்றியெல்லாம் அடைந்த முன்னுரிமையான பெருமைகள் எல்லாம் மறுத்தும், மறைத்தும் வருவதே இன்றளவும் நிகழ்வது. கருத்து வெளிப்பாட்டில் புதிய வாய்ப்புரிமைகள் இன்றைய இணைய-வலை சூழலிலே இருப்பதால், இவையெல்லாம் பெருமளவும் சரிசெய்யப்படும் என்று நம்புகிறேன். --C.R.Selvakumar 18:17, 21 ஜூலை 2006 (UTC)செல்வா

பக்தி நெறி பற்றி விரிவான கட்டுரை எழுதப்பட வேண்டும். சைவத்துக்கும் சமண, பெளத்த சமயங்களுக்கு இடையயே நடந்த போட்டிகள் நீங்கள் கூறியபடி அப்படி ideal ஆக நடைபெற்றிருக்க சாத்தியமில்லை, தற்சமயம் நான் வாசிக்கும் சில புத்தகங்களும் அப்படித்தான் கூறுகின்றன. பல சமணர்கள் தூக்கிலடப்பட்டு, பல சமண பள்ளிகள் தீயிடப்பட்டதாக குறிப்புகள் உண்டு. சமண பெளத்த சமயங்களிடையே பல குறைபாடுகள் இருந்தன (எ.கா. சமணர்களின் பெண்கள் நோக்கிய கருத்துக்கள் மிகவும் பிற்போக்கானவை.), இருக்கின்றன ஆனால் தமிழர்கள் ஒரு காலம் அச்சமயங்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது மிகவும் மறைக்கப்படுகின்றது. பக்தி நெறி அல்லது பக்தி இயக்கம் வேத சாதிய அமைப்பை நேரடியாக எதிர்த்ததா என்பது கேள்விக்குரியதே. இன்றுவரை சைவர்கள் வேத சாதி அமைப்புகளுடன் ஒத்துபோவதையே காணக்கூடியதாக் உள்ளது. சைவத்துக்கு வேதம் சம இடம் தரவிட்டாலும், தந்தது போதும் என்ற ஒரு நிலையே இருக்கின்றது. மேலும், இன்றும் பெரும்பாலும் பிராமணவர்களை தவிர வேறு யாரும் கருவறைக்குள் போவது தவிர்க்கப்பட்டே வருகின்றது. இன்று சைவம் சாதியத்தை நேரடியாக மறுக்கின்றதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

என்ன கூற வருகின்றேன்...பழந்தமிழர் சிறப்புக்கள் நாம் சிறப்பிக்கவேண்டும், எனினும் இன்றைய நிலையை மேம்படுத்துவதற்கு பண்படுத்துவதற்கு அது பயன்பட வேண்டும். --Natkeeran 21:23, 21 ஜூலை 2006 (UTC)

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் கற்பியலிலும் மரபியலிலும் நால்வகை வருணத்தாரைப் பற்றியும் மிக மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சொல்லில் பல பொருளைச் சுருக்கிச் சொல்லும் தொல்காப்பியம் வருணப்பிரிவுகளைப் பற்றிப் பேசும் போது மிக விரிவாகச் சொல்லுவதால் வருணப்பிரிவுகள் தொல்காப்பியக் காலமான சங்க காலத்திலும் அதற்கு முன்பும் தமிழ்க் குமுகத்தில் நன்கு வேரூண்றி இருந்திருக்கலாம். பார்க்க: வருணபேதத்தின் ஊற்றுக்கண்: தொல்காப்பியம்--Kanags 00:44, 24 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கனகு, படித்தேன். மறுமொழி கூறியதில் (பேர் எழுதாத) ஒருவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதைப் பாருங்கள். அவருடைய கூற்றுதான் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது என்பது என் கருத்து. தொல்காப்பியத்தில் இடைச்செர்கல்கள் உள்ளன என்பது மிகத்தெளிவாக உணரப்படுவது (இரா. இளங்குமரன் அவர்கள் தெளிவாக ஒரு சிலவற்றை எடுத்துக் காடியுள்ளார்.). தொல்காப்பியத்திலே உயிர்களின் பகுப்பு என்னும் பகுதி மிக்ச் சிறப்பானது. அதிலேயே இடைச்செருகல் இருப்பதை இரா.இளங்குமரன் ஐயம் திரிபற விளக்கியுள்ளார். அவர்போல் ஆழமான அறிவு இல்லாதவரும் மிக எளிதாக இடைச்செருகல்களை அறியலாம். தொல்காப்பியம் உங்களிடம் இருந்தால் நூற்பாக்கள் 571 முதல் 613 வரை படித்துப் பாருங்கள். அவைகளில் உயிர்ப்பிரிவுகள், விலங்குகளில் ஆண் பெண் பெயர்கள் பற்றியெல்லாம் கூறிவந்தவர், திடீர் என்று 614-615 ஆம் நூற்பாக்களில் அந்தணர்க்குரியன, அரசர்க்குரியன என்கிறார். இன்னும் நூற்பா 631 வரையிலும் சில தொழிற்குலங்களுக்கு உண்டான சில செய்திகளைக் கூறுகின்றார். பின்னர் திடீர் என்று மீண்டும் 630 ஆம் நூற்பாவில் புறக்காழெனவே புல்லென்ப என்றும் 632 ஆம் நூற்பாவில் தோடே மடலே என்று புல் வகையின் உறுப்புகள் பற்றியும் மர வகை உறுப்புகள் பற்றியும் கூறி 635 ஆம் நூற்பாவில் அப்பகுதியை முடிக்கின்றார். 615-629 முடிய உள்ளன இடைச்செருகல்கள் என்பன தெள்ளத்தெளிவாக உணரலாம் (மொழி நடையும், கருத்துக்கள் அமைப்பும் முறையின்றி இருப்பதும் உணரலாம்). தமிழர்களிடையே தொழில்வழி இனங்களும் குலங்களும் இருந்திருக்க வேண்டும், ஆனால், பிறப்படிப்படையில் சாதிகளும், அவைகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளும் இருந்ததில்லை என்பது நான் புரிந்து வைத்துள்ளது. மாற்றுக் கருத்துக்கள் வலுவாக இருந்தால் என் கருத்துக்களை மாற்றிக் கொள்வேன். இடைச்செருகலாக உள்ள தொல்காப்பிய நூற்பாக்களிலும் (இவை 9-10 ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று படித்த நினைவு) பிறப்படிப்படையில் சாதிகள் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனு நீதி நூலையும் பிற பல ஸ்ம்ருதி நூல்களையும் படித்துப்பாருங்கள், பின்னர் அது போல தமிழில் ஏதேனும் நூல் உள்ளதா என்று காட்டுங்கள். --C.R.Selvakumar 02:25, 24 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]


பிராமணர் என்பதி ஜாதி இல்லை; வருணம். பிராமண ஜாதிகள் (தமிழகத்தில்) ஐய்யர், வடகலை ஐய்யங்கார், தென்கலை ஐய்யங்கார் , மற்றும் தேசாஸ்தர் போன்ற மராட்டிய பிராமணர்.--விஜயராகவன் 11:29, 9 பெப்ரவரி 2007 (UTC)

Western conceptualization of caste[தொகு]

"In Dumont's view, the sociocentricity of the western observer makes him or her introduce power where religious values are primary; similarly, the interests and perspectives of the individual are introduced where the group and holism prevail."

The Comparison of Civilizations - T.N. Madan

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:20, 14 மே 2007 (UTC)[பதிலளி]

விளக்கம் தேவை[தொகு]

ஆரியர்களின் வருகை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.அவர்கள் வட பகுதயில் ஆதிக்கம் செலுத்தினர்.இந்த மண்ணிற்கு சொந்தமான திராவிடர்களை அவர்களின் கால கட்டத்தில் பஞ்சமன் சூத்திரன் அரக்கன் என்றல்லாம் வர்ணித்தனர்.

இது எப்படி படிவளர்ச்சி கோட்பாடு என்று விளக்கம். நன்றி. --Natkeeran 13:11, 3 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாதி&oldid=2675229" இலிருந்து மீள்விக்கப்பட்டது