பேச்சு:சலில் சௌதுரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயமோகன் எழுதிய இந்தப் படைப்பு அனுமதியுடனும், சிறு மாற்றங்களுடனும் த.வி வில் வலையேற்றப்படுகின்றது. --Natkeeran 15:37, 2 ஏப்ரல் 2008 (UTC)

இது சௌதரி என இருத்தல் வேண்டும் వినోద్  வினோத் 03:30, 3 ஏப்ரல் 2008 (UTC)
நல்ல கட்டுரை. ஆனால், சில இடங்களில் இதன் நடை கலைக்களஞ்சிய நடைக்குப் பொருத்தம் இல்லாததாக இருப்பது போலத் தெரிகிறது. தலைப்பில் சலில் என்றும் உள்ளே சலீல் என்றும் உள்ளது. வினோத் சுட்டிக்காட்டியதுபோல் சௌதுரி சரிபோல் தெரியவில்லை. ஆனால் சௌதிரி அல்லது சவுதிரி என்பவற்றில் ஒன்று சரியாக இருக்கலாம் போல் தெரிகிறது. திருத்தங்கள் தேவை. மயூரநாதன் 09:43, 3 ஏப்ரல் 2008 (UTC)
இந்தியில் சலில் சௌத்ரி என்று இருப்பதால், சலில் சௌத்திரி, சலில் சௌதிரி என்றோ அல்லது சலில் சௌத்ரி என்றோ பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. மயூரநாதன் 09:53, 3 ஏப்ரல் 2008 (UTC)
இந்தி மொழியில் सलिल चौधरी என்று உள்ளது. இதனை ஸலில் சௌத4ரி என்றோ ˘சலில் சௌ'த:ரி என்றோ குறிப்பிடலாம். கட்டுரைத் தலைப்பாக சலில் சௌதரி என்று இருப்பது தமிழில் சரியே. தமிழில் பலுக்கும் பொழுதும் (ஒலிக்கும் பொழுதும்) காற்றொலி சகரமாக இல்லாமல், chalil chaudhari என்று சொல்லாம். தமிழ் முறைப்படி அது சரியே. பழனியப்பனையும், ஞானசம்பந்தனையும், வளவனையும் ஆங்கிலத்திலோ, சீன மொழியிலோ நாம் கூறும்படியாகவா எழுதுகிறார்கள் அல்லது பலுக்குகிறார்கள்? மொழி இயல்புகளை ஒட்டித்தான் எழுதவும் ஒலிக்கவும் இயலும். சீன, நிப்பானிய (சப்பானிய), டாய்ட்சு (செருமன்), ஆங்கில மொழிக்காரர்களுக்கு இருக்கும் உரிமை தமிழர்களுக்கு இருக்ககூடாது என்று ஒருசிலர் நினைப்பதால் வரும் குளறுபடிகள் இவை. IAST எழுத்துக்களுக்கு என் பரிந்துரையை இங்கேயும், இங்கேயும் பார்க்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சலில்_சௌதுரி&oldid=228521" இலிருந்து மீள்விக்கப்பட்டது