பேச்சு:சமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமண சாதுக்கள் புகைப்படம் தவறானது. இந்த புகைப்படம் வாடா நாட்டு ச்வேடாம்பர ஜைன சாதுக்களின் புகைபடமாகும்.

இந்தக் கட்டுரை சுவேதம்பரர் மற்றும் திகம்பரர் இரு பிரிவினரையும் சேர்த்தே குறிக்கிறது.--சோடாபாட்டில் 13:40, 25 திசம்பர் 2010 (UTC)

சமணம் மற்றும் ஜைனம் பொருள் வேறுபாடு[தொகு]

சேந்தன் திவாகரம், பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் சமணமும் ஜைனமும் வேறு வேறு என்கின்றன. ஜைனம் சமணத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இந்நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. மேலும், தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களை நிகண்ட வாதி, அருகர், ஆருகதர், சாதி அமணர் என்றேக் குறிப்பிடுகின்றன. சமணம் எனும் சொல் தமிழர்களின் நெறியான ஆசீவக நெறியையும் சாவக நெறியையும் ஜைனத்தையும் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல். ஜைனத்தை மட்டுமேக் குறிக்கும் தனிச்சொல் அல்ல. ஆகையால், இப்பக்கத்தின் பெயரை 'ஜைனம்' என மாற்றி 'சமணம்' என்னும் பெயரில் புதிய பக்கத்தை உருவாக்க வேண்டும். ச.பிரபாகரன் (பேச்சு) 10:52, 1 திசம்பர் 2013 (UTC)

விளக்கத்திற்கு நன்றி நண்பா! இந்த கட்டுரையை ஜைனம் என்ற தலைப்பிற்கு நகர்த்துங்கள். பின்னர், இதே தலைப்பில், உங்கள் தகவலை தொகுத்து சேமியுங்கள். கட்டுரையை நகர்த்துவது எளியது தானே? :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:21, 4 திசம்பர் 2013 (UTC)
ஐயா, நாம் அப்படியே நகர்த்தினால் திருத்த வரலாறுகளும் உரையாடல்களும் பழைய பக்கத்துடனேயே இருக்கும் அல்லவா. அதனால் தான் சிறிது தயக்கம். - ச.பிரபாகரன் (பேச்சு) 18:37, 4 திசம்பர் 2013 (UTC)
இந்தப் பொருள்/கொள்கை வேறுபாடு பற்றி கட்டுரையில் குறிப்பிடலாம். இது பற்றி கூடிய உசாத்துணைகள் தேவை. பிற பயனர்கள்/துறை சார்ந்தோர் கருத்தறிந்து செயற்படலாம்.--Natkeeran (பேச்சு) 18:58, 4 திசம்பர் 2013 (UTC)
நீங்கள் கூறியது போல, பொருள் வேறுபாட்டை உசாத்துணைகளுடன் கட்டுரையின் சமணம்#சமணம் என்ற சொல்லின் பொருள் எனும் பகுதியில் குறிப்பிட்டிருக்கிறேன். - ச.பிரபாகரன் (பேச்சு) 19:52, 4 திசம்பர் 2013 (UTC)
இந்தக் கட்டுரை சமணம் பற்றியதாகவே இருக்கட்டும். இதன் தலைப்பை மாற்ற வேண்டாம். நீங்கள் விரும்பினால் ஜைனம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தொடங்குங்கள். அதன் பின்னர் (தேவை ஏற்படின்) இரு கட்டுரைகளையும் வேறுபடுத்தலாம், அல்லது இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 20:14, 4 திசம்பர் 2013 (UTC)
நன்றி. -- ச.பிரபாகரன் (பேச்சு) 20:37, 4 திசம்பர் 2013 (UTC)

ஜைனத்துக்கு தனிக்கட்டுரை உளதால் இதை ஆங்கிலக் கட்டுரையான en:Śramaṇa என்பதற்கு இணையாக மாற்றுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:25, 9 நவம்பர் 2015 (UTC)

தேவைப்பட்டால் en:Sramana கட்டுரையும் துணைக்கு அழைக்கப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:06, 14 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமணம்&oldid=2117859" இருந்து மீள்விக்கப்பட்டது