பேச்சு:சமச்சீர் பல்லுறுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

symmetric என்பதற்கு சமச்சீர் என்று பயன்படுத்துவது ஒருவாறு பொருந்தும் என்றே நினைக்கின்றேன். எனினும் ஒற்றியம் என்னும் சொல் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மூன்று, நான்கு ஐந்து என்று பன்முகமாகவும் ஒற்றியம் இருக்கக்கூடும். ஒற்றியம் என்னும் சொல் ஒன்றின் மீது ஒன்றை வைத்தால் ஒற்றுமையாக இருப்பது என்று பொருள்படும். ஒரு தாளில் ஒரு வடிவம் மையால் பதிந்திருந்தால், அதனை இரண்டாகவோ மூன்றாகவோ ஒற்றி எடுப்பதாகவும் பொருள் கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட முறைப்படி மாற்றினால் ஒன்றாகவே, ஒற்றுமையாகவே மாறாது இருப்பது ஒற்றியம். இருகிளை, முக்கிளை, நாற்கிளை.. என்று பல்கிளை ஒற்றியம் பற்றியும் பேசலாம். எனவே சிமெட்ரிக் என்பதற்கு ஒற்றியம் என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது. சமச்சீர் என்பது standard என்னும் வகையான பொருள் தரவும் கூடும். ஒற்றியம் என்பது முறைசார்ந்து பெயர்த்தால் மாறாமை (ஒற்றுமை) எய்தும் ஒன்று எனலாம்.--செல்வா 04:36, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]