பேச்சு:சமச்சீர்க் கல்வி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Matriculation Schools = பதின்நிலைப் பள்ளிகள் (மக்கள் தொலைக்காட்சியில் இப்பதம் பயன்படுத்திக் கேட்டிருக்கிறேன். சரியாகவும் தோன்றுகிறது. அதனையே பயன்படுத்தலாமே!)

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:41, 26 மே 2011 (UTC)[பதிலளி]
சிறப்பு அம்சங்கள் என்ற தலைப்பின் கீழ் அடைப்புக்குறிக்குள் மாற்று கருத்துகள் உள்ளதை நீக்க வேண்டும் இவை தனிப்பட்ட நபரின் கருத்தாக உள்ளது ஆதாரத்துடன் இருந்தால் அதை இத்திட்டத்தின் குறைகள் என்ற தலைப்பின் கீழ் தரலாம். --குறும்பன் 21:10, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]
உடன்படுகிறேன். “குறைகள்” என்ற தனி தலைப்புக்கு நகர்த்த வேண்டும். புற ஆதாரங்கள் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும் (பலரும் சொல்லி வரும் கருத்துகளே)--சோடாபாட்டில்உரையாடுக 04:05, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]

பயிற்று மொழியாகத் தமிழ்[தொகு]

"எப்பொழுதும் பயிற்றுமொழியாகத் தமிழ் தொடரவேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை"...பயிற்று மொழியாக பல பாடசாலைகளில் தமிழ் இல்லையே. இதன் ஒரு முக்கிய கூறு தாய் மொழிக் கல்வி..இல்லையா. --Natkeeran 13:21, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]

"எப்பொழுதும் ..யாரும் மறுக்கவில்லை". இதைதான் எங்க பக்கம் சப்பைகட்டு பேச்சு என்பார்கள்.அதாவது ஒரு கருத்தை ஏற்பர். அங்ஙனம் ஏற்போர் பள்ளியில், தமிழ் இருக்காது.தாய் மொழியை பாராட்டுவர். ஆனால், அதனை வளர்க்க முயலார். பலவாறு தமிழை ஒதுக்குவதற்குக் காரணங்கள், எனக்குத் தெரிந்தவரை இரண்டே.

  1. சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி, ஆங்கிலவழிக் கல்விகற்பித்தலைத் தேர்ந்தெடுத்தல்.அதனால், தமிழைக் கற்றத்தராமல் தப்பித்தல்.ஏன்னா,தமிழைக் கொண்டு காசுபண்ணமுடியாது.
  2. மாணவர் அதிகம் விரும்புவது பிரெஞ்சு, செருமன் என்று சொல்லி, பணத்திற்காகக் அயலக மொழிகளை கற்றுத்தருவர்.ஆனால், அண்டை மாநில மொழிகளை, கற்றும் தரும் வழிவகைகளை கல்வி இயக்ககமே செய்வதில்லை. 02:01, 14 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


அட்டவணைத் தலைப்பு[தொகு]

எளிமையான தலைப்புச் சொற்களே அதிக நபரை அடையும். இங்குள்ள அட்டவணைத்தலைபை, ஏற்போர் கூறுபவை, மறுப்போர் கூறுபவை என மாற்றினால், அதில் கூறப்பட்ட கருத்துக்கள் இன்னும் தெளிவாகும். உயிரியல் பாடத்தின் வகைப்பாட்டியலைக் கண்டு பல மாணவர்கள் ஓடக் காரணம், தலைப்பு எளிமையாக இல்லை என்பது தான். அந்த உயிரியல் தவறை, நாம் தவிர்ப்போமே.02:07, 14 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

எதிர் கருத்துகள்[தொகு]

\\\இது போன்ற விவாதங்கள் தரம் குறைந்த கல்வியை, அதுவும் அனைத்து வகைப் பள்ளிகளிலுமல்லாது அரசுப்பள்ளிகளில் கல்வி கற்றவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மட்டும் நடத்தப்பட்டது.\\\ இக்கருத்து அரசு பள்ளியில் தரம் குறைந்த கல்வி வழங்கப்படும் என்பது போல் உள்ளது. சமச்சீர் கல்வி என்பது board பற்றியது. இதைப்(கருத்து)பற்றி ஆதாரம் இருந்தால் இணைக்கலாம் இல்லாவிட்டால் இவ்வரியை நீக்கி விடலாம். --குறும்பன் 15:21, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]

சார்பு கருத்து[தொகு]

இது சார்பு கருத்து அல்ல. இத்திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது போல் உள்ளது. இதற்கு என்னால் ஆதாரம் திரட்ட முடியவில்லை. மாற்று கருத்துக்கும் என்னால் ஆதாரம் திரட்ட முடியவில்லை. ஆதாரம் இருந்தால் யாராவது இணையுங்கள். சார்பு கருத்துக்கு (தற்போது உள்ளது சார்பு கருத்தல்ல) ஆதாரம் கிடைத்தால் சேர்க்கிறேன். --குறும்பன் 15:26, 22 சூலை 2011 (UTC)[பதிலளி]

தாய்மொழிக் கல்வி இதன் கூறு இல்லை, பொதுப் பாடத்திட்டம் மட்டும்தான், ஆங்கிலத்திலும் தமிழிலும்[தொகு]

" முத்துக்குமரன் அறிக்கையின் 109 பரிந்துரைகளில் நான்கு மட்டுமே இதில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பொதுப் பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. மெட்ரிகுலேஷன், மாநில வாரியம், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்கிற நான்கு விசயங்களை நீக்கி ஒரே பாடத் திட்டம் என்பது மட்டுமே இதில் வரவேற்கத்தக்கதாக இருந்தது." http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15703&Itemid=447

--Natkeeran 21:15, 23 சூலை 2011 (UTC)[பதிலளி]

மனித முத்லீட்டை அடிபபடையாக கொண்டு செயல்படுவதாக சமசீர்க் கல்வி இருக்கவேனண்டும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமச்சீர்க்_கல்வி&oldid=849391" இலிருந்து மீள்விக்கப்பட்டது