பேச்சு:சந்தனா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்பிடு தகைமை[தொகு]

ஒருவர் ஏதோவொரு இயக்கத்தில் இணைந்திருந்தார். ஒரு நிகழ்வின் போது கொல்லப்பட்டார். இதை மட்டும் குறிப்பிடு தகைமையாகக் கொண்டால் உலகிலுள்ள எத்தனையோ இயக்கங்களுக்கு இதே மாதிரியான கட்டுரைகளை எழுதவும் பின்னர் அதையே காரணம் காட்டி நீக்கவும் நேரிடும். விடுதலைப் புலிகளைப் பற்றிய எத்தனையோ கட்டுரைகள் XX என்பவர் YY இயக்கத்தில் முக்கியமானவராக இருந்தார்; அவர் ZZ நிகழ்வின் போது கொல்லப்பட்டார் என்பதை மட்டும் குறிப்பிடுகின்றன. அத்தகைய கட்டுரைகளில் வேறெதற்கும் எந்த ஆதாரமும் காணப்படவில்லை. இவ்வாறாயின், வேறு நாடுகளிலும் தீவிரவாத இயக்கங்களாகக் குறிப்பிடப்படும் ஏராளமான இயக்கங்கள் இருக்கின்றன. அவ்வியக்கங்களைச் சேர்ந்தோருக்கெல்லாம் இத்தகைய கட்டுரைகள் வந்தால் ஏற்புடையதாகுமா?--பாஹிம் (பேச்சு) 09:50, 15 மார்ச் 2015 (UTC)

ஏதாவொரு இயக்கம் அல்ல. இவர்கள் தமிழர்கள். தமிழர்களுக்காகப் போராடியவர்கள். இது தமிழர்களின் வரலாறு. இது தமிழ் விக்கிபீடியா. தமிழர்களைக் குறித்து எழுதப்பட்டிருப்பது தமிழ் விக்கிபீடியாவில் செய்யக்கூடாத ஒன்றா? தமிழர்களுக்கென்று நாடு ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை இருப்பதில் என்ன தவறு? இது தமிழர்களுக்கானக் கலைக்களஞ்சியம். பாஹிம் செய்வது தவறான முன்னுதாரணம். உலகிலுள்ள எத்தனையோ இயக்கங்கள் தமிழர்களுக்காகப் போராடவில்லை. இந்த இயக்கம் தீவிரவாத இயக்கம் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். விக்கிபீடியா என்பது பொதுவெளி. ஒருபக்கச் சார்பானக் கருத்துகளை இங்குத் திணிக்கவேண்டிய அவசியம் இல்லை. பிற பயனர்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறன--நந்தகுமார் (பேச்சு) 12:26, 15 மார்ச் 2015 (UTC).
விக்கிப்பீடியா என்பது பொதுவெளி என்று கூறுகிறீர்கள். அதே நேரம் ஒரு பக்கச் சார்பான கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அது தவறு என்பதைத்தான் நானும் கூறுகிறேன். விக்கிப்பீடியா என்பது பொதுவான கலைக்களஞ்சியமே தவிர தனி நாடு உருவாக்கும் தளமல்ல.--பாஹிம் (பேச்சு) 12:35, 15 மார்ச் 2015 (UTC)
நந்தகுமார், விக்கிப்பீடியா நெறிமுறைகளுக்கு உட்பட்டே பாகிம் இக்கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையைக் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள், அவர்களின் முக்கிய நபர்களான தமிழ்ச்செல்வன், கிட்டு போன்ற அறியப்பெற்றோர்களின் கட்டுரைகள் இடம்பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே, இது குறிப்பிட்ட போராளிக் குழு தீவிரவாதிகளா இல்லையா தமிழர்களுக்காகப் போராடியவர்களைப் பற்றி எழுதலாமா இல்லையா என்பதைப் பற்றிய முறையீடு அன்று. விக்கிப்பீடியா உலகோர் அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றாலும் தமிழ் எழுத்தாளர்கள் முதலிய பல்வேறு ஆளுமைகளைப் பற்றி எழுதும் போது தேவைப்படும் ஆதாரங்களின் எண்ணிக்கை, தரம் ஆகியவற்றில் இளகிய எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம். அதே போல் போராளிகளையும் அணுகலாம். ஆனால், குறிப்பிடத்தக்கமை கேள்விக்குட்படத்தப்படும் போது அதனை நிறுவுவதற்கான முயற்சிகளை எடுக்கவே வேண்டும். அது எத்துறை பற்றிய கட்டுரையாக இருந்தாலும் சரி. தொடரும் உரையாடலை பகுப்பு பேச்சு:விடுதலைப் புலிகளின் போராளிகள் பக்கத்தில் மேற்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:45, 15 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சந்தனா&oldid=1818137" இலிருந்து மீள்விக்கப்பட்டது