பேச்சு:சத்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்திரம் என்பதைச் சிலர் "hotel" என்று மொழிபெயர்த்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது பற்றிய உங்கள் கருத்தென்ன?--பாஹிம் 01:32, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சத்திரம் என்பது பொதுவாக அக்காலத்தில் இலவசமான தங்குமிட வசதிகளையே குறிக்கும் என நினைக்கிறேன். ஓட்டல் என்பது உணவு விடுதி எனலாமா?--Kanags \உரையாடுக 02:09, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
விடுதலைப் புலிகளும் "hotel" என்பதைச் "சத்திரம்" என்றே எழுத ஊக்குவித்ததாக என் நண்பன் சொன்னான். உணவு விடுதி என்றால், தற்காலத்தில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டல்களையும் உணவு விடுதி என்றே அழைக்கும் நிலை ஏற்படுமல்லவா?--பாஹிம் 02:43, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
சத்திரம் என்பது தங்குமிடமே. பண்டைய இலக்கியங்களில் வலம்வரும் ஒருவர் சத்திமுற்றப் புலவர். இவரின் உண்மைப் பெயர் தெரியவில்லை. ஆயினும், இவர் அடிக்கடி புரவலர்களைச் சந்திக்கப் போமிடத்து சத்திரங்களில் தங்கிச்செல்லும் வழக்கமுடையவராயிருந்தார். இவர் வாழ்ந்த இடமும் சத்திரமொன்றுடைய முற்றப்பகுதியிலேயே இருந்தது என்பதைச் செய்யுள்கள் வாயிலாக அறியமுடிகிறது. “நாராய்! நாராய்! செங்கால் நாராய்! எனத் தொடங்கும் பாடலையும் இவர் சத்திரத்தில் தங்கியிருந்தே பாடினார். எனவே சத்திரம் என்பதற்கு வேற்றுச் சொற்கள் அவசியமில்லை. சத்திரம் சத்திரமாகவே இருக்கட்டும். பாஹிம், சத்திரம் என்பதற்கு தங்குமிடம், தங்கிச் செல்லுமிடம் எனும் பொருள்தரும் ஆங்கிலச் சொல்லொன்றையும், 'ஓட்டல்' என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லொன்றையும் பெயர்க்குக. மொழியியலாளராகிய உங்களால் இதுமுடியும் என நினைக்கிறேன். --கலைமகன் பைரூஸ் 03:50, 18 நவம்பர் 2011 (UTC)
சத்திரம் என்பது இலவச மடமே. தென் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இன்றும் பழக்கத்தில் இருந்துள்ளது. கோயில்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றில் அறக்கட்டளைகள் நடத்தும் “சத்திர”ங்களை இன்றும் காணலாம்.
ஏழு நட்சத்திர ஹோட்டல்களையும் உணவு விடுதி - தற்போது “ஐந்து நட்சத்திர விடுதி” போன்ற பயன்பாடு பரவலாகத்தானே உள்ளது (சன் டிவி யில் கூடக் கேட்டதாக நினைவு)--சோடாபாட்டில்உரையாடுக 05:07, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

விடுதி என்பது "lodge" அல்லவா? எனினும் lodge என்பதற்கு hotel என்றொரு பொருளும் உள்ளது. எனவே, "விடுதி" என்பது பொருத்தமாகத்தான் படுகிறது. எங்கள் ஊரில் விடுதிக்காரர் என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள்.--பாஹிம் 05:28, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டில் "lodge" மற்றும் "hotel" ஒன்றே (அளவு மட்டும் மாறும்; எனினும் சிறிய லாட்ஜுகளும் “ஓட்டல்” எனப் பெயர் வைத்துக்கொள்வர்). இரு ஆங்கிலச் சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. hotel என்பதில் restaurant மட்டும் இருந்து lodging இல்லையெனில் ”உணவு விடுதி” என்கிறோம். மற்றபடி நான்கைந்து அறைகள் உள்ள தங்கும் விடுதிகள் கூட “hotel" என்று அழைக்கப்படுகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 05:36, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
இன்னொன்றை மறந்து விட்டேன். "hostel" ஐயும் விடுதி என்று தான் சொல்கிறோம். தங்குவருக்கு ஏற்றார் போல் “மாணவர்/மாணவியர் விடுதி”, “பயணிகள் விடுதி” என்றழைக்கிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:48, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
கனகுவின் கூற்றுப்படி “உணவு விடுதி“ யைச் சரியென்போம். --கலைமகன் பைரூஸ் 05:54, 18 நவம்பர் 2011 (UTC)
உணவு விடுதி, உணவகம் முதலானவை hotel ஐ குறிக்கும்."அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல்" என பாரதி பாடுவான். தண்ணீர்ச் சத்திரம் என்ற சொல்லின் பயன்பாட்டை நாவுக்கரசர் முதலான நாயன்மார்கள் பற்றிப் படிக்கும் காண்கிறோம். ஆகவே சத்திரம் என்பது பசித்துவருபவர்களுக்கு உணவு நீர்,முதலானவற்றை தருமாகக் கொடுக்கும் இடம். மடம் (தங்குமிடம்) என்பது சற்று சமய அடிப்படைகளை கொண்ட அதே பயன் சுட்டுகின்ற சொல்.--சஞ்சீவி சிவகுமார் 10:52, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சத்திரம்&oldid=930716" இலிருந்து மீள்விக்கப்பட்டது