பேச்சு:சங்கரலிங்கனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்டன் சங்கரலிங்க நாடார் என்பதை ஏன் சங்கரலிங்கனார் என்று தலைப்பு கொடுத்தீர்கள் என தெரியவில்லை. விக்கியிலும் \\சங்கரலிங்க நாடார் என்று அறியப்படும் கண்டன் சங்கரலிங்கனார்\\ என்றே குறிப்பிடப்படுகிறது. சாதிய எதிர்ப்பு என்றால் எல்லா பெயர்களுக்கு அது பொருந்த வேண்டும். நண்பர்கள் தயவு செய்து கவணிக்கவும்.

அடுத்ததாக அவர் பெயருடன் ஏன் கண்டன் என்ற வார்த்தை இணைந்தது என்பதற்கு விளக்கம் இல்லை. யாருக்கேனும் தெரிந்தால் குறிப்பிடவும். சிலருக்கு ஊர் பெயர் முன்னால் இணைக்கப்பட்டிருக்கும், ஆனால் இவர் பிறந்த ஊர் விழுப்புறம் என உள்ளதால், தெரிந்தவர்கள் கூறவும்.

பிறப்பு -

இவரின் பிறப்பு ஜனவரி 26 என்று கீழிருக்கும் தள இணைப்பு சொல்கிறது. கவணிக்கவும். வருடத்தினை இவர்கள் குறிப்பிடவில்லை.

http://desamaedeivam.blogspot.in/2011/01/blog-post_26.html

நன்றி.

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:08, 3 ஏப்ரல் 2012 (UTC)

சாதி எதிர்ப்பு இல்லை. கட்டுரையில் முதலில் பெயர் வரும் போது முழுப்பெயர் இட வேண்டும். அதன் பிறகு எளிமை கருதி பெயரைச் சுருக்கமாக இடலாம். பெயரைச் சுருக்கும் விதம் மரபின் படியும் பொதுப்பயன்பாட்டின் படியும் இருக்க வேண்டும். மதிப்பு கூட்டும் விதமாக ஆர் விகுதி சேர்த்து எழுதுவது தமிழ் மரபுக்கு உட்பட்டதே. ஆர் விகுதி இல்லாமலும் எழுதலாம். --இரவி (பேச்சு) 10:54, 3 ஏப்ரல் 2012 (UTC)

பொருளடக்கம் தொடர்பாக[தொகு]

  • 1 வாழ்க்கை
  • 2 உண்ணாவிரதம்
  • 3 மறைவு
  • 4 தமிழ்நாடு பெயர் மாற்றம்
  • 5 செந்தமிழன் கொ.சி.சங்கரலிங்கனார்...!
  • 6 உண்ணாவிரத தியாகி
  • 7 தமிழ்நாடு பெயர் மாற்றம்
  • 8 மேற்கோள்கள்

இரண்டு முறை எல்லாம் இடம்பெற்றுள்ளன , இந்தத் தொகுப்பே அதற்குக் காரணம் .--Commons sibi (பேச்சு) 09:05, 23 ஆகத்து 2014 (UTC)