பேச்சு:கோயம்புத்தூர் புறவழிச்சாலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது எல் & டி புறவழிச்சாலை என்றால் அவினாசி சாலையிலிருந்து திருச்சி சாலைக்கும் செல்லலாம். அங்க சுங்கம் வசுலிக்கறாங்க. அவினாசி சாலையில் இருந்து எல் & டி புறவழிச்சாலை வழியாக பாலக்காடு சாலைக்கு போயிருக்கிறேன். மதுக்கரையிலிருந்து எல்லா சிமெண்ட் லாரிகளும் அவினாசி சாலைக்கு இப்படி தான் வரும் என்று எண்ணுகிறேன்--குறும்பன் 20:53, 13 பெப்ரவரி 2012 (UTC)

கட்டுரை இரு தனி புறவழிச்சாலைகளை ஒன்றாக குழப்புவதாகத் தெரிகிறது. நீலாம்பூரிலிருந்து மதுக்கரைக்கான புறவழிச்சாலை இயக்கத்தில் உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து சூலூருக்கான புறவழிசாலை பயனுக்கு விடப்பட்டுள்ளதா ? --மணியன் 02:20, 14 பெப்ரவரி 2012 (UTC)
இந்த சாலையை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.. ஆங்கில விக்கியில் உள்ளவாறு மொழிபெயர்த்துள்ளேன்..--shanmugam 02:35, 14 பெப்ரவரி 2012 (UTC)மேலும் இது பற்றிய விவரங்கள் இங்கு [1] [2][3]உள்ளன. மேலும் இதன் படி இந்த முழு திட்டத்திற்கும் கோயம்புத்தூர் புறவழிச்சாலை என பெயரிடப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இங்கும் இது பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.சூலூர் சாலை பற்றிய விவரங்கள் ஏதுமில்லை எனினும் சூலூர் பாலம் பற்றி மட்டும் இதில் உள்ளது --shanmugam 05:18, 14 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி சண்முகம். இது மட்டுமே தற்போது இயக்கத்தில் உள்ளது. பயனர்:குறும்பன் குறிப்பிடுவதும் அஃதே. மற்றவை திட்டமிடல் கட்டத்தில் இருக்கும். நான் ஆங்கில விக்கி அடக்கத்தையும் கண்டு உள்ளூர் நிலமையையும் அறிந்து திருத்துகிறேன்.--மணியன் 06:59, 14 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி மணியன்.--shanmugam 07:35, 14 பெப்ரவரி 2012 (UTC)

பழைய மாநில நெடுஞ்சாலை 544 என்பதே (இவ்வெண் இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக தெரியவில்லை) தேசிய நெடுஞ்சாலை 47. மணியன் ஒருமுறை சரிபார்த்து மாற்றிவிடவும். ஆ.விக்கியிலும் மாற்றிவிடலாம். கூகுளில் இப்ப 544 என்று காட்டுகிறார்கள் அதை பார்த்து எழுதியதால் இத்தவறு என்று எண்ணுகிறேன். பிங்கில் இன்னும் 47தான். கூகுளிலும் முன்பு 47தான். நிறைய இடங்களில் தவறாக மாற்றியுள்ளார்கள், எகா என்எச் 7 இப்போது என்எச் 44 ஆக மாறியுள்ளது. --குறும்பன் 17:11, 14 பெப்ரவரி 2012 (UTC)

குறும்பன், நமது இந்திய அரசு சப்தமில்லாமல் நாம் சிறுவயது முதல் பழக்கப்பட்டுப்போன தேசிய நெடுஞ்சாலை எண்களையெல்லாம் சீர்மை பேண்கிறோம் என்று சொல்லி 2010 முதல் ஓர் அரசிதழ் அறிவிப்பு மூலம் மாற்றியுள்ளனர் :( இது குறித்து ஊடகங்களிலும் எந்த எதிர்ப்போ உரையாடலோ நடந்ததாகத் தெரியவில்லை. எனவே வீட்டு எண்களுக்கு பழைய எண்/புதிய எண் என்ற குழப்பங்களைப் போல இனி சாலை எண்களிலும் பழைய/புதிய எண் குழப்பங்கள் நேரிடும். பார்க்க வாழ்க பாரதம் !--மணியன் 03:12, 15 பெப்ரவரி 2012 (UTC)
தகவலுக்கு நன்றி மணியன். அடுத்த சீர்மை எப்பவோ? :-( --குறும்பன் 17:28, 15 பெப்ரவரி 2012 (UTC)