பேச்சு:கோட்டை பிள்ளைமார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் கோட்டைப் பிள்ளைமார் என்று ஒரு சமூகத்தினர் இருந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த பகுதி முழுவதும் கோட்டை போன்று சுற்றுச்சுவர்களால் கட்டப்பட்டு தனிமையாக, ஒரு குழுவாக வாழ்ந்து வந்தனர். இப்பகுதியிலிருந்து ஆண்கள் மட்டுமே இக்கோட்டைச் சுவர்களைத் தாண்டி வெளியில் வந்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்களாம். பெண்கள் இந்தக் கோட்டைச் சுவரைத் தாண்டி எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வருவதில்லை என்றெல்லாம் நான் தூத்துக்குடியில் +2 படித்த காலத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது இந்நிலை அங்கு இருக்கிறதா? என தெரியவில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:43, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் தேனியாரே. அவர்கள் தற்போது அழிந்து விட்டதாகவே நான் படித்தேன். அதற்கு இந்த கோட்டை தாண்டாத பழக்கம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது அவர்கள் பற்றி நான் தேடுவதன் காரணம் நற்குடி வேளாளர் வரலாறு (நூல்) அவர்கள் படைத்தது என்று கருதப்படுவது தான். இதில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு ஆண்டதாக மாங்குளம் கல்வெட்டு கூறும் நெடுஞ்செழியன் (மாங்குளம்) மற்றும் கடலன் வழுதி பெயர் காணப்படுகிறது. அதனால் இது வரலாற்று நூலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இந்த நூலை மதிவாணன் என்ற அறிஞர் மேற்கோள் காட்டியிருக்கிறார். தற்போது அந்நூல் கிடைக்கவில்லை. மதிவாணன் மேற்கோள்களில் இருன்து தான் நற்குடி வேளாளர் வரலாறு (நூல்) கட்டுரை எழுதப்பட்டது. அதில் 201 பாண்டிய மன்னர்களின் ஆட்சியாண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மதிவாணன் மேற்கோள்களில் சில பேரின் பட்டியலே உள்ளது. 201 ம் வேண்டும் என்றால் அந்நூல் வேண்டும். உங்களிடம் தெரிந்தவரிடமும் கேட்டுப்பாருங்களேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:32, 31 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]