பேச்சு:கைலாசம் பாலசந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவரின் அதிகாரபூர்வ பெயரை கை என்றும் கால் என்றும் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இவர் என்றும் தனது பெயரை கை. பாலச்சந்தர் என்று எழுதியது கிடையாது. வேண்டுமானால் "கைலாசம் பாலசந்தர்" எனத் தலைப்பை மாற்றலாம். இப்பெயர் மாற்றம் குறித்து ஒருமித்த கருத்து விக்கிப்பீடியாவில் பெறப்பட்டதாகத் தெரியவில்லை.--Kanags \பேச்சு 22:48, 11 ஜூலை 2008 (UTC)

பேச்சு: ம. ச. சுப்புலட்சுமி பக்கத்தில் உரையாடப்பட்டு, விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு பக்கத்தில் வழிகாட்டுதல் சேர்க்கப்பட்டது. இக்கொள்கையை மீளாய்வு செய்வதானால் செய்யலாம். தந்தையின் முழுப்பெயரையும் எழுதும் வழக்கம் தமிழரிடையே இல்லாததால் கை. பாலச்சந்தர் என்ற வடிவத்தையே விரும்புகிறேன். இது விசயத்தில் ஒவ்வொருவர் பெயராக உரையாடி முடிவு எடுக்க இயலாது. கையா காலா என்பது பிரச்சினை இல்லை. ஒருவரின் பெயரை நாம் தமிழ் முதல் எழுத்துகள் கொண்டு எழுத உரிமை, கடமை இருக்கிறதா என்பதே கேள்வி. அதிகாரப்பூர்வ பெயர் என்று பார்த்தால் தமிழ்நாட்டில் 95 வீதம் பேர் ஆங்கில முதல் எழுத்துகளையே கொண்டிருக்கிறார்கள். ஆங்கில ஒலிகளை ஒழுங்காக எழுத இயலாத பிற மொழிகளில் எப்படி அதிகாரப்பூர்வ முதல் எழுத்துகளைப் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. --ரவி 08:33, 12 ஜூலை 2008 (UTC)

தந்தையின் முழுப்பெயரையும் எழுதும் வழக்கம் தமிழரிடையே இல்லை என்கிறீர்கள், சரி, அதேநேரம் ஆங்கில ஒலிகளை ஒழுங்காக எழுத இயலாத பிற மொழிகளில் எப்படி அதிகாரப்பூர்வ முதல் எழுத்துகளைப் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை என்கிறீர்கள். தமிழர்களிடையே தனியே ஒரு வழக்கம் இருக்கும் போது, மற்ற மொழியினர் எப்படி எழுதுகிறார்கள் என்பதில் நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?--Kanags \பேச்சு 12:19, 12 ஜூலை 2008 (UTC)


ஆங்கில சுருக்கம் தருவது ஆங்கில மோகத்தில் அல்லது பழக்கத்தில் வந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதுதான் தமிழ் வழக்கம் என்று எங்கு எப்படி நியாப்படுத்தப்படுகிறது. இப்படி சிக்கலான இடங்களில் முழுப் பெயரையும் தரலாம். கை, கே என்பதைக் கடுரையிலும் குறிக்கலாம். விரும்பினால் பக்கமாற்றுத் தரலாம். --Natkeeran 12:30, 12 ஜூலை 2008 (UTC)

//அதேநேரம் ஆங்கில ஒலிகளை ஒழுங்காக எழுத இயலாத பிற மொழிகளில் எப்படி அதிகாரப்பூர்வ முதல் எழுத்துகளைப் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை என்கிறீர்கள். தமிழர்களிடையே தனியே ஒரு வழக்கம் இருக்கும் போது, மற்ற மொழியினர் எப்படி எழுதுகிறார்கள் என்பதில் நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?//

கனகு, இதை நான் சுட்டிக்காட்டியது எதற்கென்றால் பெயர்களைப் பொருத்தவரை அதிகாரப்பூர்வ எழுத்துக்கூட்டல், ஒலிப்பு என்று ஒன்று இருக்கவும் நமது மொழியைச் சிதைத்தேனும் அதை மதிக்கவும் தேவையில்லை என்பதற்கே.

அதாவது, குறிப்பிட்ட ஒலிகள், எழுத்துகள் இல்லாத மொழிகள் தங்களால் இயலாத போதும் தங்கள் மொழியைச் சிதைக்காது எழுதுகின்றனர். நம்மிடம், J, S, H போன்ற ஒலிகள், எழுத்துகள் இல்லாவிட்டாலும், பெயருக்குரியவர் அப்படி எழுதிவிட்டார் என்பதற்காக நாமும் தொடர்ந்து மொழியைச் சிதைத்து எழுதுகிறோம். எடுத்துக்காட்டுக்கு, கே. எஸ். ரவிக்குமார், ஜே. கிருஷ்ணமூர்த்தி. இங்கு இல்லாத, தேவையில்லாத எழுத்துகளை வலிந்து பயன்படுத்த வேண்டியிருப்பதுடன் தமிழ் முதல் எழுத்துகளைக் கொண்டு எழுதும் இயல்பான வழக்கமும் மீறப்படுகிறது.

தமிழ் முதல் எழுத்துகளையே ஒவ்வொருவரும் பயன்படுத்துவது நலம் என்பதில் நாம் உடன்படுவோம். ஆனால், கேள்வியோ ஒருவர் ஆங்கில முதல் எழுத்துகளைப் பயன்படுத்துகையில் அதை விக்கிப்பீடியாவுக்காகத் திருத்தித் தமிழில் எழுதுவது தகுமா என்பதே.

  • மக்கள் தொலைக்காட்சி, விடுதலை நாளிதழ் போன்ற இன்னும் பல தமிழார்வல ஊடகங்கள் முழுக்கத் தமிழ் முதல் எழுத்துகளைக் கொண்டே செய்திகள் வெளியிடுகின்றன. நாம் புதிதாகவும் ஒன்றும் செய்யவில்லை. கூடாததாகவும் ஒன்றும் செய்யவில்லை.
  • சொத்து ஆவணம் ஒன்றிலோ வங்கிச் சீட்டு ஒன்றிலோ பாலச்சந்தரின் கையெழுத்து போட்டு பணம் எடுக்க வேண்டி வந்தால் தான் கே.பாலச்சந்தர் என்று கையெழுத்திட வேண்டி இருக்கும். அங்கும் எழுத்துக்கூட்டலை விட அது அவரின் கையெழுத்து தானா என்பது தான் உறுதிப்படுத்தப்படும். வேறெங்கும் அதிகாரப்பூர்வப் பெயர் என்று கடைப்பிடிக்க வேண்டிய இருக்கிறதா தெரியவில்லை.
  • மு. கருணாநிதி என்று எழுதினால் முதல் எழுத்து மு தமிழ் எழுத்தைச் சுட்டுகிறது என்று புரிந்து கொள்ளலாம். ஏ, பி, சி, டி, இ, ஜி, ஐ, ஜே, கே, ஓ, பி, டி, யு, வி என்றெல்லாம் எழுதினால் அது ஆங்கில எழுத்தைச் சுட்டுகிறதா தமிழ் எழுத்தைச் சுட்டுகிறதா என்று குழப்பம் வருகிறது. இந்த வகையில் வேற்று மொழியினர் பெயர்களையும் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கொண்டு எழுதுகையில் இக்குழப்பம் வரும். ஆனால், அவர்கள் வேற்று மொழியினர் என்பதால் முதல் எழுத்துகளும் ஆங்கிலமாக இருக்கும் என்று ஊகித்தறியலாம். இல்லை, அவர்களது பெயர்களை முழுமையாக எழுதலாம்.
  • //இவரின் அதிகாரபூர்வ பெயரை கை என்றும் கால் என்றும் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இவர் என்றும் தனது பெயரை கை. பாலச்சந்தர் என்று எழுதியது கிடையாது.//

இதே சிந்தனை தானே கிரந்த எழுத்துகளிலும் பிரச்சினை உண்டாக்குகிறது? "ராமானுஜம் என்று தான் நாங்கள் எழுதுவோம், இராமானுசம் என்று நீ எப்படி எழுதலாம்" என்று தானே சண்டைக்கு வருகிறார்கள்? இரண்டிலும் தொக்கி நிற்கும் உரிமை, மரியாதை, அதிகாரப்பூர்வம் போன்ற கருத்துகள் மொழியின் இயல்பை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவது தானே பிரச்சினை?

கை என்று எப்படி எழுதலாம் என்று மட்டும் கேட்பது வேறு. கை, கால் என்றெல்லாம் எழுதலாமா என்றால் கே என்ற ஒலியை விட கை என்ற ஒலி ஏதோ குறைந்த ஒலி என்பது போல் ஒரு தோற்றம் வருகிறது :(

  • srilanka என்பதற்கு srilanka அரசின் அதிகாரப்பூர்வ எழுத்துக்கூட்டல் ஸ்ரீலங்கா என்று இருந்தாலும் ஈழத்தமிழர்கள் ஏன் சிறீலங்கா என்றே எழுதுகின்றனர்? மொழி சார் அரசியல், அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவது தானே காரணம்? ஆனால், இலங்கைத் தமிழர்கள் பலரும் சிறீலங்கா என்றே எழுதினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏன் விடாது ஸ்ரீலங்கா என்றே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? பொது வழக்கம், ஈழத் தமிழர்கள் விருப்பம் என்பதைச் சுட்டி தமிழ்நாட்டுத் தமிழரையும் சிறீலங்கா என்றே எழுத வைத்து விட முடியுமா? இதில், எது அதிகாரப்பூர்வமானது என்பதை யார் முடிவு செய்வார்கள்? அதைப் பொது வழக்கில் எப்படி நடைமுறைப்படுத்துவது?

என் புரிதலில் ஒவ்வொருவர் கொள்கைக்கு ஏற்பவும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வம் என்று ஒன்று தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. நம்முடைய கொள்கை என்னவென்று தான் தொடர்ந்து உரையாட வேண்டி இருக்கிறது. பாலச்சந்தர் என்ற ஒருவர் மேல் நமக்கிருக்கும் மதிப்பால், இது அவருக்கு விளையும் அவமானம் போல் தோன்றலாம். ஆனால், தனியொருவர் எவர் குறித்தும் பேசாமல் பொதுவாக இக்கொள்கையை இறுதி செய்வதே பொருத்தமாக இருக்கும்--ரவி 21:37, 16 ஜூலை 2008 (UTC)


தனியொருவர் எவர் குறித்தும் பேசாமல் பொதுவாக இக்கொள்கையை இறுதி செய்வதே பொருத்தமாக இருக்கும். ஏற்றுக் கொள்கிறேன். அப்படி என்றால் தமிழில் தருவதே பொருத்தம் என்பது தனிக்கருத்து.

  • பக்கமாற்று தேவையா?
  • பட்டப் பெயர்கள்!!!, பக்கமாற்று தேவையா?

--Natkeeran 22:48, 16 ஜூலை 2008 (UTC)

பக்கமாற்றுகள் கண்டிப்பாகத் தேவை. ஒருவரைக் குறித்து என்ன வகையில் எல்லாம் வாசகர்கள் தேடக்கூடுமோ, அத்தனை பக்க மாற்றுகளை எப்படி வேண்டுமானாலும் தரலாம்.--ரவி 22:51, 16 ஜூலை 2008 (UTC)

பயனுள்ள சிந்தனை. நன்றி. --Natkeeran 22:52, 16 ஜூலை 2008 (UTC)

நீண்ட விளக்கத்துக்கு நன்றி ரவி. பொதுவாக உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். தமிழிலேயே எழுதுவோம். ஆனாலும் , நீங்கள் குறிப்பிட்ட சில உதாரணங்கள் (சிறீலங்கா, இராமானுசன் போன்றவை) இந்த விவாதத்துக்குத் தேவையில்லாதது என்பது எனது கருத்து. இராமனுசன் தனது பெயரைத் தமிழில் எங்காவது எழுதியிருப்பாரா எனபதில் எனக்கு ஐயம் உண்டு. ஆனால் பாலசந்தர் எழுதியிருக்கிறார். கை. பாலசந்தர், ம. ச. சுப்புலட்சுமி, ம. கோ. இராமச்சந்திரன், ம. ரா. ராதா போன்ற சிக்கலான பெயருள்ளவர்களை அவர்களின் முழுப்பெயரில் அழைத்தால் என்ன (மகாத்மா காந்தியை முழுப்பெயரில் அழைப்பது போல). அனைவரையும் முழுப்பெயரில் அழைப்பதிலும் தவறில்லை (யாருடையது சிக்கலானவை என்பதில் பல குழப்பங்கள் எழலாம்).--Kanags \பேச்சு 00:30, 17 ஜூலை 2008 (UTC)

விரும்பிய இடத்தில் முழுமையான பெயரில் தலைப்பிடுவதில் எனக்குப் பெரிய மறுப்பில்லை. யாரும் மறுக்காத இடங்களில் முதல் எழுத்துகளைக் கொண்டே தலைப்பிடலாம். சுருக்கமாக இருக்கும். சிக்கலான பெயர் என்று ஒன்றும் இல்லை. இதுவரை நமக்குப் பழக்கப்படாத பெயர் என்று வேண்டுமானால் சொல்லலாம் :) சிறீலங்கா, இராமானுசன் தொடர்புடைய நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே என்னுடைய புரிதல் அமைந்ததால் அதைக் குறிப்பிட வேண்டியதாயிற்று. தமிழில் பெயர் எழுதக்கூடிய நிகழ்கால ramanujamகளையும் சேர்த்தே குறிப்பிட்டேன் :) --ரவி 01:40, 17 ஜூலை 2008 (UTC)