பேச்சு:கே. நல்லதம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Selvasivagurunathan m:, சிறிதளவு மட்டும் விக்கியாக்கம் செய்ய வேண்டிய இது போன்ற கட்டுரைகளுக்குத் துப்புரவு வார்ப்புரு இடுவதைத் தவிர்க்கலாம். ஏன் எனில், இவ்வார்ப்புருக்களை நீக்க நாட்கள் ஆகும் போது, தாங்கள் எழுதியதில் என்ன தவறு என்று ஆசிரியர்கள் குழம்புகிறார்கள். நேரடியாக விக்கியாக்கத்தைச் செய்து சுற்றுக் காவல் முடிந்ததாகக் குறிக்கலாம். --இரவி (பேச்சு) 08:42, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]

இக்கட்டுரையின் தொகுப்பைப் பார்த்தீர்களானால், கட்டுரையில் தேவையற்ற விக்கி நிரல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் தகவல் சட்டம் முழுமையாக ஒரே வரியில் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் புதியவர்கள் பலரின் கட்டுரைகளில் இவ்வாறு பெரும்பாலும் இடம்பெறுகின்றன. எவ்வாறு இவை சேர்க்கப்பட்டன என்பதை அறிய வேண்டும். மொழிபெயர்ப்புக் கருவியில் உள்ள தவறா?--Kanags \உரையாடுக 09:18, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]

@Kanags:மொழிபெயர்ப்புக் கருவி மூலம் மற்ற கட்டுரைகள் நன்றாக உள்ளன. ஒரு வேளை, MS Wordல் இருந்து வெட்டி ஒட்டினால் இது போன்ற சிக்கல்கள் வர வாய்ப்புண்டு. தொடர்ந்து பல கட்டுரைகளில் இது போல் சிக்கல் வந்தால் என்ன காரணம் என்று ஆய்வோம். --இரவி (பேச்சு) 09:50, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]

பேச்சுப் பக்கத்தில் நாம் தெரிவிக்கும் குறிப்புகளை வாசித்து, அதன்படி திருத்தம் செய்ய இயலாத நிலை (அவரின் தவறு இல்லைதான்) இருக்கும்போது, துப்புரவு வார்ப்புரு இடாமல் இருப்பது எவ்வாறு? வார்ப்புரு இருந்தால்தான் கவனிக்கப்பட வாய்ப்பு இருக்கும் எனும் கண்ணோட்டத்திலேயே வார்ப்புரு இட்டு வருகிறோம். இப்பணியில் ஈடுபட்டுள்ளோரின் பளுவையும் கவனத்தில் கொள்ளவேண்டும். குறைபாடான சுற்றுக்காவல் செய்தால், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:08, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]
செல்வாவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். குறிப்பாகப் பயிற்சி ஆசிரியர்களின் புதிய கட்டுரைகள் எதுவும் உடனடியாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லாத விடத்திலும், உடனடியாகத் திருத்தமுடியாதவிடத்திலும் வார்ப்புருவை இடுவது நல்லது. இதற்கு தானியங்கியைப் பயன்படுத்துவது பற்றியும் யோசிக்கலாம்.--Kanags \உரையாடுக 12:21, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]

@Selvasivagurunathan m:, நான் ஒரு பரிந்துரையாக, கோரிக்கையாகவே முன்வைத்தேன். எப்படியும் ஒரு நாள் துப்புரவு செய்யத் தான் போகிறோம். ஐந்து நிமிடங்களில் துப்புரவு செய்ய முடியும் என்றால் வார்ப்புரு போடாமல் துப்புரவை முடித்து விடலாம். 100 கட்டுரைகளுக்கு ஐந்தைந்து நிமிடங்கள் தேவையென்றால் என்ன செய்வது என்ற கேள்வியும் வருகிறது :) துணிவுடன் செயற்படுவதே அடிப்படை விக்கிநெறி. தவறுகள் இருந்தால் அடுத்த முறை திருத்திக் கொள்வோம். அதீத எச்சரிக்கை உணர்வு வேண்டாம். நன்றி. --இரவி (பேச்சு) 12:50, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]

தரம், பயிற்சித் திட்டத்தில் பங்களித்தவர்களுக்கு நம்பிக்கைத் தருதல், அத்தோடு துணிந்து செயற்படுதல் ஆகிய மூன்று கூறுகளையும் மனதிற்கொண்டு விக்கி குடும்பம் இந்த நிலையை எட்டியிருக்கிறது. ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் வெற்றியானது, அதன் மூலம் கிடைக்கப்பெற்ற கட்டுரைகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே. அதே நேரத்தில்... பங்களிப்பு தரும் ஆசிரியர்கள் குழப்பமில்லாமல், தயக்கமில்லாமல் நம்பிக்கையுடன் செயல்படுதலும் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியம் என்பதனையும் உணர்கிறேன். ஏனெனில் பயிற்சிப் பெற்றவர்களின் தொடர்பங்களிப்பே நீண்டகாலப் பலன்களை விக்கிப்பீடியாவிற்குத் தரும். இனிமேல், சிறிதளவு மட்டும் விக்கியாக்கம் தேவைப்படும் கட்டுரைகளில் வார்ப்புருவிற்குப் பதிலாக பகுப்பு:துப்புரவு தேவைப்படும் சூன் 2017 கட்டுரைகள் எனும் பகுப்பினை இடுகிறேன். ஆரம்பநிலைப் பயனர்கள் இதனை ஒரு இடையூறாக கருதமாட்டார்கள் என நம்புகிறேன்; விக்கியாக்கம் செய்யும் நண்பர்கள் வேலை முடிந்ததும் இந்த பகுப்பினை நீக்கிவிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:27, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._நல்லதம்பி&oldid=2305912" இருந்து மீள்விக்கப்பட்டது