பேச்சு:கேப்பாப்புலவு போராட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு செய்தி மாத்திரமே. கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. --~AntanO4task (பேச்சு) 02:00, 23 பெப்ரவரி 2017 (UTC)

கேப்பாப்புலவு போராட்டம் தொடர்பான கலைக்களஞ்சியக் கட்டுரை விக்கிபீடியாவில் இல்லாத நிலையில் இக்கட்டுரையை விக்கிபீடியா நடைக்கு மாற்றுவதன் மூலம் இதனை ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையாக்கிக்கொள்ளுவது நல்லது. நடையில் மாற்றங்களைச் செய்துவருகிறேன். மேலதிக தகவல்களையும் இக்கட்டுரையில் படிப்படியாகச் சேர்த்துக்கொள்ளலாம். விரைந்து நீக்கவேண்டியதில்லை என்பதே எனது கருத்தாகும். --மு.மயூரன் (பேச்சு) 08:12, 23 பெப்ரவரி 2017 (UTC)
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். --மு.மயூரன் (பேச்சு) 08:16, 23 பெப்ரவரி 2017 (UTC)
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் கட்டுரைக்கும் இதற்கும் பாரிய வேறுபாடுள்ளது. உலகில் பல பாகங்களிலும், தமிழர் வாழும் இடங்களிலும் போராட்டங்கள் இடம் பெறுகின்றன. வேலையில்லாப் போராட்டம், ஊழியது போராட்டம்? பல்கலைக்கழக மாணவர் போராட்டம் எனப் பல உள்ளன. ஆகவே, இது எந்தளவிற்கு கலைக்களஞ்சியக் கட்டுரையாகவுள்ளது என்பதை கட்டுரையில் பதிவு செய்ய வேண்டும். --~AntanO4task (பேச்சு) 06:21, 26 பெப்ரவரி 2017 (UTC)

இதை ஒரு காலக்கோடாக உருவாகிக் கொண்டிருக்கிறேன்.[தொகு]

ஓரிரு நாளில் இயலுமானவரை முடித்ததும் கலைக்களஞ்சியக் கட்டுரையாகிவிடும் என நம்புகிறேன்.

காலக்கோட்டில் தரப்படும் செய்திகளுக்கு உடனுக்குடன் மேற்கோள்களையும் தாருங்கள். காலம் கடந்த பின்னர் மேற்கோள்கள் தேடிப் பிடிப்பது சிரமமாகி விடும்.--Kanags \உரையாடுக 08:52, 23 பெப்ரவரி 2017 (UTC)