பேச்சு:கெம்மண்ணுகுண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னடத்தில் உள்ள பெயர் கெம்மண்ணுகுண்டி என்பதாகும். தமிழிலும் குண்டி என்னும் சொல் பள்ளமான பகுதியைக் குறிக்கும். குறிப்பாக, வாயகன்ற பாத்திரம் (இதனைக் குண்டா, குண்டான் என்றும் சொல்வர்), பழங்களில் காம்புள்ள பகுதியில் குழிந்து இருக்கும் பக்கம் (எ.கா. ஆப்பிள், மாம்பழம்) முதலியவற்றைக் குண்டி என்று சொல்வதுண்டு. குண்டி என்பது முதுகுக்குக் கீழே அமரும் பகுதியைப் பெரும்பாலும் குறிக்கப் பயன்படுவதால் கூச்சத்தால் இப்பொழுது அச்சொல்லை உடலில் அப்பகுதியைக் குறிக்கக்கூட தயக்கம் உண்டு. ஆனால் அது சரியான சொல்தான் :) --செல்வா 02:19, 15 ஏப்ரல் 2010 (UTC)

உங்கள் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவசியம் எனில் திருத்தம் செய்யப்படும் --செந்தில் ராஜேந்திரன்.

ஓ, குண்டாச்சட்டி என்று என் பாட்டி குறிப்பிட்ட ஏனம் நினைவுக்கு வருகிறது. இதற்கு இவ்வளவு ஆழமான பொருள் இருப்பதை இப்போதுதான் அறிந்தேன். இதன் பெயரைப் பயன்படுத்தி பஞ்ச தந்திரம் படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வந்துள்ளது. -- சுந்தர் \பேச்சு 12:34, 16 ஏப்ரல் 2010 (UTC)
மேலே பள்ளமான பகுதியைக் குறிக்கும் பொருளைத் தகுந்த சான்றுடன் குண்டி கட்டுரையில் சேர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 10:30, 13 மே 2010 (UTC)
சான்றுகளுடன் சேர்த்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 11:48, 30 நவம்பர் 2012 (UTC)