பேச்சு:கெப்லரின் கோள் இயக்க விதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்லரின் கோள் இயக்க விதிகள் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்விகள்:

  1. Johannes Kepler என்னும் சொல்லை யோகானசு கெப்லர் என மாற்றலாமா? யோஃகானெஸ் கெப்லர் என்பது துல்லியமான ஒலிப்பு. ஆனால் யோஃகானசு கெபல்ர் என்றாலே போதுமானது.
  2. கோள் இயக்க விதிகள் என்பதை விட கோள் உலா விதிகள் என்பது பொருத்தமாக இருக்கும். இயக்கம் என்பது விரிவான பல பொருள்களைச் சுட்ட வல்லது. கோள்கள் உலா வருவதைப் பற்றிய விதிகள் என்பதால், பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். மாற்றலாமா?--செல்வா 16:33, 9 டிசம்பர் 2008 (UTC)
இரண்டு பரிந்துரைகளுமே எனக்கு உவப்பானவை தாம். மற்றவர்களின் கருத்தையும் அறிந்து முடிவு செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 16:38, 9 டிசம்பர் 2008 (UTC)
நன்றி சுந்தர். ஆம் இன்னும் சிலர் கருத்து தெரிவித்தபின், ஏற்பு இருந்தால் மாற்றலாம்.

கோள் இயக்க விதிகள் என்றே நாம் படித்து வந்தோம். "kepler's laws of planetary motion" இயக்கம் கூடப் பொருந்தி வருகிறது மாதிரித் தெரிகிறது. ஏற்கனவே உள்ளதை ஏன் மாற்ற வேண்டும். உலா என்பது கூட இலக்கியச் சொல்லாக இருக்கிறது. தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் எவ்வாறு உள்ளதோ (நல்ல தமிழில் இருந்தால்) அவ்வாறு மாற்றினால் எனக்கு உடன்பாடு. ஜொகானஸ் கெப்லர் அல்லது யோகானசு கெப்லர் என மாற்றலாம். யோகானசு என்பதிலேயே துல்லியமில்லை. ஏன் ஃகா தேவை?--Kanags \பேச்சு 20:15, 9 டிசம்பர் 2008 (UTC)

(1) கோள் இயக்கம் என்பது கோள் எவ்வாறு இயங்குகின்றது (உள் இயக்கம், எரிமலைகள் தோன்றுதல்) போன்றவறைக் குறிக்கும். கோள்களின் நகர்ச்சியைக் குறிக்க தெளிவான சொல் வேண்டும். உலா என்பது மிகப்பொருத்தமான சொல். உலா என்பது "இலக்கிய" சொல் இல்லை. உலவுதல், உலா. சுற்றுலா போன்ற சொற்களில் வழக்கில் இருப்பது. உலகம் என்பதன் அடிப்படைச் சொல். உல் (சுற்று, சுழல்) -> உலவு-> உலா. உல் + அகம் = உலகம் (சுழல்வது, சுற்றுவது). Planetary motion என்பது கோளுலா, கதிரவனைச் சுற்றிவரும் கோளுலா. (2) Jahannes Kelpler என்பது யோஃகானஸ் கெப்லெர் என்றுதான் பலுக்க வேண்டும். எஃகு என்னும் சொல்லில் உள்ள ஒலியை ஏன் ஆளுதல் கூடாது? (3) யோஃகானசு கெப்லர் என்று ஸ் க்கும் மாறாக சு என்று எழுதுவதே சரியான தமிழ் முறை. ஈசுவரன், சுந்தரேசுவரர், சரசுவதி முதலான சொல்லாட்சிகள் நெடுங்காலமாக இருப்பது. ஏன் ஸ் என்று எழுதவேண்டும்? ஐதரசன் என்று தமிழ்ப்படுத்தி எழுதுவது போலவே, யோஃகானசு கெப்லர் என்று எழுதுவது நல்லது. தமிழ் முறையைப் பின்பற்றி எவ்வளவுக் கெவ்வளவு துல்லியம் பெறமுடியுமே அவ்வளவுக்களவு பெறுவோமே என்பதுதான் உந்துதல். எஃகு, அஃது, இஃது, பஃது (= பத்து, பகுதி என இரு பொருள்கள்) என்று பற்பல சொற்கள் உள்ளன (ஒரு முறை இதனை ஓரிடத்தில் பட்டியலிட்டுள்ளேன்). எனவே அவற்றில் வரும் ஆய்த ஒலியை நாம் ஏன் விடுதல் வேண்டும்? யோகானசு என்று எழுதினால் YOgaanasu` என்று படித்தால் தவறில்லை. கடைசி சு குற்றியலுகரமாக Su படிக்க வேண்டும். --செல்வா 21:54, 9 டிசம்பர் 2008 (UTC)

இயக்கம் என்பதற்கு நீங்கள் தந்துள்ள வரைவிலக்கணம் எனக்கு ஏற்புடையதல்ல. அது ஏன் கட்டாயம் உள் இயக்கமாக இருக்க வேண்டும். எங்கிருந்து இந்த விளக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்? Law of motion என்பது இயக்க விதி தானே? அது எப்படி உலா விதியாக முடியும். உலா என்பது எவற்றிலும் தங்கியில்லாது தன்னிச்சையாக உலாவுவது அல்லது உலாத்துவது. ஆனால் கோள்கள் தன்னிச்சையாக இயங்குவதில்லை. அவற்றின் இயக்கத்தைப் பற்றி அறிவதே இவ்விதிகள். mathematical laws that describe the motion of planets in the Solar System. நியூட்டனின் விதிகளுக்கு இயக்க விதிகள் என்பது போல் கெப்லரின் இயக்க விதிகள் என்றே கூறலாம்.

சூரியனுக்குக் கதிரவன் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளீர்கள். அறிவியல் (தகவல்) கட்டுரைகளில் சூரியன் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. கதிரவன் என்ற சொல்லாட்சி இங்கு தேவையற்றது. இது குறித்து முன்னரும் நாம் வேறோர் இடத்தில் உரையாடியுள்ளோம்.--Kanags \பேச்சு 08:17, 10 டிசம்பர் 2008 (UTC)

இயக்கம் என்பது விரிவான பொருள் தருவது. Motion என்பதற்கு நகர்ச்சி என்னும் சொல் சிறந்தது. Planetary motion, orbital motion என்று வருமிடங்களில் உலா என்னும் சொல் பொருத்தமானது. நியூட்டனின் இரண்டாம் விதி என்னும் கட்டுரையைப் பாருங்கள், அங்கே நகர்ச்சி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இயங்குதல் என்பது எவ்வாறு ஒன்று வேலை செய்கின்றது, பல உறுப்புகளுடன் எவ்வாறு ஒத்து, கூட்டாக பொருந்தி தொழிற்படுகின்றது போன்ற பல விரிவான பொருட்களைச் சுட்டும். உலா என்பது "சுற்றி" வருவதை, நகர்வதை என்பதை அடிப்படையாகக் கொண்ட சொல். அதில் தன்னிச்சையாக என்னும் பொருள் சில இடங்களில் வரும் என்பது உண்மை, ஆனால் சுற்றிவருதல் என்பதே அடிக் கருத்து. சுற்றுப்பாதையில் நகர்வதற்கு உலா என்பது சரியான சொல். கோள் உலா விதிகள் என்பது சரியான தலைப்பு என்பதால் பரிந்துரைத்தேன். வேண்டாம் எனில் மாற்றவேண்டாம். உலா என்னும் சொல், தெளிவாக சுற்றுப்பாதை நகர்ச்சியைக் குறிக்கும். இயக்கம் என்பது வேறு பலவற்றையும் குறிக்கும் (நகர்ச்சியையும் குறிக்கும்). அடுத்து சூரியன் - கதிரவன். என் நிலைப்பாடு இரு சொற்களையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் Sun, Helios, Solar என்னும் சொற்கள் பயன்பாட்டில் இருப்பது போல, தமிழிலும் சில சொற்கள் இருக்கலாம். தமிழில் உள்ள 20-30 சொற்களையும் பயன்படுத்தலாம் என்று நான் சொல்ல வில்லை, ஆனால் இடம் கருதி ஒன்றிரண்டு அல்லது மூன்று சொற்கள் பயன்படுத்தலாம். எல்லா இடங்களிலும் சூரியன் என்பதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது வேண்டாம் என நினைக்கிறேன். குறிப்பாக கதிரொளி மின்கலம் என்பது சரியான சொல்லாட்சி. சூரியன் மின்கலம் என்பது பொருள் துல்லியம் காட்டா சொல்லாட்சி (கதிரவனின் ஒளியா, வெப்பமா, வேறு ஏதுமா என்னும் சுட்டு இல்லாதது). அதே போல பூமி, புவி, நிலம் ஆகிய சொற்களையும் Earth என்பதற்குப் பயன்படுத்தலாம். ஆங்கிலத்திலும் Earth, Land (ex. Land satellite), terra (terrestrial), Geo ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். நாமும் ஏன் ஒருசில சொற்களைப் பயன்படுத்தலாகாது? இவை பற்றி நானும் முன்னர் ஓரிரு முறை உரையாடியுள்ளேன். --செல்வா 14:22, 10 டிசம்பர் 2008 (UTC)

உரை திருத்தம்[தொகு]

சில உரை திருத்தம் செய்துள்ளேன். சரிபார்க்கவும். மூன்று விதிகளையும் வேறுவிதமாக, எளிமைப்படுத்தி மொழி பெயர்த்துள்ளேன். ஏற்புடையதா எனக் கூறுங்கள். மூன்றாவது விதியில் விடுபட்டு இருந்த ஒரு கூற்றையும் சேர்த்துள்ளேன். --செல்வா 17:04, 9 டிசம்பர் 2008 (UTC)